இந்தியாவில் உள்ள டாப் 10 பணக்கார கோவில்கள் எது தெரியுமா?

உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல பணக்கார கோயில்கள் இந்தியாவில் உள்ளன. இந்த கோவில்களின் நிகர மதிப்பு கோடிக்கணக்கான ரூபாய்கள் மற்றும் சில பெரிய நிலங்கள், தங்கம் மற்றும் விலையுயர்ந்த நவரத்தின கற்கள் கூட சொந்தமாக உள்ளது. இந்தியாவில் உள்ள சில பணக்கார கோவில்களை பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

1.ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில்

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோயில் பெட்டகத்தில் உலகின் பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய சொத்துக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோயிலில் பல ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்ட ரகசிய அறைகள் திறந்தபோது தான் இந்த கோயில் பணக்கார கோயிலாக மாறியது. இன்னும் சில அறைகள் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில் அதில் உள்ள சொத்துக்களின் மதிப்பு பல லட்சம் கோடிகளை தாண்டும் என்று கூறப்படுகிறது. இந்த கோவிலின் உண்மையான சொத்து மதிப்பு எவ்வளவு என்று இதுவரை யாருக்கும் தெரியாது என்றாலும் இந்தியாவில் அதிக சொத்துக்கள் கொண்ட கோவிலின் பட்டியலில் இந்த கோயில் தான் முதலிடத்தில் உள்ளது.2011 ல் திறக்கப்பட்ட ரகசிய அறை ஏ வில் இருந்த தங்கம் உள்ளிட்டவைகளின் மதிப்பு தான் இது. இதுவரை பி ஆறை திறக்கப்படவில்லை.

2. திருப்பதி

ஆந்திராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஏறக்குறைய 80,000 வரையிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருக்கும் இக்கோவிலில் தினமும் உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ.4.5 கோடி கிடைக்கிறது. இந்த கோவிலில் சொத்து மதிப்பு ரூ.2.5 லட்சம் கோடிக்கு அதிகம் என சொல்லப்படுகிறது. இதில் 10 டன் தங்கம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது . இது 2வது பனக்கார கோவிலாகும்..

top 10 richest temples in india padmanabhaswamy temple to tirupati balaji temple

3. வைஷ்ணவ தேவி கோவில்-ஜம்மு

இந்த கோவில் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவிலாகும். அதிக சொத்து மதிப்பையும் கொண்ட கோவில்களில் ஒன்றாகவும் உள்ளது காஷ்மீர் மாதா வைஷ்ண தேவி கோவில். இந்த கோவிலுக்கு வருடத்திற்கு ரூ.500 கோடி வருமானம் வருகிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக இருக்கும் இந்த குகை கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தின் மதிப்பு மட்டும் 1.2 டன்னுக்கும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மூன்றாவது பணக்கார கோவில் காஷ்மீரில் உள்ள இந்த வைஷ்ணவி தேவி கோவில் ஆகும்.

4.மகாராஷ்டிராவில் உள்ள சித்தி விநாயகர் கோவில்:

இந்தியாவில் உள்ள பணக்கார கோவில்களில் ஒன்றாகும். மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலின் சொத்து மதிப்பு சுமார் ரூ.90,000 கோடிக்கும் அதிகமாகும். தங்கம், தங்கம் சிலை, வெள்ளி, வைரம் உள்ளிட்ட பொருட்களும் இதில் அடங்கும். அடுத்ததாக மும்பை சித்தி விநாயகர் கோயில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த புயலுக்கு 45 கோடி முதல் 120 கோடி வரை காணிக்கை மூலம் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் வருவதாக கூறப்படுகிறது

5. ஷீரடி சாய்பாபா மந்திர், மகாராஷ்டிரா

உலகில் வருடம் முழுவதும் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்களில் ஒன்று ஷீரடி சாய்பாபா கோவில். இத்தாலி நாட்டு மார்பிளால் ஆன பளிங்கு கல்லால் செல்லப்பட்ட சாய்பாபாவின் சிலை பல லட்சம் பக்தர்களை ஈர்த்து வருகிறது. இந்த கோவிலின் சொத்து மதிப்பு ரூ.2000 கோடி என சொல்லப்படுகிறது. சீரடி சாய்பாபா கோயில் இந்த பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த கோவிலின் அறக்கட்டளையில் வருடத்திற்கு ரூ.360 கோடி நன்கொடையாக வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

