Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
இறந்த பிறகு உடம்புல இருந்து ஆன்மா வெளியே போனதும் இதெல்லாம் நடக்குமாம்.. ஷாக் ஆகாம படிங்க..
ஒருவருக்கு மரணம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஆனால் மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பது தெரியுமா? மரணத்திற்கு பிறகான வாழ்க்கை ஒரு மர்மமானது. மரணத்திற்கு பின் சொர்க்கம் அல்லது நரகத்திற்கு செல்லலாம். இல்லாவிட்டால், சிலர் பறவையாக மறுபிறவி எடுக்கலாம்.
மரணம் என்பது ஒருவரது வாழ்க்கையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கை அணைப்பது போன்றது. சரி, மரணத்திற்கு பிறகான வாழ்க்கை சற்று புதிர் நிறைந்ததாக இருந்தாலும், மரணத்திற்கு பின் ஒருவரது ஆன்மா வேண்டுமானால் உடலில் இருந்து பிரிந்திருக்கலாம். ஆனால் உடலில் பல செயல்பாடுகள் தொடர்ந்து நடக்கும் என்பது தெரியுமா?

மரணமானது இதயம், மூளை, சுவாச மண்டலம் போன்ற முக்கிய உறுப்புக்களின் செயல்பாடுகள் செயல்படாமல் இருக்கும் போது ஏற்படுகிறது. ஒருவர் எப்படி இறந்தாலும், இறப்புக்கு பின் அந்த உடல் பல நிலைகளை கடந்து செல்கிறது. சொல்லப்போனால், உடலின் செயல்பாடுகள் மணிநேரங்கள், நாட்கள் மற்றும் சில நேரங்களில் வாரங்கள் கூட தொடர்ந்து வேலை செய்கின்றன. இப்போது உடலில் இருந்து ஆன்மா வெளியேறிய பின் உடலில் நடக்கும் டாப் 10 செயல்பாடுகள் குறித்து காண்போம்.
உடல் அசைவு
இறந்த பிறகு உடலில் சில அசைவுகள் ஏற்படும் என்பது தெரியுமா? இம்மாதிரியான அசைவுகள் உயிருடன் இருக்கும் போது செய்யும் அசைவுகள் போல் இல்லாவிட்டாலும், பார்ப்பவர்கள் பயப்படும் வகையில் அசைவுகள் இருக்கும். எப்படியெனில், இறந்த பிறகு உடல் தசைகளானது நரம்பு சிக்னல்களை பெறுவதால் இது நிகழ்கிறது. இதனால் தான் இறந்த பிறகு சடலத்தில் அசைவுகள் காணப்படுகிறது. உடலில் அடினோசின் ட்ரைபாஸ்பேட் (ATP) குறைந்துவிட்டால், உடல் அதன் இறுதி அசைவுகளை செய்யும். அதில் விரல்கள் இறுகுவது, கைகளை அசைப்பது, கால்விரல்கள் அசைவது போன்றவை அடங்கும்.
குழந்தை பிறப்பு
உயிருடன் இருந்தால் மட்டும் தான் பிரசவம் நடக்கும் என்று நீங்கள் நினைத்தால் தவறு. வயிற்றில் குழந்தையுடன் மரணம் ஏற்பட்டாலும், பிரசவிக்கக்கூடும். ஆனால் இது முற்றிலும் விசித்திரமானது. எப்படியெனில், மரணத்திற்கு பின் சடலத்திற்குள் உருவாகும் வாயுக்களின் அழுத்தத்தால், வயிற்றில் உள்ள குழந்தை வெளியே தள்ளப்படுகிறது. இப்படியான குழந்தை பிறப்பு பெரும்பாலானவை நவீன மருத்துவத்தின் நன்மைகள் இல்லாத காலங்களில் நிகழ்ந்தாலும், அவை இன்றுவரை நடக்கின்றன.
சிறுநீர், மலம் கழிப்பது
மரணத்தின் போது, உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகிறது. அதில் ஒன்று சிறுநீர் மற்றும் மலம் போன்ற சில உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் தசைகள் உட்பட ஒவ்வொரு தசையையும் தளர்த்துவது ஆகும். பிரேத பரிசோதனை நீக்கம் என்பது உடலில் உள்ள ஸ்பிங்க்டர் தசைகள் தளர்வதால் ஏற்படுகிறது. ஆனால் இம்மாதிரியான நிகழ்வு மரணத்திற்கு பின் எப்போதும் நடக்கும் என்று கூற முடியாது.
இது ஒருவர் எப்படி இறக்கிறார் மற்றும் இறப்பதற்கு முன் சிறுநீர்ப்பை மற்றும் குடலில் எவ்வளவு உணவு மற்றும் திரவம் உள்ளது என்பதைப் பொறுத்தது. நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் விஷயத்தில், பசியின்மை காரணமாக அவர்களின் அமைப்பில் அதிக உணவு இருக்காது, அது நோயுடன் சேர்ந்து கொள்ளலாம். இருப்பினும், திடீர் மரணம் ஏற்படும் சந்தர்ப்பங்களில், உடல்கள் தங்கள் அமைப்பில் எஞ்சியிருப்பதை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சப்தம் வரும்
மரணத்திற்கு பின் சடலங்கள் அலறவோ அல்லது கத்தவோ வாய்ப்பில்லை என்றாலும், அவை முனகல்கள், கூக்குரல்கள், முணுமுணுப்புகள் போன்ற சத்தங்களை உருவாக்க வாய்ப்புள்ளது. இம்மாதியான சப்தத்தை சடலங்கள் தானாக உருவாக்கவில்லை. மரணத்திற்குப் பிறகு சடலங்களை நகர்த்தும்போது, மூச்சுக்குழாயின் உள்ளே இருக்கும் காற்று வெளியேறி குரல் நாண்களை அதிரச் செய்து, முணுமுணுப்பு மற்றும் முனகல் போன்ற சப்தங்களை எழுப்பும்.
