Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன?
Today Rasi Palan 30 June 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் சில புதிய திருப்பங்கள் ஏற்படலாம்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் ரேவதி, அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூன் 30ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று நீங்கள் மந்தமாக, சோம்பலாக உணரலாம். இருப்பினும், உங்கள் பொன்னான நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும். உங்கள் நேரத்தை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே நன்மை பயக்கும். காதல் வாழ்க்கையில் பதற்றமான சூழ்நிலை தோன்றும். உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் பலவீனமான நாளாக இருக்கும். இதெல்லாம் உங்கள் கவனக்குறைவின் விளைவு. மருத்துவர்கள் மற்றும் மருந்துகளுக்கு நீங்கள் நிறைய பணம் செலவழிக்கலாம். சில காரணங்களால் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு விரிசல் ஏற்பட்டால், இன்று அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்யலாம். எல்லா மனக்கசப்புகளையும் மறந்துவிட்டு புதிய வாழ்வை தொடங்குவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:15 மணி முதல் காலை 9:20 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்று உங்கள் வேலையில் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களிடம் ஒரு பெரிய கோரிக்கையை முன் வைக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த, நிதி முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று
நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5:35 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று நீங்கள் சில சுயநலவாதிகளைச் சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு போதுமான நேரத்தை ஒதுக்க முடியும். இன்று உங்கள் திருமண வாழ்க்கையின் சிறந்த நாட்களில் ஒன்றாக அமையும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 10:10 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் கவனமெல்லாம் உங்கள் குடும்பத்தின் மீது இருக்கும். நீங்கள் அவர்களின் தேவைகளை நன்கு கவனித்துக்கொள்வீர்கள். அவர்களுக்காக சில முக்கியமான பொருட்களை வாங்கலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். இன்று காதல் விஷயத்தில் சிறு சர்ச்சை ஏற்படும். உங்கள் துணை உங்களைப் புறக்கணிப்பதாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9:05 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு காதல் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் துணையின் எண்ணங்களால் நீங்கள் சூழப்படுவீர்கள். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். யோசிக்காமல் எந்த செலவும் செய்யாதீர்கள். மாணவர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலனைத் தரும். கல்வி தொடர்பான எந்த முயற்சியிலும் நீங்கள் வெற்றி பெறலாம். இன்று உங்கள் உடல்நலம் சீராகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, தொழில் வாழ்க்கையில் இன்று உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் மகத்தான வெற்றியைப் பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். உங்கள் நடத்தையில் மென்மையைக் கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஒன்று கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:15 மணி முதல் மாலை 4 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையில் உறுதித்தன்மை நிலைத்திருக்கும். இன்று உங்கள் துணையும் உங்களுக்கு சில வாக்குறுதிகளை அளிக்கலாம். இன்று உங்களுக்கு ஒரு சிறந்த நாளாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம் ஏற்படலாம். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை அழுத்தம் சற்று அதிகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:10 மணி முதல் காலை 10:10 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, கெட்ட பழக்கங்களிலிருந்து விலகி இருங்கள். இல்லையெனில் நீங்கள் வருத்தப்பட நேரிடலாம். மாணவர்கள், உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பினால், இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். காதல் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் துணையுடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படலாம். பொய் கூறுவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, காதல் விஷயத்தில் இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். நீங்கள் ஒருவரையொருவர் சகித்துக்கொள்வதால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்றைய நாள் பண விஷயத்தில் சாதகமாக இருக்கும். நீங்கள் திடீர் பண வரவைப் பெறலாம். அரசு ஊழியர்களுக்கு இன்று முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் உயர் பதவி பெற வாய்ப்பு அதிகம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, அலுவலகத்தில் நடக்கும் அரசியலில் கவனமாக இருங்கள். இல்லையெனில் அது கடினமாக இருக்கும். நீங்கள் பணம் தொடர்பான எந்த பரிவர்த்தனையையும் செய்யப் போகிறீர்கள் என்றால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத்துணையின் நடத்தையில் மாற்றம் ஏற்படலாம். ஒரு சிறிய விஷயத்தில் உங்களுக்குள் மோதல்கள் ஏற்படலாம். இன்று உங்கள் ஆரோக்கியம் குறையலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் மனஅழுத்தம் அதிகரிக்கும். உங்களுக்கிடையில் நம்பிக்கை குறையலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் எந்த மதிப்புமிக்க பொருளையும் வாங்கலாம். வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். நல்ல ஆரோக்கியத்திற்காக, உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:10 மணி முதல் காலை 8:50 மணி வரை



Click it and Unblock the Notifications











