Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Today Rasi Palan 27 December 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். டிசம்பர் 27ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.30-10.30 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 12.00-1.30 மணி வரை. குளிகை காலை 10.30-12.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் - வடக்கு திசை. விசாகம், அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, சில காரணங்களால் நீங்கள் வீட்டை விட்டு விலகி இருந்தால், குடும்பத்தினருடன் நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். பணத்தின் அடிப்படையில் இன்று விலை உயர்ந்த நாளாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்யுங்கள். இல்லையெனில், எதிர்காலத்தில் பெரிய நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். வியாபாரிகள் இன்று நல்ல பலன்களைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கும் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். பண விஷயங்களில் நீங்கள் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் இன்று திரும்ப கிடைக்கும். அலுவலகச் சூழல் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள வேலையை இன்றே முடிக்க முயற்சிக்கவும். வியாபாரிகளின் சிரமங்கள் அதிகரிக்கக்கூடும். இன்று எடுக்கும் அவசர முடிவால் நிதி இழப்பு சாத்தியமாகும். ஆரோக்கியத்தின் அடிப்படையில், ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரரக்ளே, உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றம் ஏற்படக்கூடும். உங்கள் வருமானம் அதிகரிக்கவும் வலுவான வாய்ப்புள்ளது. வியாபாரிகள் பழைய கடனில் இருந்து நிவாரணம் பெறலாம். இன்று பண விஷயத்தில் சிறப்பான நாளாக இருக்காது. பெரிய நிதி பரிவர்த்தனைகள் செய்வதைத் தவிர்க்கவும். மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறலாம். கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். இன்று ஆரோக்கியத்தின் அடிப்படையில் சாதகமான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதிக அழுத்தத்தை உணருவீர்கள். உங்கள் எல்லா வேலைகளையும் திட்டமிட்டபடி முடிக்க முயற்சிப்பது நல்லது. வியாபாரிகள் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். தேவையற்ற விஷயங்களில் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உடல்நலம் பலவீனமாக இருக்கும். கவனக்குறைவாகவே இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:45 மணி முதல் காலை 10:25 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, திருமண வாழ்வில் மனகசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையை அன்புடனும் மரியாதையுடனும் நடத்த அறிவுறுத்தப்படுகிறது. சிறிய விஷயங்களுக்கு கோபப்படுவதைத் தவிர்க்கவும். பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். வேலையில் இன்று கலவையான முடிவுகளைத் தரும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று நீங்கள் மிகவும் பலவீனமாக உணரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, வியாபாரிகள் புதிதாக ஏதாவது செய்யத் திட்டமிட்டிருந்தால், இந்த நேரத்தில் அதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று அலுவலகத்தில் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு அதிகம். சில காரணங்களால் உங்கள் பதவி உயர்வு நீண்ட காலமாக தடைப்பட்டிருந்தால், இன்று உங்களுக்கு பெரும் நிம்மதியைத் தரும். பொருளாதார நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:15 மணி முதல் இரவு 8:10 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, மாணவர்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இன்று பண விஷயத்தில் சிறப்பான நாளாக இருக்கும். செலவுகள் குறையும். இன்று அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடலாம். உங்கள் காலதாமதம் முதலாளியின் மனநிலையைக் கெடுத்துவிடும். வியாபாரிகள் இன்று திடீர் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். உங்களின் இந்தப் பயணம் மிகவும் சோர்வாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சராசரியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8:15 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று வேலையில் நல்ல அறிகுறிகள் தென்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். வணிகர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வலுவான வாய்ப்புள்ளது. இருப்பினும், எதிர்காலத்தில் நீங்கள் பண விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். காதல் விஷயங்களில் இன்று நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கிடையே காதல் அதிகரிக்கும். இன்று நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து அழகான பரிசைப் பெறலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 4 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, வியாபாரிகள் இன்று பொறுமை காக்க அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்காவிட்டால், தவறான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது தவறான வார்த்தைகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை சரியாகப் பயன்படுத்தவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு எலும்புகள் அல்லது தசைகள் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் காலை 10:30 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் அதிக கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதீர்க்ள. மாணவர்களுக்கு இந்த நேரம் மிகவும் முக்கியமானது. எனவே அதை நன்றாகப் பயன்படுத்துங்கள். பண விஷயங்களில் கவனமாக இருக்கவும். இல்லையெனில், நீங்கள் சில நிதி சிக்கலில் சிக்கிக்கொள்ளலாம். வேலையில் இன்று சலசலப்பு நிறைந்ததாக இருக்கும். இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 2:30 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்க போகிறது. நீங்கள் விரும்பிய வேலையைப் பெறலாம். வணிகர்கள் பெரிய ஆர்டரைப் பெற வலுவான வாய்ப்புள்ளது. விரைவில் உங்கள் தொழிலில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். பொருளாதார நிலை வலுப்பெறும். வருமானம் கூடும். ரியல் எஸ்டேட் தொடர்பான ஏதேனும் வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தால், வழக்கறிஞரின் சட்ட ஆலோசனையைப் பெற இன்று பொருத்தமான நாள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் கோபத்தைக் குறைத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, உங்களின் தற்போதைய வேலையில் நீங்கள் திருப்தி அடையாமல், புதிய வேலையைத் தேடுகிறீர்கள் என்றால், இன்று நீங்கள் பயனடையலாம். வியாபாரிகள் பெரிய லாபத்திற்காக சிறிய லாபத்தை புறக்கணிக்க வேண்டாம். விரைவான லாபம் தேடும் முயற்சியில், நீங்கள் பெரிய சிக்கலில் சிக்கி கொள்ளலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தாருடன் நேரம் செலிவடுவதால் உங்கள் மன அழுத்தம் குறையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை



Click it and Unblock the Notifications











