Latest Updates
-
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க
இந்தியாவில் அதிக கடன் வாங்கியுள்ள டாப் 10 மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? தமிழ்நாட்டின் கடன் எவ்வளவு தெரியுமா?
Top 10 States With Most Debt in India: நமது இந்தியா பல்வேறு மாநிலங்களில் ஒன்றிணைந்த ஒரு ஒன்றியமாகும். மாநிலங்களின் கூட்டமைப்பாக இருப்பதால், இந்தியா அதன் மாநிலங்கள் தங்கள் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு வழிகளில் பணம் திரட்ட அனுமதிக்கிறது.
அதில் முக்கியமான ஒன்று கடன் வாங்குவது. கடன் வாங்குவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தாலும் அதிகமாக கடன் வாங்குவது மாநிலத்தின் பொருளாதாரத்தையும் அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கலாம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்குச் செலவிடுவது முதல் நிதித் தவறான மேலாண்மை வரை பல்வேறு காரணங்களால் மாநிலங்களின் கடன் சுமை அதிகமாக உள்ளது. இந்தியாவில் அதிக கடனுடன் இருக்கும் மாநிலங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மகாராஷ்டிரா
இந்திய மாநிலங்களில் அதிக வருமானம் ஈட்டும் மாநிலமாக மகாராஷ்டிரா இருந்தாலும், அதிக கடன் உள்ள மாநிலமாகவும் மகாராஷ்டிராதான் உள்ளது. சமீபத்திய அறிக்கைகளின்படி, மகாராஷ்டிராவின் தற்போதைய கடன் ₹7 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. மும்பை மெட்ரோ, கடலோர சாலைத் திட்டங்கள் மற்றும் தொழில்துறை மண்டலங்களில் முதலீடுகள் போன்ற மெகா-உள்கட்டமைப்புத் திட்டங்களால் மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது. அதிக கடன் இருந்தபோதிலும், மகாராஷ்டிரா ஜிஎஸ்டி, கலால் வரி மற்றும் பிற வரிகள் மூலம் தொடர்ந்து பெரும் வருமானத்தை ஈட்டுகிறது.
உத்தரப் பிரதேசம்
இந்தியாவில் உத்தரப் பிரதேசம் அதன் வருமானத்திற்கும், கடனுக்கும் துளியும் சம்பந்தமில்லாத மாநிலமாகும், உத்திர பிரதேசத்திற்கு சுமார் ₹6.5 லட்சம் கோடி கடன் உள்ளது. அதிக மக்கள் தொகை காரணமாக, இந்த மாநிலம் சுகாதாரம், கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு நிறைய செலவிட வேண்டியுள்ளது. விவசாயக் கடன் தள்ளுபடிகள் மற்றும் பொது உள்கட்டமைப்பு விரிவாக்கத் திட்டங்கள் கடன் அளவை அதிகரித்தன. இருப்பினும் தங்கள் வருமானத்தை அதிகரிக்க அம்மாநிலம் போராடி வருகிறது.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கம் சுதந்திரம் பெற்ற காலம் முதலே அதிக கடன் சுமை கொண்ட ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது, தற்போதைய கடன்கள் ₹5.5 லட்சம் கோடியை நெருங்குகின்றன. நிதி மேலாண்மை குளறுபடிகள் மற்றும் குறைந்த வருவாய் ஈட்டல் ஆகியவை கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் மாநிலத்திற்கு பெரும் தடைகற்களாக உள்ளன. கடனைத் திருப்பி செலுத்தும் செயல்முறை, மானியங்களுக்கான அரசாங்க செலவுகள் மற்றும் 'கன்யாஸ்ரீ' மற்றும் 'ரூபஸ்ரீ' திட்டங்கள் போன்ற சமூகத் திட்டங்களும் அதன் நிதிச் சுமையில் கணிசமான பகுதியைக் கொண்டுள்ளன.
