Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
Today Rasi Palan 07 November 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தணும்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். நவம்பர் 07ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 8.15-9.00 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 3.00-4.30 மணி வரை. குளிகை காலை 12.00-1.30 மணி வரை. எமகண்டம் காலை 9.00-10.30 மணி வரை. சூலம் - வடக்கு திசை. உத்திராடம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, வேலை தொடர்பான எந்தவொரு பெரிய பிரச்சனையும் இன்று தீர்க்கப்படும். வியாபாரிகள் எந்தவொரு புதிய தொழிலிலும் முதலீடு செய்வதற்கு முன்பு நன்கு ஆராய வேண்டும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். பணத்தைப் பொறுத்தவரை இன்று வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். பழைய நோய்கள் மீண்டும் வெளிபடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:45 மணி முதல் இரவு 9 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை அலட்சியப்படுத்தாதீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தை உங்களிடம் சரியாக இருக்காது. அலுவலகத்தில் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்தவும். வியாபாரிகள் லாபம் ஈட்ட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எளிதில் முடிக்கும் காரியங்கள் கூட தடைபடலாம். பண விஷயத்தில் இன்று அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் காலை 9:55 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்கள் போன்றவற்றையும் வாங்குவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், தொடர்ந்து நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதைத்
தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, அலுவலகத்தில் முதலாளி உங்களுக்கு ஏதேனும் முக்கியமான வேலையை ஒப்படைத்திருந்தால், அதற்கு முழு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகளுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். தேவையில்லாமல் அலைய வேண்டி வரலாம். உங்கள் நிதி நிலை வலுவடையும். விரைவில் உங்கள் கடனில் இருந்து விடுபடலாம். காதல் விஷயங்களில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:15 மணி முதல் மதியம் 2:55 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் பெரிய அளவில் வணிகம் செய்ய வாய்ப்பைப் பெறுவார்கள். இன்று நீங்கள் சில புதிய உத்திகளையும் கையாளலாம். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். இன்று உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் கவனம் செலுத்த வேண்டும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். உங்கள்
உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 7:15 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு பணம் சம்பந்தமாக ஒருவருடன் தகராறு ஏற்படலாம். வேலை அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆடை வியாபாரிகளுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் உடன்பிறப்புடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கோபமும் அவசரமும் விஷயங்களை மோசமாக்கலாம். ஆரோக்கியமாக இருக்க, தேவையற்ற கவலைகளை விட்டு விலகி இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். பண விஷயத்தில் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். கடந்த காலத்தில் எடுத்த தவறான முடிவுகளின் விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், உங்கள் எதிர்கால கனவு நிறைவேறாமல் போகலாம். உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:55 மணி முதல் காலை 9:50 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, முன்னோர் சொத்து தொடர்பான எந்த விஷயமும் உங்களைத் தொந்தரவு செய்யலாம். குடும்ப வாழ்வில் சுமுகமான சூழ்நிலை நிலவும். வியாபாரிகள் இன்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று நீங்கள் சண்டைகளைத் தவிர்க்க வேண்டும். இன்று உங்களுக்கு சில முக்கியமான வேலைகள் ஒதுக்கப்படலாம். பண விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். பெரிய நிதி பரிவர்த்தனைகள் செய்வதைத் தவிர்க்கவும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 11 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். திருமணமாகாதவர்களுக்கு, திருமணம் பற்றி இன்று வீட்டில் விவாதிக்கப்படலாம். எதிர்காலத்தில் நிதி நெருக்கடியைத் தவிர்க்க, உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தவும். அலுவலகத்தில் உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். வியாபாரிகள் விரும்பிய லாபத்தைப் பெறலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:55 மணி முதல் மதியம் 12 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் சமீபத்தில் சந்திந்த இழப்பை ஈடுசெய்ய வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் மனநிலை நன்றாக இருக்காது. எத்தகைய சூழலிலும், நீங்கள் அமைதியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். இல்லையெனில், உங்கள் வீட்டின் அமைதி குலைந்து போகலாம். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று குழந்தைகளுடன் இனிமையாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகளின் பொருளாதார நிலை மேம்படும். இன்று உங்கள் வணிகத் திட்டங்களிலும் சில மாற்றங்களைச் செய்யலாம். மாணவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். உயர்கல்வி தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி பெறலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மதியம் 2:30 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்வில் மனஅழுத்தம் ஏற்படலாம். உங்கள் குழந்தையின் கல்வி தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் அவசரப்படாதீர்கள். இன்று பண விஷயத்தில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நல்ல உறவைப் பேண முயற்சிக்க வேண்டும். உங்களின் பிடிவாத குணமும் உங்கள் வேலையைப் பாதிக்கும். வியாபாரிகளுக்கு இன்று சராசரி நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:45 மணி வரை



Click it and Unblock the Notifications











