Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Today Rasi Palan 26 November 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மறக்க முடியாத நாளாக அமைய போகிறது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். நவம்பர் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 3.15-4.15 மணி வரை. ராகு காலம் காலை 4.30-6.00 மணி வரை. குளிகை காலை 3.00-4.30 மணி வரை. எமகண்டம் காலை 12.00-1.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. ஹஸ்தம், சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று வேலையில் உங்களுக்கு நல்ல அறிகுறிகள் இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் சில மனக்கசப்புகள் வரலாம். உங்கள் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் நிலைப்பாட்டை புத்திசாலித்தனமாக முன்வைக்க முயற்சிப்பது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் கடன் வாங்கியிருந்தால், விரைவில் அதைத் திருப்பிச் செலுத்துவதிடலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்களின் அனைத்து வேலைகளையும் விரைவாக முடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் உங்களின் முக்கியமான சில வேலைகள் இன்று முழுமையடையாமல் போகலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:10 மணி முதல் இரவு 7:35 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்று வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்காது. இன்று உங்களுக்கு பண விஷயத்தில் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான நிதி முடிவுகளை எடுப்பதற்கு இன்று நல்ல நாள். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று குறையும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நீங்கள் ஒரு புதிய வியாபாரத்தில் அதிர்ஷ்டத்தை முயற்சிக்க திட்டமிட்டால், கவனமாக சிந்திக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 37
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:15 மணி முதல் காலை 8:30 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பணம் சம்பந்தமான பிரச்சனைகள் இன்று முடிவுக்கு வரும். திடீர் பண வரவு கிடைக்கும். இன்று வேலைப்பளு அதிகமாக இருக்கும். உயர் அதிகாரிகளால் உங்களுக்கு நிறைய அழுத்தம் இருக்கலாம். தொழிலதிபர்களின் முக்கிய ஆவணங்கள் பாதியில் தடைபடலாம். இன்று நீங்கள் நிறைய பணம் செலவழிக்க வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, உங்கள் தினசரி வழக்கத்தை ஒழுங்கமைக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, வேலையில் இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். வணிகர்கள் அரசு விதிகள் மீறுவதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்ல ஒருங்கிணைப்பை பேண முயற்சிக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப பிரச்சனைகளைத் தீர்ப்பதில் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நல்லது. ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு தசை தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 40
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:20 மணி முதல் காலை 9:50 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்களின் முக்கியப் பணிகளில் இருந்துவந்த இடையூறுகள், உயர் அதிகாரிகளின் உதவியால் தீரும். வியாபாரிகளின் சிரமங்கள் அதிகரிக்கலாம். உங்கள் பணி நீண்ட காலமாக தடைப்பட்டிருந்தால், அதை மீண்டும் தொடங்கும் முயற்சிகள் தோல்வியடையக்கூடும். அவசரப்படாமல் பொறுமையாக இருந்தால் நல்லது. பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடல்நலம் பலவீனமாக இருக்கும். இன்று உங்களுக்கென போதுமான நேரம் கிடைக்காமல் போகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 4 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, தொழிலதிபர்கள் தங்களின் கடந்த கால நஷ்டத்தை ஈடுசெய்கிறேன் என அவசரப்பட்டு எதையும் செய்யாதீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த, புதிய வருமான ஆதாரத்தைத் தேட வேண்டும். மேலும், கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். வீட்டில் சூழல் நன்றாக இருக்கும். வார இறுதியில் ஏதாவது சிறப்பாக திட்டமிட முயற்சிப்பது நல்லது. கவனக்குறைவால் உடல்நலம் பாதிக்கப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, உங்களுக்கு முதுகு அல்லது இடுப்பு சம்பந்தமான பிரச்சனை இருந்தால், தொடர்ந்து நீண்ட நேரம் உட்கார்ந்தபடி வேலை செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை மாற்றத்திற்கான நேரமிது. வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று, குறைந்த முயற்சியில் பெரிய பலன்களைப் பெற வலுவான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். அதிகப்படியான அலைச்சலால் உடற்சோர்வு அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 7 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று உங்கள் திருமண வாழ்வில் மறக்க முடியாத நாட்களில் ஒன்றாக இருக்கலாம். வேலை அல்லது வியாபாரம் எதுவாக இருந்தாலும், இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். வியாபாரிகளுக்கு புதிய தொழில் முன்மொழிவு வரலாம். உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வைப் பெறலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிகப்படியான வறுத்த, பொரித்த அல்லது காரமான உணவைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மாலை 5 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு பண விஷயத்தில் சாதகமான நாளாக இருக்காது. கைக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிட நேரிடலாம். வேலையில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். தொழிலதிபர்களின் பெரிய ஒப்பந்தம் சில காரணங்களால் பாதியில் நிற்கலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் பல பணிகளைக் கையாள வேண்டியிருக்கும். காதலைப் பொறுத்தவரை இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் காலை 9 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் உறுதித்தன்மை இருக்கும். பண விஷயத்தில் இன்று சிறப்பான நாளாக இருக்கும். வருமானம் பெருகும். விரைவில் நீங்கள் அனைத்து கடன்களிலிருந்தும் விடுபடலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் வரலாம். வியாபாரிகள் தங்கள் வியாபாரத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, மற்றவர்களின் விஷயங்களில் அதிகமாக தலையிடுவதைத் தவிர்க்கவும். அலுவலகச் சூழல் சாதகமாக இருக்கும். இன்று அனைத்து வேலைகளையும் விரைவாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளும் உங்களால் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். வியாபாரிகள் லாபம் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று நீங்கள் வேலை விஷயமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று ஆரோக்கியத்தின் அடிப்படையில் சாதகமான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை



Click it and Unblock the Notifications