தமிழ்நாடு
தமிழ்நாட்டின் கடன் தொகை சுமார் ₹5.7 லட்சம் கோடி ஆகும், இந்தியாவின் அதிகபட்ச கடன்களில் இதுவும் ஒன்றாகும். அதிகரித்து வரும் புதிய கடன், நலத்திட்டங்களுக்கான அதிக செலவு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குதல் மற்றும் பொதுப் போக்குவரத்திற்கு வழங்கப்படும் பிற கட்டணங்கள் ஆகியவற்றால் இந்த கடன் சுமை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு தொழில் துறையில் மாபெரும் சக்தியாக விளங்குகிறது மற்றும் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உள்ளது, ஆனால் அதன் வருவாய் எப்போதும் அதன் அதிக செலவினங்களை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் ₹4.5 லட்சம் கோடி அளவுக்கு கடனை குவித்து வைத்துள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு 'சிரஞ்சீவி யோஜனா' போன்ற சமூக நலத் திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது, இது இலவச மருத்துவ காப்பீடு மற்றும் விவசாயக் கடன்களுக்கான தள்ளுபடிகளை வழங்குகிறது. ராஜஸ்தான் மற்ற மாநிலங்களை விட குறைவான தொழில்மயமாக்கலைக் கொண்டுள்ளது, அதனால் குறைந்த வருவாயையே ஈட்டுகிறது.
மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தின் கடன் ₹3.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. இந்த கடனில் பெரும்பகுதி கிராமப்புற மேம்பாடு, நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் மானியங்களுக்கான செலவுகளால் ஏற்படுகிறது. முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தொழில்களை விரிவுபடுத்துவதற்கும் மாநிலம் தொடர்ந்து முயற்சித்து வந்தாலும், அதிகரித்து வரும் செலவினங்களால் போதுமான வருவாய் திரட்ட மிகவும் சிரமப்பட்டு வருகிறது.
ஆந்திரப் பிரதேசம்
பல மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் இப்போது ஆந்திரப் பிரதேசத்தின் கடன் சுமையை வெகுவாக அதிகரித்துள்ளன. இலவச மின்சாரம், ஓய்வூதியம் மற்றும் ஏழைகளுக்கான வீட்டுவசதி போன்ற நலத்திட்டங்களுக்கான பெரும் செலவுகள் காரணமாக மாநிலத்தின் கடன் ₹4 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2014 இல் ஆந்திரப் பிரதேசமும் தெலுங்கானாவும் பிரிக்கப்பட்டது அதன் பொருளாதாரத்தை மேலும் பாதித்து அதன் கடன் சுமையை அதிகரித்தது.
கர்நாடகா
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவின் கடன் சுமை ₹3.7 லட்சம் கோடியை நெருங்குகிறது. உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கான செலவினங்களுக்கு மாநில அரசு அதிக செலவு செய்து வருகிறது. "அண்ணா பாக்யா போன்ற பல திட்டங்களுக்கான மானியங்கள் மற்றும் கடனை திருப்பிச் செலுத்துதல்கள் போன்றவற்றின் விளைவாகவே கடன் அதிகரித்து வருகிறது. ஐடி துறை மற்றும் ஜிஎஸ்டி வசூல் தேவையான வருவாயை அதிகரித்தாலும், நிதிப் பற்றாக்குறை இன்னும் இங்கே கவலையளிக்கும் ஒன்றாக உள்ளது.
பஞ்சாப்
பஞ்சாபின் மொத்த கடன் ₹3 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. விவசாயிகளுக்கு பல ஆண்டுகளாக இலவச மின்சாரம் வழங்குதல், கடன் தள்ளுபடிகள் மற்றும் ஓய்வூதியம் வழங்குதல் ஆகியவை மாநிலத்தின் அதிக கடன் விகிதத்திற்குக் காரணமாக உள்ளது. மேலும், பஞ்சாப் விவசாயத்தை ஆழமாகச் சார்ந்திருப்பதும், தொழில்துறை வளர்ச்சி குறைவாக இருப்பதும் வருவாய் ஈட்டுவதைக் குறைத்து, கடனை திருப்பிச் செலுத்தும் செயல்முறையைத் தடுக்கிறது.
பீகார்
இந்தியாவின் வளர்ந்து வரும் மாநிலமான பீகார், $2.8 லட்சம் கோடி கடனைக் கொண்டுள்ளது. சமூகத் திட்டங்களுக்கான செலவு, தொழில் வளர்ச்சி குறைபாடு மற்றும் மத்திய மானியங்களை அதிகமாகச் சார்ந்திருத்தல் ஆகியவற்றால் மாநிலத்தின் கடனை அதிகரிக்கிறது. அதிக தொழில்களை மாநிலத்திற்குள் ஈர்க்கும் பீகாரின் முயற்சிகள் சிறிதளவு பலன்களை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது, ஆனால் மெதுவான வருவாய் வளர்ச்சி மற்றும் அதிகரித்த செலவினங்கள் அதன் நிதிகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
