Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
நடிகர் ரஜினிகாந்தை சூப்பர்ஸ்டார் ரஜினியாக மாற்றிய டாப் 10 திரைப்படங்கள்... இதுல உங்களுக்கு பிடிச்ச படம் எது?
இந்தியாவின் சூப்பர் ஸ்டாரும், தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியுமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் இன்று (12-12-2024) கொண்டாடப்படுகிறது. ரஜினிகாந்தின் ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் ஒரு பாடல் வரும் 'சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்'. இந்த வரிகள் முழுக்க முழுக்க ரஜினி அவர்களுக்காகவே எழுதப்பட்ட வரிகளாகும்.
1975-ல் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் துணைக்கதாபாத்திரம் மூலம் தமிழ்ச்சினிமாவுக்குள் நுழைந்த ரஜினிகாந்த் அவர்கள் அதன்பின் இரண்டாவது ஹீரோ, வில்லன் என நடித்து பின்னர் இந்தியாவே வியந்து பார்க்கும் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக மாறினார். இந்த வளர்ச்சி அவருக்கு அவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் கிடைத்து விடவில்லை.

அவரின் கடுமையான உழைப்பும், அதிர்ஷ்டதேவதையின் அருளும், சரியான இயக்குனர்கள் அவருக்கு கொடுத்த வாய்ப்புகளும் அவரை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மாற்றியது. ரஜினிகாந்த் அவர்கள் 170 திரைப்படங்களுக்கும் மேல் நடித்திருந்தாலும் அவரை இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக மாற்றியது அவரின் சில குறிபிட்ட படங்கள்தான். இந்த பதிவில் நடிகர் ரஜினியை சூப்பர் ஸ்டார் ரஜினியாக மாற்றிய டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பில்லா
1980-ல் ரிலீசான பில்லா ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது. அதற்கு முன்னரே ரஜினி அவர்கள் பல சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த ரீமேக் திரைப்படம் ரஜினியை ஒரு ஸ்டைலிஷான ஆக்ஷன் ஹீரோவாக மக்களை ஏற்றுக்கொள்ள செய்தது. இந்த திரைப்படத்தி வெற்றிக்கான சான்றுதான் இதே திரைப்படத்தை மீண்டும் அஜித் அவர்கள் ரீமேக் செய்து நடித்தது. ஆச்சரியமளிக்கும் விதமாக அந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி அடைந்து அஜித்-ன் திரைப்பயணத்தில் முக்கியப்புள்ளியாக இருந்தது.
முரட்டுக் காளை
1980-யை எப்படி பில்லாவின் மாபெரும் வெற்றியுடன் ரஜினி தொடங்கினாரோ அதேபோல அதே வருடத்தை அதைவிட பெரிய வெற்றியை முரட்டுக் காளை படத்தின் மூலம் பெற்று முடித்தார். கிராமத்துக் கதையிலும் தன்னால் அதிரடி காட்ட முடியும் என்று சொல்லி அடித்து மாபெரும் வெற்றி மூலம் அதுவரை தமிழ் சினிமாவின் அனைத்து வசூல் சாதனைகளையும் ரஜினி அடித்து நொறுக்கினார். இந்த திரைப்படத்தில் வரும் ரஜினியின் அறிமுக பாடலுக்கு இன்றும் பெரிய ரசிகப் பட்டாளம் உள்ளது.
மூன்று முகம்
ரஜினியின் போலீஸ் கதாபாத்திரம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மூன்று முகம் திரைப்படத்தில் வரும் அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரம்தான். அந்த அளவிற்கு இந்த படமும், இந்த கதாபாத்திரமும் ரஜினி ரசிகர்களுக்கு மனதிற்கு நெருக்கமானது. ரஜினி அவர்கள் முதன் முதலில் மூன்று கதாபாத்திரத்தில் நடித்த இந்த திரைப்படம் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
நல்லவனுக்கு நல்லவன்
ரஜினியை சூப்பர் ஸ்ட்ராக மாற்றிய திரைப்படங்களில் இந்த படம் இருப்பது சற்று ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் ரஜினியின் திரைப்பயணத்தில் இந்த பாடத்திற்கு முக்கிய இடமுள்ளது. ஒரு நடிகராக ரஜினிக்கு முதல் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது இந்த திரைப்படம்தான். ஏனெனில் அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை முதன் முதலில் ரஜினி அவர்கள் பெற்றார். ரஜினி இதுவரை வாங்கிய ஒரே பிலிம்பேர் விருதும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. சுவாரஸ்யமாக இந்த திரைப்படத்தில் ரஜினியின் பெயர் மாணிக்கம். இந்த மாணிக்கம் பெயர் பின்னாளில் ரஜினியின் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பது வரலாறு.
