Today Rasi Palan 26 August 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பொருளாதார நிலையில் ஏற்றத்தைக் காணலாம்...

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் ரோஹிணி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்ட் 26ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 26 August 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல அறிகுறியைக் கொடுக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியர்கள் சிலர் உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம். கூடுதல் கவனம் தேவை. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று மிகவும் சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாதீர்கள. அலுவலகத்தில், எந்தவொரு வேலையையும் அவசரத்திலும், பீதியிலும் செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில், உங்கள் சிறு தவறு பலரது கோபத்தைத் தூண்டும். உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பும் உங்களிடமிருந்து திரும்பப் பெறப்பட வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் காலை 8:55 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இன்று உங்களது நீண்ட கால பிரச்சனை தீரும். உங்கள் மனதை நெருக்கமான ஒருவருடன் பகிர்ந்து கொள்ளலாம். வேலையில் இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வேலைகள் அனைத்தும் தடையின்றி முடிவடையும். இன்று உங்களுக்கு முக்கியமான நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் உடல்நிலையில் சிறிதும் அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, வணிகர்கள் இன்று ஏதேனும் பெரிய ஒப்பந்தம் செய்யப் போகிறீர்கள் என்றால், உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்தவும். இல்லையெனில் உங்கள் வேலை கெட்டுவிடும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சோம்பலை கைவிடுவது நல்லது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:20 மணி முதல் மாலை 3 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, தொழிலதிபர்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்ட திட்டத்தை மீண்டும் தொடங்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். அதிகப்படியான செலவைத் தவிர்க்கவும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 7 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ள இது சரியான நேரம் கிடையாது. பணத்தின் அடிப்படையில் இன்றைய நாள் கலவையான நாளாக இருக்கும். பெரியவர்களை எப்போதும் மரியாதையுடன் நடத்தவும். சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் லேசான உடற்பயிற்சி செய்வதுடன், நேரத்திற்கு உணவு உண்பதையும் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் காலை 8:05 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, பங்குச் சந்தையில் பணிபுரிபவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சாதகமாக இருக்கும். மிகப்பெரிய நிதி ஆதாயத்தைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பெரிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் விரைவில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடையலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் நெருங்கிய ஒருவருக்கு சிறப்பான பரிசையும் வழங்க முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அன்புக்குரியவர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வணிகர்கள் ஆபத்தான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் முடிவுகளை எடுக்காதீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த, உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, குழந்தைகள் தொடர்பான கவலைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். பணத்தைப் பற்றி பேசினால், இன்று உங்களுக்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். வேலை அடிப்படையில் இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:15 மணி முதல் காலை 8:15 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, இன்று உங்கள் வீட்டின் சூழல் மேம்படும். இன்று அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். பெற்றோரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் சில மதிப்புமிக்க பொருட்களை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் முக்கியமான விவாதம் நடத்தலாம். உங்கள் நம்பிக்கை இன்று அவர்களை மிகவும் கவர்ந்திழுக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, தொழிலதிபர்கள் இன்று புதிய வணிக திட்டங்களுக்கான வாய்ப்பைப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். நீங்கள் சமீபத்தில் உங்கள் புதிய வேலையில் சேர்ந்திருந்தால், இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். பொருளாதார நிலையில் பலம் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, நிதி நெருக்கடியைத் தவிர்க்க, தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும். அவசர அவசரமாக பண பரிவர்த்தனையைகளைச் செய்யாதீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள வேலைகளை விரைவில் முடிக்க முயற்சிக்கவும். அலட்சியம் விலை உயர்ந்ததாக இருக்கலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை

Story first published: Saturday, August 26, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion