Latest Updates
-
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆண்களே! உங்கள் விந்தணு ஆரோக்கியமா இருக்கானு தெரிஞ்சிக்கணுமா? இந்த அறிகுறிகளை செக் பண்ணி பாருங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்...
இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
இந்தியா உலகளவில் பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது என்று கூறப்பட்டாலும் அது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உள்ளடக்கியதாக இல்லை என்பதே உண்மை. இந்தியாவின் பல மாநிலங்கள் இப்போதும் வறுமையின் பிடியில்தான் உள்ளது.
இந்தியாவில் சில பணக்கார மாநிலங்களைப் போலவே சில ஏழை மாநிலங்களும் உள்ளன என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் எந்தெந்த மாநிலங்கள் வறுமையில் சிக்கித் தவிக்கின்றன என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா?

NITI ஆயோக்கின் பல பரிமாண வறுமைக் குறியீட்டின் (MPI) படி, பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களாக உருவெடுத்துள்ளன. வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் சதவீதத்தின் அடிப்படையில் இந்த தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவின் வறுமையான மாநிலங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாகும். சத்தீஸ்கர் மக்கள் தொகையில் 1/3 பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் 93% மக்கள் ஏழைகள். மாநில வருவாயைப் பற்றி நாம் பேசும்போது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த எஃகில் 15% சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து வருகிறது. இந்த மாநிலத்தின் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் நிலை 39.93% ஆகும்.
ஜார்கண்ட்
இந்தியாவின் இரண்டாவது ஏழ்மையான மாநிலம் ஜார்கண்ட். இந்த மாநிலத்தின் வறுமை நிலை சுமார் 42.16 சதவீதமாக உள்ளது. ஜார்கண்டின் சமூகக் குறிகாட்டிகளான கல்வியறிவு, சேர்க்கை, குழந்தை இறப்பு மற்றும் குழந்தை ஊட்டச்சத்து ஆகியவை அகில இந்திய சராசரியை விட குறைவாக உள்ளன. முன்னதாக ஜார்கண்ட் 2000 வரை பீகாரின் ஒரு பகுதியாக இருந்தது.
மணிப்பூர்
மணிப்பூர் இந்தியாவின் மூன்றாவது ஏழ்மையான மாநிலமாகும், இது 1972 இல் உருவாக்கப்பட்டது. மணிப்பூரில் வறுமைக் கோட்டுக்கு கீழ் சுமார் 36.89% மக்கள் வாழ்கிறார்கள். மின்சாரம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பற்றாக்குறை இந்த மாநிலத்தின் தொழில்துறை பின்தங்கிய நிலைக்கு காரணமாகிறது. மணிப்பூரின் சமூக மற்றும் பொருளாதார அமைப்பு இந்தியாவிலேயே மிகக் குறைவான ஒன்றாகும்.
அருணாச்சல பிரதேசம்
தொடர்ந்து சீன ஆக்கிரமிப்புக்கு ஆளாகி வரும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் நான்காவது ஏழை மாநிலமாகும். இந்த மாநிலத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் 34.67% ஆக உள்ளனர். இது வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலமான இது 1987 இல் உருவாக்கப்பட்டது.
ஒடிசா
ஒடிசாவில் 29.04% மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். ஒடிசாவில் பாதி மக்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் மற்றும் பெண் கல்வியறிவு தேசிய சராசரியை விட மிகக் குறைவாக உள்ளது. ஆறு முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகபட்சமாக ஒடிசாவில் பள்ளிக்கு செல்வதில்லை.
பீகார்
இந்தியாவின் வறுமையான மாநிலம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது பீகார்தான். பீகார் மக்கள் தொகையில் பாதி பேர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். இந்த மாநிலத்தில் வறுமை நிலை 33.74% ஆக உள்ளது. வறுமையின் பின்னணியில் உள்ள காரணங்கள் நிறுவன மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி இல்லாமை அனைத்திற்கும் மேலாக கல்வியறிவு இல்லாததாகும்.
மத்திய பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் நிலை 36.07% ஆக உள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பட்டியல் பழங்குடியினர் (ST) வசிக்கும் மாநிலமாக மத்தியப் பிரதேசம் உள்ளது, மேலும் இது பெரும்பாலும் இந்தியாவின் பழங்குடியின மாநிலம் என்று அழைக்கப்படுகிறது. வனப்பகுதிகளில் உள்ள கிராமப்புற ஏழைகள், குறிப்பாக பழங்குடி மக்கள், வாழ்வாதாரம், வருமானம் மற்றும் வேலைவாய்ப்பிற்காக வன வளங்களை நம்பியுள்ளனர்.
உத்தரப்பிரதேசம்
உ.பி.யில் வறுமைக்கோட்டுக்கு கீழ் 37.08% மக்கள் வசிக்கின்றனர். இது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் அதேசமயம் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாகும். உத்தரப் பிரதேசத்தில் வறுமை, நோய் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. பல பெண்கள் தங்கள் பதின்ம வயதிலேயே திருமணம் செய்துகொள்வதே இதற்குக் காரணம். இந்தியாவிலேயே ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது.
கர்நாடகா
கர்நாடகாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் மக்களின் எண்ணிக்கை 13.2% ஆகும். கர்நாடகாவில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு கடுமையாக உள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப நகரமான பெங்களூர் கர்நாடகாவில் இருந்தும் அதன் வளர்ச்சி மற்றும் வசதிகளை மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரப்புவதில் அரசு தவறிவிட்டது. குறிப்பாக வட கர்நாடகாவில் வளர்ச்சி என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.



Click it and Unblock the Notifications












