இந்தியாவின் டாப் 10 தொழிலதிபர்கள் உண்மையில் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா? படிப்பு மட்டும் ஜெயிக்க போதாது போல

இந்திய தொழிலதிபர்கள் இந்தியாவில் அபரிமிதமான செல்வாக்கு படைத்தவர்களாக இருக்கிறார்கள், அவர்கள்தான் நம் நாட்டின் பொருளாதார நிலையை வடிவமைக்கின்றனர். முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, ஆனந்த் மஹிந்திரா போன்றவர்கள் சின்னங்கள் இந்தியாவின் தொழில் வளர்ச்சியின் அடையாளமாக இருக்கிறார்கள்.

அவர்களின் புதிய முயற்சிகள், வேலைகளை உருவாக்குதல் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. இளம் தொழில்முனைவோர் மற்றும் இந்த புகழ்பெற்ற பாதையில் செல்ல விரும்புபவர்கள் பெரும்பாலும் இவர்களை ரோல்மாடல்களாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்தியாவின் தொழில் சாம்ராஜ்ஜியத்தை ஆட்டிப்படைக்கும் மாபெரும் தொழிலதிபர்கள் என்ன படித்துள்ளார்கள் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? அதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Top 10 Indian Billionaires and Their Educational Qualifications in Tamil

முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி அடிப்படையில் ஒரு கெமிக்கல் இன்ஜினியராவார். அவர் மும்பையின் வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் MBA பட்டமும் பெற்றுள்ளார்.

கௌதம் அதானி

அதானி குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான கௌதம் அதானி இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் ஆவார். குஜராத்தில் உள்ள ஷெத் சிமன்லால் நாகிந்தாஸ் வித்யாலயாவில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதன்பின்னர் வணிகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்புக்காக குஜராத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், வணிகத்தில் தனது திறமையைக் கண்டறிந்த பிறகு அதை பாதியிலேயே விட்டுவிட்டார்.

சைரஸ் பூனவல்லா

சைரஸ் பூனவல்லா இந்தியாவின் மூன்றாவது பெரிய பணக்காரர். அவர் சைரஸ் பூனவல்லா குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார், இதில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவும், இந்தியாவின் முன்னணி NBFC நிறுவனமான பூனாவல்லா ஃபின்கார்ப் ஆகியவையும் அடங்கும்.

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அவர் 1966 இல் புனே பல்கலைக்கழகத்தின் பிரிஹான் மகாராஷ்டிர வணிகக் கல்லூரியில் பட்டம் பெற்றார் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவை நிறுவினார்.

ரத்தன் டாடா

ரத்தன் டாடா அல்லது ரத்தன் நேவல் டாடா, 1991 இல் டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். ரத்தன் டாடா தனது பள்ளிப் படிப்பை கேம்பியன் மற்றும் பின்னர் கதீட்ரல் மற்றும் ஜான் கானனில்(மும்பையில்) முடித்தார். அதன் பிறகு, அவர் கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு பொறியியல் படிப்பதற்காக அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். 1962 இல் கட்டிடக்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

நாராயண மூர்த்தி

இந்தியாவின் முன்னணி மென்பொருள் சேவை வழங்கும் நிறுவனமான இன்ஃபோசிஸின் நிறுவனர் நாகவர ராமராவ் நாராயண மூர்த்தி ஆவார். 1967ல் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங்கில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தார். 1969ல் ஐஐடி கான்பூரில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1981 இல், அவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவினார்.

அசிம் பிரேம்ஜி

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் பேரரசர் என்று அழைக்கப்படும் தொழிலதிபர் அசிம் பிரேம்ஜி, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் பட்டம் பெற்றவர். மிச்சிகன் ஸ்டேட் யுனிவர்சிட்டி, வெஸ்லியன் பல்கலைக்கழகம் மற்றும் மும்பை, ரூர்க்கி மற்றும் காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களால் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர் ஃபாரடே பதக்கம் மற்றும் பரோபகாரத்திற்கான கார்னகி பதக்கம் ஆகியவற்றைப் பெற்றவர்.

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமம், மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் மற்றும் டெக் மஹிந்திரா லிமிடெட் ஆகியவற்றின் தலைவர் மஹிந்திரா ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் MBA பட்டமும் பெற்றுள்ளார்.

ராகுல் பஜாஜ்

பஜாஜ் குழுமத்தின் தலைவருமான ராகுல் பஜாஜ், மும்பை பல்கலைக்கழகத்தின் சட்டப் பட்டதாரி ஆவார், அதே பல்கலைக்கழகத்தில் = பொருளாதாரத்தில் பிஏ பட்டமும் பெற்றுள்ளார். அதன்பின் ஹார்வர்டில் எம்பிஏ பட்டமும் பெற்றவர். ஆறு பல்கலைக் கழகங்களில் இருந்து அவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஷிவ் நாடார்

HCL குழுமம் மற்றும் ஷிவ் நாடார் அறக்கட்டளையின் நிறுவனர் ஷிவ் நாடார் கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், திருச்சி செயின்ட் ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். அதன்பின் கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் பெற்றவர்.

குமார் மங்கலம் பிர்லா

ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லா ஒரு ஆடிட்டர் மற்றும் லண்டன் பிசினஸ் ஸ்கூலில் MBA பட்டம் பெற்றவர்.The Institute of Chartered Accountants of India - ICAI நிறுவனம் சமீபத்தில் அவருக்கு CA Hall of Fame விருதை வழங்கியது. அவர் தனது உயர்நிலைப் பள்ளியை சிடன்ஹாம் வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் முடித்தார். மும்பை பல்கலைக்கழகத்தின் எச்.ஆர் வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

Story first published: Wednesday, April 3, 2024, 14:12 [IST]
Desktop Bottom Promotion