ராஜா சின்ன ரோஜா
இந்த திரைப்படம் ஒரு வழக்கமான கமர்சியல் திரைப்படம்தான். ஆனால் மக்கள் அனைவரின் மனதிலும் ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்பதை நிலைநிறுத்தியதில் இந்த படத்திற்க்கும் இதில் வரும் பாடலுக்கும் முக்கிய இடம் உண்டு. இந்த திரைப்படத்தில் வந்த அனிமேஷன் காட்சிகள் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 175 நாட்களுக்கு மேல் ஓடிய இந்த வெற்றி திரைப்படம் ரஜினியின் திரைப்பயணத்தை மாற்றியதில் முக்கியமானது.
தளபதி
சில நடிகர்களுக்கு மட்டுமே Cult Classic என்று அழைக்கப்படும் திரைப்படங்களில் நடிக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும். அப்படி ரஜினிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்தான் தளபதி. அதுவரை ரஜினி சுமந்து வந்த எந்தவித கமர்சியல் அம்சங்களும் இன்றி அவர் நடித்த இந்த திரைப்படம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அவருக்கே மறக்க முடியாத திரைப்படமாக மாறியது. இந்த திரைப்படத்தின் காட்சிகளும், பாடல்களும் இப்போது மட்டுமல்ல தமிழ்சினிமா இருக்கும் வரை நிலைத்திருக்கும்.
அண்ணாமலை
ரஜினியை தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக மாற்றியதில் அண்ணாமலை திரைப்படத்திற்கு மிகவும் முக்கியமான இடமுண்டு. இந்த திரைப்படத்தில் தீம் மியூசிக்கும், டைட்டில் கார்டும் இப்போது மட்டுமல்ல எப்போதும் நிலைத்திருக்கும். அண்ணாமலை திரைப்படம் ரஜினியின் திரைப்பயணம் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலேயே முக்கியமான திரைப்படமாக மாறியது. ரஜினியை நம்பர் ஒன் இடத்தில் அமர்த்தியது இந்த திரைப்படம்தான்.
பாட்ஷா
தமிழ் சினிமாவின் கமர்சியல் திரைப்படங்களை பாட்ஷாவிற்கு முன் மற்றும் பாட்ஷாவிற்கு பின் என்று பிரிக்கலாம். அந்த அளவிற்கு பாட்ஷா படத்தின் தாக்கம் இன்றுவரை தமிழ் சினிமாவில் தொடர்கிறது. மாணிக்கமாக இருந்து பாட்ஷாவாக ரஜினி மாறும் அந்த காட்சிக்கு விசிலடிக்காத 90'ஸ் கிட்ஸ்களே இருக்க மாட்டார்கள். ரஜினியிடம் கேட்டாலும் அவருக்கு மிகவும் பிடித்த அவருடைய படமென்றால் அது பாட்ஷாவாகத்தான் இருக்கும்.
படையப்பா
பாட்ஷாவிற்கு பிறகு ரஜினியை மீணடும் கமர்ஷியல் சினிமாவின் உச்சத்தை அடைய வைத்த திரைப்படம் என்றால் படையப்பாதான். அதுவரை ரிலீஸான அனைத்து தமிழ் சினிமாவின் வசூல் சாதனைகளையும் ரஜினி படையப்பாவாக வந்து அடித்து நொறுக்கினார். அதுமட்டுமின்றி படையப்பா படத்தின் பாடல்கள் ரஜினியின் புகழை நிலை நிறுத்துபவையாக எப்போதும் நிலைத்திருக்கும்.
சிவாஜி - The Boss
தமிழ் சினிமாவில் கமர்ஷியலின் உச்சம் என்றால் அது பொதுமக்களைப் பொறுத்தவரை சிவாஜிதான். ரஜினியை கமர்ஷியல் சினிமாவின் கடவுளாக மாற்றியது என்றால் சிவாஜி திரைப்படம்தான். இந்திய சினிமாவின் முதல் 100 கோடி கலெக்ஷன் செய்த திரைப்படம் என்றால் அது ரஜினியின் சிவாஜிதான். அந்த வகையில் இந்திய சினிமாவின் பிதாமகன் என்றால் அது ரஜினிதான் என்பதை இது உறுதிப்படுத்தியது.
சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது ரஜினி அவர்களுக்கு மட்டுமே உரியது. அவரே 2.0 திரைப்படத்தில் "இங்க நான்தான் சூப்பர் ஒன்" என்று கூறுவார். அது அந்த கதாபாத்திரத்துக்கு மட்டுமல்ல அவரின் நிஜ வாழ்க்கைக்கும் பொருந்துவதாகும். இந்திய சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டாருக்கு எங்களின் பிறந்த வாழ்த்துக்கள்.



Click it and Unblock the Notifications

