Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
உலக நாடுகளால் அதிகம் வெறுக்கப்படும் டாப் 10 நாடுகள் இதுதான்... இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
Top 10 most hated countries in the world: கடந்த பத்தாண்டுகளுடன் ஒப்பிடும் போது 2025 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவுகிறது. சில நாடுகளுக்கு இடையே போர்களும் நடந்து வருகின்றன. இதனால் சில நாடுகள் மீது உலகம் முழுவதும் வெறுப்பலை நிலவுகிறது. சமீபத்தில் World Population Review வெளியிட்ட அறிக்கை உலகம் முழுக்க வெறுக்கப்படும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சர்வதேச அறிக்கைகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக் கணிப்புகளின் கலவையிலிருந்து இந்த தரவரிசை உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இது அந்த நாட்டின் அரசாங்கங்கள், கொள்கைகள் மற்றும் உலகளாவிய நடத்தை மீதான வளர்ந்து வரும் விரக்தியை பிரதிபலிக்கின்றன. இந்த பதிவில் உலகம் முழுவதும் வெறுக்கப்படும் நாடுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

சீனா
உலக நாடுகளின் ஏகோபித்த வெறுப்புடன் சீனா முதலிடத்தில் உள்ளது. சர்வாதிகார ஆட்சி, அடிமைத்தனம், கருத்து சுதந்திரத்தின் மீதான தணிக்கை மற்றும் உலகளாவிய மாசுபாட்டில் அதன் பங்கு ஆகியவற்றிற்காக சீனா தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது. ஹாங்காங், தைவான் மற்றும் மக்காவ் ஆகிய நாடுகளுக்கு சுதந்திரம் வழங்க மறுப்பதும், உய்குர் முஸ்லிம் மக்களை மோசமாக நடத்துவதும் சீனா மீதான உலகளாவிய அவநம்பிக்கையை அதிகரித்துள்ளது.
அமெரிக்கா
உலக வல்லரசான அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. சில அமெரிக்கர்களுக்கு வேண்டுமென்றால் ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் மற்ற நாட்டினருக்கு இல்லை. சர்வதேச விவகாரங்களில் அமெரிக்கா மிகைப்படுத்திச் செயல்படுவதாகக் கருதப்படுகிறது, பெரும்பாலும் உலகளாவிய மோதல்களில் தேவையின்றி மூக்கை நுழைக்கிறது. அதன் கடந்த கால கசப்பான கலாச்சாரப் போர்கள், ஆயுத விவகாரங்கள் மற்றும் துரித உணவு மீதான மோகம் ஆகியவை அமெரிக்கா மீதான வெறுப்பை அதிகரிக்கிறது.
ரஷ்யா
இந்த பட்டியலில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் இருக்க சமீபத்தில் உக்ரைனில் அதன் தொடர்ச்சியான போர் மற்றும் ஜனநாயக சக்திகளை கட்டுப்படுத்துவதே காரணமாக உள்ளது. அரசாங்கத்தின் ஆக்ரோஷமான வெளியுறவுக் கொள்கை மற்றும் அதன் குடிமக்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் இல்லாதது ஆகியவை உலகளாவிய விமர்சனத்திற்கு ரஷ்யாவை இலக்காக மாறியுள்ளன.
வட கொரியா
கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட சர்வாதிகாரம், மக்களுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட, இராணுவமயமாக்கப்பட்ட நிலைப்பாடு ஆகியவற்றுடன், வட கொரியா உலகம் முழுவதும் அச்சத்தையும், வெறுப்பையும் பரப்புகிறது.
இஸ்ரேல்
பாலஸ்தீனத்துடனான நீண்டகால மோதல் மற்றும் இரக்கமற்ற இராணுவ நடவடிக்கைகள் இஸ்ரேலை தொடர்ந்து தவறான வெளிச்சத்தின் கீழ் நிறுத்தியுள்ளது. இது பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகளையும், வெறுப்பையும் தூண்டியுள்ளது.
பாகிஸ்தான்
உள்நாட்டில் உறுதியற்ற தன்மை, மத தீவிரவாதம் மற்றும் பதட்டமான சர்வதேச உறவுகள், குறிப்பாக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடனான உறவுகள் காரணமாக இந்த பட்டியலில் பாகிஸ்தான் ஆறாவது இடத்தில் உள்ளது.
ஈரான்
மேற்கத்திய நாடுகளுடனான ஈரானின் உறவுகளில் விரிசல், மனித உரிமைகள் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் போர்களில் அதன் ஈடுபாடு ஆகியவை அதை கடுமையான உலகளாவிய வெறுப்புக்கு உட்படுத்தியுள்ளன.
ஈராக்
பல வருட உள்நாட்டு போருக்குப் பின் மீண்டும் கட்டமைக்கப்பட்ட போதிலும், ஈராக் இன்னும் வன்முறை, உறுதியற்ற தன்மை மற்றும் உள்நாட்டு மோதல்கள் நடக்கும் நாடாக உள்ளது. இது சர்வதேச அளவில் அந்நாட்டின் மீது வெறுப்பை அதிகரிக்கிறது.
சிரியா
சிரியாவில் பல வருடங்களாக நிலவும் மிருகத்தனமான உள்நாட்டுப் போர், அரசாங்கத்தின் அடக்குமுறைகள் மற்றும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவை சிரியாவை உலகளவில் சிரியாவுக்கு மோசமான பெயரை பெற்றுத்தந்துள்ளன.
இந்தியா
மதரீதியான பதட்டங்கள், சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை மற்றும் இணைய தணிக்கை அதிகரித்து வருவதால், உலகளவில் இந்தியாவின் பிம்பம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் எல்லைப் பதற்றங்கள் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை ஆகியவை இந்தியாவிற்கு வெறுப்பை சம்பாதித்துக் கொடுத்துள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