6. புரி ஜெகந்நாதர் கோயில்

ஸ்ரீ ஜெகநாத பூரி கோயிலின் ஆண்டு வருமானம் சுமார் 150 கோடி. மேலும், கோயிலுக்கு ஆண்டுதோறும் ரூ.1.72 கோடி நன்கொடையாக வருகிறது.இந்தியாவின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கும் புரி ஜெகந்நாதர் கோவிலில் தினமும் சராசரியாக 35,000 க்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த கோவிலின் சொத்து மதிப்பு ரூ.150 கோடி என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கோவிலின் கருவூலங்களில் உள்ள ஏழு அறைகளில் இரண்டு மட்டுமே திறக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டுள்ளது. மற்ற அறைகள் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளன. இவற்றில்தான் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தங்கம், வெள்ளி நகைகள் சேமித்து வைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

7. குருவாயூர் கிருஷ்ணன்

காக்கும் கடவுள் பத்து அவதாரங்கள் எடுத்தாலும் அதில் அனைவருக்கும் பிடித்து கிருஷ்ணன் அவதாரம். பிறந்தது முதல் கீதை உபதேசம் வரை அவரின் லீலைகள் பல. அப்படி குட்டி கிருஷ்ணராக சில லீலைகளை செய்தவராக கேராளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் குருவாயூரப்பனாக காட்சி தருகின்றார். கிருஷ்ணரின் தனிப்பெரும் சிறப்பு மிக்க குருவாயூர் ஸ்ரீ கிருணன் கோயில் பணக்கார கோவில்களில் ஒன்று

8. பழனி முருகன் கோவில்

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவில் தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் பெறும் கோவிலாக விளங்குகிறது. பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை, பிரசாதம் விற்பனை என ஆண்டுக்கு சுமார் 33 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. இந்தக் கோயில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் தலத்தின் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்தத் தலத்தின் மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார். உற்சவர் முத்துகுமாரசாமி. இந்த கோவிலில்தான் தமிழகத்தில் முதன்முதலாக பக்தர்கள் வேண்டுதல்கள் நிமித்தம் அலகு குத்துதல், காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பழனி முருகன் மலைக்கோயில், தரை மட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 690 படிகள் கடந்து கோயிலுக்கு செல்ல வேண்டும்.

9. காசி விஸ்வநாதர் ஆலயம், வாரணாசி

இந்தியாவில் புண்ணிய தலங்களில் தலைமை தலமாக உள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். இரண்டு தங்கத்தால் ஆன கோபுரங்களைக் கொண்ட இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக இருக்கும் இக்கோவில் வருடத்திற்கு 4 முதல் 5 கோடி வருமானம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

10. பஞ்சாபின் பொற்கோயில்

பஞ்சாப் மாநிலத்தின், அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ள குருத்துவார் ஆகும். இதனை பொதுவாக பொற்கோயில் (Golden Temple) என அழைப்பர். சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். இந்த கோயில் இந்தியாவின் 10 வது பணக்கார கோவில்லாகும். சீக்கியர்களின் நான்காம் குருவான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவில் அம்ருத்சர் (பஞ்சாப்) நகரில் அமைந்துள்ளது. 1585ம் ஆண்டு டிசம்பரில் கட்டுமானம் தொடங்கப்பட்டு 1604ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிக்கப்பட்டது. இதன் கட்டுமானத்தின் முக்கிய நோக்கம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் அனைத்து மதங்களையும் சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் சமமாக வந்து கடவுளை வழிபட ஒரு இடத்தை உருவாக்குவதாகும். 1604 ஆம் ஆண்டில், குரு அர்ஜுன் சிங் சீக்கிய புனித நூலான ஆதி கிரந்தத்தை முடித்து குருத்வாராவில் அதை நிறுவினார். சீக்கியர்கள் இதை பக்தியுடன் ஹர்மந்திர் சாஹிப் என அழைக்கிறார்கள்.

Story first published: Friday, April 26, 2024, 13:29 [IST]
Desktop Bottom Promotion