Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
Today Rasi Palan 10 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.30-8.30 மணி வரை. மாலை 3.30-4.30 மணி வரை. ராகு காலம் காலை 4.30-6.00 மணி வரை. குளிகை காலை 3.00-4.30 மணி வரை. எமகண்டம் காலை 12.00-1.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, பண விஷயங்களில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். நீங்கள் நிதி ஆதாயத்தைப் பெற வலுவான வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். இன்று உங்கள் முதலாளியிடமிருந்து சில நல்ல ஆலோசனைகளையும் பெறலாம். வியாபாரிகள் இன்று மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். நிலுவையில் உள்ள உங்களின் சில வேலைகள் இன்று முடிவடைய வாய்ப்பு அதிகம். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். உடல்நலத்தில் எந்த விதத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். இன்று உங்களுக்கு வயிற்று வலி, எரிச்சல் உணர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் காலை 9 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, நீங்கள் அலுவலகத்தில் உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் எதிரிகளிடமும் கவனமாக இருங்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வணிகத் திட்டங்களில் நீங்கள் சமீபத்தில் சில மாற்றங்களைச் செய்திருந்தால், நல்ல முடிவுகளைப் பெறலாம். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் சிறு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். இன்று கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 9 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்று நீங்கள் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ளவும். கோபம் மற்றும் மோதலைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சற்று பலவீனமாகவே இருக்கும். அதனால், அன்றைய உங்கள் திட்டங்கள் தடைபடலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாகும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் வணிக முடிவுகளை முழு நம்பிக்கையுடன் எடுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. வெளி உணவைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் இந்த கடின உழைப்பு விரைவில் உங்களுக்கு நல்ல வெற்றியைத் தேடித்தரும். வணிகர்கள் இன்று தங்கள் வணிக முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்கவும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும். இன்று நீங்கள் பொழுதுபோக்கு மற்றும் மகிழ்ச்சிக்காக நிறைய பணம் செலவிடலாம். உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்தால் நல்லது. உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:50 மணி முதல் காலை 11 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்தவும். வணிகர்கள் பணம் தொடர்பான ஏதேனும் பிரச்சனையை எதிர்கொண்டால், இன்று உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணலாம். பணம் சம்பந்தப்பட்ட எந்தவொரு வேலையையும் மிகவும் சிந்தனையுடன் செய்தால் நல்லது. குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும். நீண்ட நேரம் சாப்பிடலாமல் இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:20 மணி முதல் மாலை 4:20 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, அலுவலகத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கலாம். உயர் அதிகாரிகளுடனான உங்கள் ஒருங்கிணைப்பும் மேம்படும். வியாபாரிகள் அதிக லாபம் பெறலாம். நீண்ட நாட்களாக தடைப்பட்ட பணம் இன்று திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் ஒரு முக்கியமான வணிக முடிவையும் எடுக்கலாம். இன்று பேசும்போது தவறான வார்த்தைகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் சிறிய விஷயங்களில் வாக்குவாதம் ஏற்படலாம். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க, உங்கள் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9:15 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, எந்தவொரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்காமல் இருப்பது நல்லது. வியாபாரிகள் இன்று ஆபத்தான வேலைகள் செய்வதைத் தவிர்க்கவும். குறிப்பாக சட்ட விஷயங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் கவனக்குறைவான அணுகுமுறை உங்கள் குடும்ப உறுப்பினர்களை வருத்தமடையச் செய்யலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையில் இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இன்று ஒரு சிறப்பு நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நீங்கள் சொத்து போன்றவற்றில் முதலீடு செய்ய விரும்பினால் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். விருந்தினர்கள் சிலர் இன்று உங்கள் வீட்டிற்கு வரலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். அதன் தாக்கம் உங்கள் வேலையிலும் தெரியும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிக்க வேண்டிய நேரமிது. பயனற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். வணிகர்கள் இன்று பெரிய ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். விரைவில் உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் கடினமாக உழைத்தும் முன்னேறவில்லை என்றால், பொறுமையாக இருப்பது நல்லது. பண விஷயத்தில் இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உதவியால் உங்களின் சில முக்கிய பிரச்சனைகள் தீர்க்கப்படும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மதியம் 2:20 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, உங்கள் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். நன்கு யோசித்த பின்னரே உங்கள் முடிவுகளை எடுக்க வேண்டும். அப்போது தான் நிதி நெருக்கடியில் இருந்து விரைவில் விடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மாற்றத்திற்கான நேரமிது. தொழிலதிபர்கள் தங்கள் துறையில் புகழ்பெற்ற நபரின் வழிகாட்டுதலைப் பெறலாம். அதனால், நீங்கள் விரைவில் நல்ல முன்னேற்றதைத் அடையலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, வீட்டில் பெரியவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். புதிய வேலை தொடங்கும் உங்கள் திட்டத்தில் இருந்துவந்த பிரச்சனை உங்களுக்கு நெருக்கமான ஒருவரின் உதவியுடன் தீர்க்கப்படும். அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரியுடன் ஒரு முக்கியமான கலந்துரையாடலை மேற்கொள்ளலாம். வியாபாரிள் இன்று திடீரென சிறு பயணங்களை மேற்கொள்ள நேரிடும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், யோசிக்காமல் அதிகம் செலவு செய்யாதீர்கள். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். நீங்கள் உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:30 மணி முதல் காலை 9 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கடந்த சில நாட்களாக உங்கள் தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், இன்று அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு இன்று நல்ல நாள். உத்தியோகஸ்தர்களின் அனைத்து வேலைகளும் இன்று எளிதாக முடிவடையும். சக ஊழியர்களுடன் நல்லுறவைப் பேண முயற்சி செய்ய வேண்டும். தேவையற்ற சச்சரவுகள் உங்கள் வேலையைப் பாதிக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை



Click it and Unblock the Notifications











