Today Rasi Palan 30 April 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்படலாம்... உஷாரா இருங்க..

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் உத்திராடம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஏப்ரல் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 30 April 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று முக்கியமான நாளாக இருக்கும். முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் இன்று கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலையில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று பண இழப்பு ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று நீங்கள் உங்களுக்கு பிடித்த வேலையைச் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுவீர்கள். வேலையைத் தேடிக் கொண்டிருந்தால், இன்று ஒரு நல்ல பலன் கிடைக்கும். வியாபாரிகள் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று மிகவும் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 5 மணி முதல் 10 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இன்று குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். பணிபுரிபவர்கள் தங்கள் காதால் கேட்பதை நம்புவதைத் தவிர்க்க வேண்டும். தொழிலதிபர்களுக்கு இன்று நன்றாக இருக்கும். நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் நல்ல பலன் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, நல்ல பழக்கத்தை வழக்கமாக கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று நிதி நிலை நன்றாக இருக்கும். வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கடனை அடைப்பீர்கள். பணிபுரிபவர்கள் இன்று அலுவலகத்தில் சரியாக நடந்து கொள்ள வேண்டும். தொழிலதிபர்கள் இன்று பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 முதல் இரவு 8:40 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று பணிபுரிபவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு சிரமம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். உங்களின் கோபத்தால் குடும்பத்தின் அமைதி குறையும். நிதி ரீதியாக சிறப்பான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:45 முதல் மதியம் 12:20 வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இன்று திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். வேலையைப் பொறுத்தவரை, இன்று பிஸியான நாளாக இருக்கும். வேலை சம்பந்தமாக வீட்டை விட்டு வெளியே செல்ல நேரிடலாம். செலவுகள் அதிகரிக்கக்கூடும். ஆனால் பணத்தை செலவழிக்கும் போது பட்ஜெட்டை நினைவில் கொள்ள வேண்டும். ஆரோக்கியப் பொறுத்தவரை, மிகுந்த உடல் சோர்வை உணர நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9:05 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இன்று வியாபாரிகள் தங்கள் பேச்சால் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நிதியைப் பொறுத்தவரை, நல்ல நாளாக இருக்கும். ஆனால் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் ரொமான்டிக்காக நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 முதல் 10:10 வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று நீங்கள் பயணம் மேற்கொள்ளலாம். நிதி ரீதியாக இந்நாள் சிறப்பாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்களும் கிடைக்கலாம். வேலை சம்பந்தமான முடிவுகளை அவசரப்பட்டு எடுக்காமல் இருப்பது நல்லது. நீங்கள் வேலையை மாற்ற நினைத்தால், புத்திசாலித்தனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 முதல் மதியம் 12 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! நீங்கள் தொழிலதிபராக இருந்தால், இன்று சில தடைகளை சந்திப்பீர்கள். பண இழப்பிற்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். உங்கள் வேலைகளில் இருமடங்கு வேகத்தில் முடிப்பீர்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். இன்று உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் 11 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு யாருக்கேனும் உதவ வாய்ப்பு கிடைத்தால், அவருக்கு உதவுங்கள். பணிபுரிபவர்கள் இன்று உயர் அதிகாரியின் வழிகாட்டுதலைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலை நன்றாக இருக்கும். வாகனம் வாங்கும் விருப்பம் நிறைவேறும். உங்கள் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:35 முதல் இரவு 8 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இன்று கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு இன்று சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு முக்கியமான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, வறுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே! இன்று குடும்ப உறுப்பினர்களுடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். அரசு வேலையில் இருப்பவர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் சிறிய கவனக்குறைவும் பெரிய இழப்பை ஏற்படுத்தும். வியாபாரிகளுக்கு சுமாராக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்க வேண்டுமானால், செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை

Story first published: Sunday, April 30, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion