Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
Today Rasi Palan 14 November 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது....
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். நவம்பர் 14ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.30-8 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 3.00-4.30 மணி வரை. குளிகை காலை 12.00-1.30 மணி வரை. எமகண்டம் காலை 9.00-10.30 மணி வரை. சூலம் - வடக்கு திசை. பரணி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்களுக்கு இன்று நல்ல நாளாகும். அலுவலகத்தில் உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். வியாபாரிகளுக்கு மாற்றத்திற்கான நேரமிது. நீங்கள் உங்கள் முடிவுகளை கவனமாக எடுத்தால், நிச்சயமாக சரியான முடிவுகளைப் பெறலாம். இன்று பண விஷயத்தில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்ய வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் உறவில் இணக்கம் ஏற்படும். உடல்நலம் சீராகும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5:30 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, மாணவர்கள் ஏதேனும் போட்டித் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தால், கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் வெளிநாடு சென்று உயர்கல்வி பெற விரும்பினால், இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வியாபாரிகள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 9 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உங்கள் கவனக்குறைவால் உடல்நலம் பாதிக்கப்படலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்யாதீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அலுவலகத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டால், நேரத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். வணிகர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்காது. பெரிய லாபத்தை எதிர்பார்த்தால், நீங்கள் ஏமாற்றமடைய நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:05 மணி முதல் காலை 7:30 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, சிலர் தவறான தகவல்களைத் தந்து உங்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்யலாம். எனவே, எச்சரிக்கையாக இருக்கவும். முக்கியமான வணிக முடிவுகளை கவனமாக சிந்தித்து எடுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். நிலுவையில் உள்ள பணி சுமை அதிகரிக்கலாம். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்தால் பெரிய பிரச்சனை இருக்காது. உடல் ஆரோக்கியம் கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 42
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று சில நல்ல செய்திகள் கிடைக்கும். பெரிய தொழிலதிபர்கள் இன்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். புதிய முதலீட்டு முடிவுகளில் அவசரப்பட வேண்டாம். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் உறுதித்தன்மை இருக்கும். பணத்தின் அடிப்படையில் இன்று சராசரி நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று நீங்கள் உடலின் சில பகுதிகளில் வலியால் சிரமப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:20 மணி முதல் மாலை 3:30 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். திருமணமானவர்களுக்கு இன்று மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். வேலை தொடர்பான பெரிய பிரச்சனை தீரும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் சில முக்கியமான பொருட்களை வாங்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் ஒவ்வாமை அல்லது தொற்றுநோய்களால் பாதிக்கப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் மாலை 4 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். நீங்கள் கூட்டு வியாபாரம் செய்தால், உங்கள் கூட்டாளருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று கலவையான நாளாக இருக்கும். பணிச்சுமை குறையும். நிதி நிலைமை மோசமடைந்ததற்கான அறிகுறிகள் உள்ளன. வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, மாணவர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் நீண்ட காலமாக பதவி உயர்வுக்காக உழைத்துக்கொண்டிருந்தால், இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். வியாபாரிகளின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படலாம். திருமண வாழ்வில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். வேலையுடன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்துங்கள். வருமானத்தை விட அதிகமாக செலவிட வேண்டாம். ஆரோக்கியம் இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:50 மணி முதல் மதியம் 1 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று நீங்கள் வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பணம் தொடர்பான கவலைகளில் இருந்து விடுபடலாம். வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் இன்று புதிய வேலைகள் தொடங்குவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் லாபத்திற்கு பதிலாக நஷ்டம் ஏற்படக்கூடும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். இன்று உங்கள் பெற்றோருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட வலுவான வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். பணம் சம்பந்தமாக தகராறு ஏற்படலாம். தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்காமல் இருக்க புத்திசாலிதனமாக செயல்படவும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரியின் கோபத்தைச் சந்திக்க நேரிடலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் தலைவலி, உடற்சோர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 40
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மதியம் 2 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, உங்கள் கடுமையான நடத்தை உங்கள் திருமண வாழ்க்கையில் பதற்றத்தை அதிகரிக்கும். பண விஷயத்தில் இன்று கலவையான நாளாக இருக்கும். இன்று கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் திடீர் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரிகள் இன்று வேலை நிமித்தமாக நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கும். உங்களின் இந்த பயணம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். விருந்தினர்கள் திடீரென்று உங்கள் வீட்டிற்கு வரக்கூடும். ஆரோக்கியத்தை காக்க தேவையற்ற கவலைகளில் இருந்து விலகி இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:15 மணி முதல் காலை 8:55 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி இருங்கள். இன்று வியாபாரிகளுக்கு பெரும் நிம்மதி கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது. இன்று உங்கள் திருமண வாழ்க்கையின் சிறந்த நாட்களில் ஒன்றாக இருக்கலாம். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அவர்களிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை



Click it and Unblock the Notifications