நகம் மற்றும் முடி வளர்ச்சி
ஒருவர் இறந்துவிட்டதாக கூறப்பட்டாலும், உடல் முழுமையாக செயல்படுவதை நிறுத்த நேரம் ஆகும். மூளை செயலிழந்த பின், உடலில் உயிர் இல்லாவிட்டாலும், நகம், முடி போன்றவை தொடர்ந்து வளர்வதாக கூறப்படுகிறது. உடலானது இறக்கும் போது, உடலில் ஆக்ஸிஜன் சப்ளை எதுவும் இருக்காது, இதனால் உடல் புதிய நகங்களையும் முடிகளையும் உருவாக்காது. மாறாக, சருமம் ஈரப்பதத்தை இழந்து, தோல் சுருங்க ஆரம்பிக்கும் போது, அது நகங்கள் மற்றும் முடிகள் வளர்ந்து இருப்பது போன்ற ஒரு மாயையை அளிக்கிறது.
செரிமானம் நடக்கும்
ஒருவர் இறந்த பிறகு விரும்பிய உணவை உட்கொள்ள முடியாது. ஆனால் செரிமான மண்டலத்தில் உள்ள பாக்டீரியாக்கள் வயிற்றில் எஞ்சியுள்ள உணவை தொடர்ந்து உடைத்துக் கொண்டிருக்கும். சொல்லப்போனால், ஒருவர் இறக்கும்போது பாக்டீரியாக்கள் எப்போதும் கடைசியாகத் தெரியும். வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான் ஒருவர் இறந்த பிறகும் செரிமான செயல்முறையை தொடர்ந்து செய்கிறது. உடல் முழுவதுமாக செயல்பாட்டை நிறுத்துவது வரை வயிறு தன்னை ஜீரணித்துக் கொள்கிறது.
மூளை செயல்பாடு
மக்கள் இறப்பதைக் கூட தொழில்நுட்பம் மாற்றுகிறது. உடலின் மற்ற பகுதிகள் முழுவதுமாக இறந்த பின்னரும், மருத்துவர்களால் மூளையை பல நாட்கள் வரை உயிருடன் வைத்திருக்க முடியும். மூளை செயலிழந்தாலும் ஒருவரின் இதயம் தொடர்ந்து பம்ப் செய்யும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மூளை செயல்பாடு இருந்தாலும் கூட, ஒருவர் மூச்சு விடுவதை நிறுத்தினால் மற்றும் அவரது இதயம் ஒரு நிமிடம் பம்ப் செய்வதை நிறுத்தினால், அந்நபர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதயம் செயல்படுவதை நிறுத்திவிட்டால், மூளையானது உயிருடன் இருக்க தொடர்ந்து ஆக்ஸிஜனை கண்டுபிடிக்க முயற்சிக்கிறது. இந்நிலையில் சரியான மருந்து மற்றும் தொழில்நுட்பத்துடன், மருத்துவர்களால் மூளையை சில மணிநேரம் வரை செயல்பாட்டில் வைத்திருக்க முடியம். இந்த கோட்பாட்டில் ஒருவரின் உயிரைக் கூட காப்பாற்ற முடியும். இருப்பினும் அந்த நபரால் ஒருபோதும் மீட்க முடியாத அளவுக்கு மூளையில் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கும்.
சரும செல்களின் வளர்ச்சி
இறந்த பின் உடலின் சில பகுதிகளில் வேகமாக இறக்கின்றன, மற்ற பகுதிகள் மெதுவாக இறக்கின்றன. இறந்த பின் உடலில் இரத்த ஓட்டம் குறைவதால், மூளை சில நிமிடங்கள் இறக்கும். இருப்பினும் சரும செல்கள் பல ஆண்டுகளாக மூளை இல்லாமல் எப்படி வாழ்வது என்பதை கண்டுபிடித்துள்ளன. இதனால் மூளை இறந்த பிறகும் சரும செல்கள் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும்.
விறைப்புத்தன்மை
மரணம் ஏற்பட்டாலும் விறைப்புத்தன்மையை நிறுத்த முடியாது. இதயம் செயல்படுவதை நிறுத்தியதும், உடலில் இரத்த ஓட்டம் அப்படியே நின்றுவிடும். அதுவும் ஒரு ஆண் இறக்கும் போது குப்புற படுத்திருந்தால், ஆண்குறியில் இரத்தம் தேங்கி விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும்.
மரபணுக்கள் செயலில் இருக்கும்
ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் உடலின் மரபணுக்கள் குறித்து ஒரு கண்கவர் கண்டுபிடிப்பை மேற்கொண்டனர். அதில் குறிப்பிட்ட மரபணுக்கள் மரணத்திற்குப் பிறகு செயல்படுகின்றன என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. நீண்ட காலமாக மறைந்த விலங்குகளின் உடலில் செயலில் இருக்கும் மரபணுக்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதேபோன்ற அனுபவத்தை மனித உடலும் அனுபவிக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் நம்பியதோடு, இதேபோன்ற மரபணுக்கள் மனித உடலிலும் செயல்படுவதைக் கண்டுபிடித்தனர்.



Click it and Unblock the Notifications











