Latest Updates
-
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க.. -
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா? -
World Hepatitis Day 2026: இந்த அறிகுறி இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது ஹெபடைடிஸின் எச்சரிக்கை அறிகுறி! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்.. உஷார்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
உலகில் வறுமையால் மோசமான நிலையில் டாப் 10 நாடுகள் இதுதான்... இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
Top 10 Poorest Countries in the World: உலகெங்கிலும் பெரும்பாலான நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை எதுவென்றால் அது வறுமைதான். அனைத்து நாடுகளிலுமே ஏழைகளுமே, வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் முற்றிலுமே வறுமையில் வாடும் சில நாடுகள் உலகில் இருக்கத்தான் செய்கின்றன.
சுத்தமான நீர், உணவு, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பெற முடியாமல் இந்த நாடுகளில் மக்கள் தவிக்கின்றனர். 2025 ஆம் ஆண்டில் பல நாடுகளில், குறிப்பாக ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் அதிக வறுமை விகிதங்கள் நீடிக்கின்றன.

இந்த நாடுகள் போர், அரசியல் அமைதியின்மை, வேலையின்மை, போதுமான உள்கட்டமைப்பு இல்லாமை மற்றும் இயற்கை பேரழிவுகளால் போராடுகின்றன. இவை மக்கள் இங்கு வாழ்வதை மிகவும் கடினமாக்குகின்றன. இந்த பதிவில் உலகில் ஏழ்மையால் வாடும் நாடுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
தெற்கு சூடான்
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தெற்கு சூடான், இங்கு 82% மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். பல ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப் போர், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் உள்கட்டமைப்பு இல்லாமை காரணமாக தெற்கு சூடான் உலகிலேயே அதிக வறுமை விகிதத்தைக் கொண்டுள்ளது. இங்குள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர், ஆனால் வெள்ளம், உள்நாட்டு மோதல்கள் மற்றும் குடிமக்களின் இடப்பெயர்ச்சி ஆகியவை மக்கள் வாழ்வதைக் கடினமாக்கியுள்ளன.
ஈக்வடோரியல் கினியா
இந்த நாட்டில் 77% மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். போதுமான எண்ணெய் வளம் இருந்தபோதிலும், ஊழல் மற்றும் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு காரணமாக ஈக்வடோரியல் கினியா அதிக வறுமையை எதிர்கொள்கிறது. இயற்கை வளங்களிலிருந்து கிடைக்கும் பணம் இங்கு பொது மக்களைச் சென்றடையவில்லை, இதனால் பெரும்பாலான மக்களுக்கு கல்வி, சுகாதாரம் அல்லது வேலைகள் கிடைப்பதில்லை.
மடகாஸ்கர்
மடகாஸ்கரில் 75% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர். மடகாஸ்கரின் வறுமை அரசியல் நெருக்கடிகள், காடுகளை அழித்தல், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் பலவீனமான பொருளாதாரம் ஆகியவற்றால் ஏற்படுகிறது. இங்கு பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர், ஆனால் காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை வளங்களின் பற்றாக்குறை மக்கள் வாழ்வதை மிகவும் கடினமாக்கியுள்ளது.
புருண்டி
புருண்டியில் 74% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இங்கு நிலவும் நீண்ட கால உள்நாட்டு மோதல், அரசியல் பதற்றம் மற்றும் மெதுவான பொருளாதார வளர்ச்சி காரணமாக புருண்டி தீவிர வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி, சுத்தமான நீர் அல்லது சுகாதார வசதிகள் காரணமாக கிராமப்புற மக்கள் வறுமையில் வாழ்கின்றனர்.
Central African Republic
கால் நூற்றாண்டுக்கும் மேலாக இங்கு நடந்து வரும் உ,ள்நாட்டு மோதல்களும் வன்முறைகளும் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் பொருளாதாரத்தை அழித்துவிட்டன. இதனால் 68% மக்கள் இங்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். அடிப்படை சேவைகளை வழங்கவே அரசாங்கம் கடுமையாக போராடுகிறது, மேலும் பல குடிமக்கள் உயிர்வாழ மற்ற நாடுகளின் உதவியை நம்பியுள்ளனர்.
ஹோண்டுராஸ்
வட அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் 64% மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். ஊழல், வன்முறை மற்றும் வேலையின்மை காரணமாக ஹோண்டுராஸ் அதிக வறுமையை எதிர்கொள்கிறது. பொதுமக்கள் உணவு மற்றும் கல்வியை பெற முடியாமல் தவிக்கின்றனர். சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகளும் ஏழை மக்களின் வாழ்க்கையை கடினமாக்குகின்றன.
ஜாம்பியா
ஜாம்பியாவில் இயற்கை வளங்கள் அதிகம் இருந்தாலும், அரசாங்கமும், பொருளாதார மேலாண்மை சரியில்லாதது மற்றும் வேலையின்மை காரணமாக ஜாம்பியா இன்னும் வறுமையை எதிர்கொள்கிறது. இங்கு 60% மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். பணவீக்கம் மற்றும் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான அணுகல் இல்லாமை ஆகியவை பெரும்பான்மை மக்கள் தொகையைப் பாதிக்கின்றன.
குவாத்தமாலா
குவாத்தமாலாவில் 59% மக்கள் கடுமையான வறுமையால் பாதிக்கப்படுகின்றனர். வறுமை சமத்துவமின்மை மற்றும் நிலம், கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கான அணுகல் இல்லாமை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. பழங்குடி சமூகங்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
காங்கோ
காங்கோ ஜனநாயகக் குடியரசு ஏராளமான இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது, ஆனால் போர், மோசமான நிர்வாகம் மற்றும் ஊழல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு நிகழும் தொடர் வன்முறையால் பலர் இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் நாட்டின் பல பகுதிகளில் கல்வி மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை சேவைகள் கூட கிடைப்பதில்லை. இங்கு வறுமைக்கோட்டுக்கு கீழ் 56% மக்கள் வாழ்கின்றனர்.
எஸ்வதினி
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எஸ்வதினி இந்த பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது, இங்கு 58% மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். எஸ்வதினியின் வறுமை அங்கு நிலவும் வேலையின்மை, மோசமான கல்வி மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் போன்ற சுகாதார சவால்களால் ஏற்படுகிறது. இங்கு மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் விவசாயத்தையே நம்பியுள்ளனர், ஆனால் இங்குள்ள நிலப்பற்றாக்குறையும், வளங்களின் பற்றாக்குறையும் நிதி நெருக்கடியை உருவாக்குகின்றன.
இந்தியாவின் நிலை என்ன?
இந்தியா முதல் 10 இடங்களில் இல்லாவிட்டாலும், இந்தியாவில் இன்னும் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்றனர், குறிப்பாக அடிப்படை வசதிகள் கிடைக்காத கிராமங்கள் பல இந்தியாவில் இன்னும் உள்ளன. இருப்பினும், வளர்ச்சித் திட்டங்கள், கல்வித் திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் மூலம், இந்தியா தனது வறுமை விகிதத்தைக் குறைப்பதற்காக செயல்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications
