Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
Today Rasi Palan 14 May 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பழைய கடனை அடைப்பதில் வெற்றி காண்பார்கள்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் பூசம், ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று அலுவலகத்தில் உங்களுக்கு சில கடினமான பணிகள் ஒதுக்கப்படலாம். வணிகர்கள் பெரிய லாபத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இன்று நீங்கள் ஏமாற்றம் அடையலாம். ஆனால், எத்தகைய சூழலிலும் நீங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும். நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால், அதை விரைவில் திருப்பிச் செலுத்த முயற்சிக்கவும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, சில காலமாக உங்கள் திறமையில் இருந்துவந்த தொய்வு நீங்கி, இன்று மீண்டும் புத்துணர்வுடன் வேலையைத் தொடங்கலாம். உங்கள் கடின உழைப்பு மற்றும் திறமையின் வலிமையால் உங்கள் நிலையை வலுப்படுத்த முடியும். இன்று வணிகர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பான வியாபாரம் செய்தால் நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு இன்று நல்ல அறிகுறிகள் தென்படும். உங்களின் தடைப்பட்ட ஒப்பந்தம் இன்று நிறைவேறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. நிதி ஆதாயமும் சாத்தியமாகும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு இன்று நல்ல செய்தி கிடைக்கும். பணம் தொடர்பான கவலைகள் உங்களை ஆட்டிப்படைக்கும். நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடலாம். வாழ்க்கைத்துணையுடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படலாம். மன உறுதியுடன் இருக்க, எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:10 மணி முதல் மதியம் 1 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று நீங்கள் பிறருக்கு உதவுவதற்கு ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக பயணங்களுக்கும் திட்டமிடலாம். இன்று நீங்கள் பண விஷயத்தில் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியின் கண்டிப்பான அணுகுமுறை இன்று உங்கள் சிரமங்களை அதிகரிக்கும். வேலையை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணமும் உங்கள் மனதில் தோன்றலாம். தொழிலதிபர்கள் அவசர அவசரமாக முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உங்கள் உடல்நிலை குறித்த கவலை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, நீங்கள் புதிய வீடு, நிலம் வாங்க திட்டமிட்டால், முழு விசாரணை செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் நீங்கள் ஏமாற்றப்படலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். பணப்பற்றாக்குறையால் தடைபட்ட வேலையை இன்று முடிக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையை அன்புடனும் மரியாதையுடனும் நடத்த முயற்சியுங்கள். உங்களின் கோபம் உங்கள் திருமண வாழ்க்கையில் சங்கடங்களை ஏற்படுத்தும். வேலையில் பரபரப்பாக இருக்கும். உடல் நலத்திலும் இன்று அக்கறை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் பெரிய சாதனைகளைப் பெறலாம். பொறுப்புகளின் சுமை உங்கள் மீது அதிகரிக்கலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். இன்று பணம் சம்பந்தமாக ஒருவருடன் வாக்குவாதம் ஏற்படலாம். எனவே, வீண் விவாதத்தைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், நீங்கள் வறுத்த மற்றும் காரமான உணவைத் தவிர்க்கவும். இல்லையெனில் வயிற்று கோளாறுகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:45 மணி முதல் மதியம் 12:20 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, முன்பின் தெரியாதவர்களிடம் உங்கள் மனதைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில், அவர்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். இன்று பணம் தொடர்பான அனைத்து கவலைகளும் நீங்கும். இன்று உங்கள் மீது பணிச்சுமை அதிகரித்தாலும், பல வேலைகளை ஒரே நேரத்தில் கையாளுவதைத் தவிர்க்க வேண்டும். இன்று வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், சிகரெட், மது போன்ற கெட்ட பழக்கங்களிலிருந்து விலகி இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:18 மணி முதல் இரவு 7:25 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, உங்கள் வீட்டின் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி உங்களுக்கு சில முக்கியமான வேலையை ஒப்படைத்திருந்தால், இன்று அதை சரியான நேரத்தில் முடிக்கவும். இதனால் முதலாளி மிகவும் மகிழ்ச்சியடைவார். வணிகர்கள் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், நிதி இழப்புகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், இன்று நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:30 மணி முதல் மாலை 4:05 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று தொழிலதிபர்களுக்கு வணிக ரீதியான பிரச்சனை மேலும் அதிகரிக்கலாம். பொறுமையை கடைபிடித்தால், விரைவில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக விதிகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உங்கள் சிறு கவனக்குறைவும் இன்று உங்களைச் சிக்கலில் சிக்க வைக்கும். பணத்தின் அடிப்படையில், இன்று கலவையான நாளக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் மேம்படும். அன்றாட பணிகளை முடிப்பதில் உங்களுக்கு உதவுவார்கள். உங்கள் ஆரோக்கியம் குறையலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 5 மணி முதல் காலை 9:20 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, உங்கள் நிதி நிலை மேம்படும். இன்று நீங்கள் பழைய கடனை அடைப்பதில் வெற்றி காண்பீர்கள். இன்று அலுவலகத்தில் முக்கியமான கூட்டத்திற்கு திடீர் அழைப்பு வரலாம். உங்கள் சிறிய வேலையை கூட தவறின்றி செய்து முடிக்க முயற்சிக்கவும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். குழந்தை தொடர்பான கவலைகள் நீங்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு கைகள் அல்லது கால்களில் ஏதேனும் பிரச்சனை இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 42
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9:15 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்களுக்கென சிறிது நேரத்தை ஒதுக்க முடியும். இன்று உறவினர் சிலர் வீட்டிற்கு விருந்துக்கு வரலாம். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருந்தாலும், வெளியே காட்டி கொள்ள வேண்டாம். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், இன்று கடினமாக உழைக்க வேண்டும். எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பான வெற்றி கிடைக்கும். இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 39
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையில் பதற்றமான சூழ்நிலை தோன்றும். மூன்றாம் நபரின் குறுக்கீட்டால், உங்கள் உறவு மோசமடையக்கூடும். பண விஷயத்தில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. திடீரென்று உங்களுக்கு சில முக்கியமான வேலைகள் கொடுக்கப்படலாம். வியாபாரிகள் வேலை ரீதியாக சிறு பயணத்தை மேற்கொள்ள நேரிடும். கூட்டுத் தொழி செய்பவர்களுக்கு பெரிய வெற்றி கிடைக்கும். இன்று எந்த வேலையையும் அவசரப்பட்டு செய்யாதீர்கள். இல்லையெனில், உங்களுக்கு காயம் ஏற்பட நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:50 மணி முதல் இரவு 7:25 மணி வரை



Click it and Unblock the Notifications