Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்தியாவில் முழு கல்வியறிவு பெற்ற சிறந்த 3 மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கேரளா லிஸ்டிலேயே இல்லையாம்!
கல்விதான் ஒருவரை வாழ்க்கையை வெற்றியை நோக்கி வழிநடத்தும் ஒளியாகும். கல்வி ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமல்ல ஒரு நாட்டின் வளர்ச்சியையும் தீர்மானிக்கிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியா பல்வேறு துறைகளில் உலகளவில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக உலகளவில் கல்வித் துறையில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தையும், அதேசமயம் கடினமான சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது. கல்வித்துறையில் முன்னேற அரசாங்கங்கள் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறது.
இந்தியாவில் பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் கல்வியறிவில் பின்தங்கி இருந்தாலும் சில மாநிலங்கள் உலகளாவிய கல்வியறிவு நிலைகளை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. ஒரு இந்திய மாநிலம் 95% கல்வியறிவு நிலை வரம்பை எட்டினால் அல்லது அதை மீறினால், கல்வி அமைச்சகத்தால் முழு கல்வியறிவு பெற்ற மாநிலம் என்று குறிப்பிடப்படுகிறது.

ஒரு மாநிலம் இந்த மைல்கல்லை அடைவது என்பது, இந்தியாவில் தொடர்ச்சியான கல்வி பிரச்சாரங்கள், சமூக ஈடுபாடு மற்றும் அரசாங்க நடவடிக்கைகளின் வெற்றிக்கான எடுத்துக்காட்டுகளாகும். ஜூன் 2025 நிலவரப்படி, ஒரு சில இந்திய மாநிலங்கள் முழு கல்வியறிவு பெற்றுள்ளன. ஒன்றிய அரசின் Prasar Bharati செயலியின்படி, இந்தியாவில் முழு கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிசோரம்
இந்தியாவின் முதல் முழுமையான கல்வியறிவு பெற்ற மாநிலமாக மிசோரம் உள்ளது. 2025 ஆம் ஆண்டில் 98.2 சதவீத கல்வியறிவுடன் 95 சதவீத அளவீட்டை தாண்டிய முதல் மாநிலம் மிசோரம்தான். கல்வி சீர்திருத்தங்கள், சமூக இயக்கங்கள் மற்றும் கல்வியறிவில் இலக்கு வைத்து நடத்தப்பட்ட பிரச்சாரங்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் இந்த வடகிழக்கு இந்திய மாநிலம் இந்த மாபெரும் சாதனையை செய்துள்ளது. இந்த மாநிலத்தின் வெற்றியும், சாதனையும் பிற மாநிலங்களுக்கு ஒரு உதாரணமாகும்.
கோவா
கோவாவின் வலுவான கல்வி பாரம்பரியமும், கல்வியில் அவர்களின் முதலீடும் 95 சதவீத கல்வியறிவு என்ற இமாலய இலக்கை அடைய அவர்களுக்கு உதவியது. மாநிலத்தின் புவியியல் அமைப்பும், அளவும், நகரமயமாக்கல் மற்றும் ஒருங்கிணைந்த கல்வியில் கவனம் செலுத்துதல் ஆகியவை கல்வித் துறையில் அதன் வெற்றியை உறுதி செய்துள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் தரமான கல்வி வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தி, முழுமையான கல்வியறிவு விகிதத்தை அடைந்த இரண்டாவது இந்திய மாநிலமாக கோவா உள்ளது.
திரிபுரா
2025 ஆம் ஆண்டில் திரிபுரா 95.6 சதவீத கல்வியறிவு விகிதத்தை எட்டியுள்ளது, இதற்கு அரசின் உல்லாஸ் திட்டம் வயது வந்தோர் கல்வி, சைபர் கல்வியறிவு மற்றும் சமூகத்தின் கூட்டு முயற்சி போன்றவையே காரணம். 1961 இல் 20.24 சதவீத கல்வியறிவு மட்டத்திலிருந்து இன்று இந்தியாவில் முழு கல்வியறிவு பெற்ற மூன்றாவது மாநிலமாக மாறியுள்ளது மிகப்பெரிய மாற்றமாகும். சிறந்த கல்விக் கொள்கைகள் மற்றும் பொது மக்களின் முயற்சி சமூகத்தில் எப்படிப்பட்ட மாற்றத்தை உருவாக்கும் என்பதற்கு திரிபுரா ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். முழு கல்வியறிவு பெற்ற மூன்றாவது இந்திய மாநிலம்மான திரிபுரா இந்திய கல்வி வரலாற்றில் ஒரு புரட்சிகரமான அத்தியாயமாகும்.
முழு கல்விறிவு பெற்ற இந்த இந்திய மாநிலங்களின் பட்டியல், அர்ப்பணிப்புள்ள முயற்சிகள், சமூக பங்கேற்பு மற்றும் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் மூலம் உலகளாவிய எழுத்தறிவை அடைய முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த முழு எழுத்தறிவு பெற்ற இந்திய மாநிலங்களின் சாதனை இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு உத்வேகமாகும்.



Click it and Unblock the Notifications

