Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
Today Rasi Palan 09 May 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் செலவுகளைக் குறைக்க அறிவுறுத்தப்படுகிறது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் கார்த்திகை, ரோஹிணி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 09ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, வேலை விஷயமாக இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் செயல்திறனால் பெரிய முன்னேற்றத்தை அடையலாம். திருமண வாழ்க்கையில் பதற்றமான சூழ்நிலை தோன்றும். இன்று உங்கள் துணையின் மனநிலை அவ்வளவு சரியாக இருக்காது. பண விஷயத்தில் இன்று நல்ல நாளாக இருக்கும். இன்று செலவுகள் கணிசமாக குறையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 2 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த, நீங்கள் புதிய வருமான ஆதாரத்தை தேட வேண்டிய நேரமிது. இது தவிர, உங்கள் செலவுகளையும் குறைக்க வேண்டும். தொழில் வாழ்க்கையில் சில அலைச்சல்கள் ஏற்படலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்களின் சில முக்கியமான வேலைகளில் தடையாக இருக்கலாம். உங்களின் இந்தப் பிரச்சனை தற்காலிகமானது என்றாலும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் மதியம் 12 மணி வரை
மிதுனம்
மிதுள ராசிக்காரர்களே, வணிகர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். நீங்கள் சமீபத்தில் ஏதேனும் புதிய முதலீடு செய்திருந்தால், இன்று உங்களுக்கு கவலையான முடிவு கிடைக்கும். வீட்டிலோ அல்லது பணியிடத்திலோ இன்று உங்கள் நடத்தையில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் நீங்கள் தவறான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தமட்டில், இன்று கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 34
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9:15 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பாகவும் சோர்வாகவும் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறலாம். வணிகர்கள் எந்த ஒரு தடைப்பட்ட வேலையையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில், உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண விஷயத்தில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்கள் வருமானத்தின் திடீர் அதிகரிப்பு காரணமாக உங்கள் நிதி சிக்கல்கள் தீர்க்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் பெரிய நிதி பரிவர்த்தனைகளைச் செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரி நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8:20 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, தொழிலதிபர்கள் இன்று ஒரு முக்கிய வணிக முடிவை எடுக்க வேண்டியிருக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் நீங்கள் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். வேலைக்காகவும் குடும்பத்திற்காகவும் போதுமான நேரத்தை ஒதுக்க முயற்சியுங்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணை இன்று உங்களிடம் ஒரு பெரிய கோரிக்கையை முன்வைக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்குள் வாக்குவாதம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சரிவு இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, தொழில் ரீதியாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், எந்தவொரு முடிவையும் கவனமாக எடுக்கவும். அவசர முடிவுகள் அவஸ்தையில் முடியும். உங்கள் நிதி நிலை நன்றாக இருந்தாலும், தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். அன்புக்குரியவரின் முழு ஆதரவும் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், அதிக மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:35 மணி முதல் இரவு 8 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, வேலையில் இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். இன்று உங்களின் அனைத்து வேலைகளும் திட்டமிட்ட படி முடிவடையும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நலம் குறித்த கவலை சற்று அதிகரிக்கலாம். இந்த நேரத்தில், நல்ல கவனிப்புடன், உணர்ச்சிபூர்வமான ஆதரவும் தேவை. ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், ஆரோக்கியத்தையும் நீங்கள் முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:15 மணி முதல் மதியம் 12 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறலாம். இன்று அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அமைதியான மனதுடன் வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். தடைப்பட்ட பணத்தையும் பெறலாம். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மதியம் 2:55 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டுமெனில், சீரான உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். உத்தியோகஸ்தர்களின் நேர்மறை மற்றும் தன்னம்பிக்கை அலுவலகத்தில் உள்ள அனைவரையும் கவர்ந்திழுக்கும். வியாபாரிகள் சரியான முடிவுகளால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். நீங்கள் பெரிய நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வீட்டின் சூழல் மேம்படும். இன்று உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிட வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலையில் ஏற்றம் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:25 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, நீண்ட நாட்களாக வாங்க நினைத்த விலையுயர்ந்த பொருளை இன்று வாங்கலாம். குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இன்று அலுவலகத்தில் உங்கள் எந்த வேலையையும் முடிக்காமல் விடாதீர்கள். ஒரு சிறிய கவனக்குறைவும் கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பை அழித்துவிடும். வியாபாரிகளுக்கு இன்று சராசரி நாளாக இருக்கும். உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஒவ்வொரு நாளும் லேசான உடற்பயிற்சியுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, இன்று உங்கள் பொன்னான நேரத்தைத் தேவையற்ற விஷயங்களில் வீணாக்காதீர்கள். நீங்கள் தவறான பாதையில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் பெரிய சிக்கலில் சிக்கக்கூடும். அலுவலகத்தில் உங்களின் முக்கியமான கோப்புகள் தொலைவதால், உங்கள் பணிக்கு இடையூறு ஏற்படலாம். இன்று உயர் அதிகாரிகளும் உங்களுடன் சற்று அதிருப்தி அடைவார்கள். தொழிலதிபர்கள் லாபம் பெற கடுமையாக போராட வேண்டியிருக்கும். இன்று நீங்கள் முதுகுவலியால் சிரமப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மதியம் 2 மணி வரை



Click it and Unblock the Notifications











