Latest Updates
-
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா?
Today Rasi Palan 04 November 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். நவம்பர் 04ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 9.00-10.30 மணி வரை. குளிகை காலை 6.00-7.30 மணி வரை. எமகண்டம் காலை 1.30-3.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. கேட்டை, மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று சவாலான நாளாக இருக்கும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையில் அதிகம் தலையிட வேண்டாம். நிதி நிலை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கம் ஏற்படும். உங்கள் அன்புக்குரியவரிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியமாக இருக்க, உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்கள் பெற்றோர் உடல்நிலை குறித்து சற்று கவலை கொள்வீர்கள். அவர்களுக்கு சரியான கவனிப்பு தேவை. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். நிதி ரீதியாக இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் வருமானம் உயரும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். எனவே, கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்ககே, உங்களின் நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து இன்று நீங்கள் விடுபடலாம். உங்கள் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வலுவான வாய்ப்புள்ளது. பணம் சம்பாதிக்க உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுவதன் மூலம் உங்கள் உறவு வலுவடையும். அலுவலகச் சூழல் சாதகமாக இருக்கும். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் பெறலாம். தொழிலதிபர்கள் புதிய தொழிலை தொடங்க இதுவே சரியான நேரம். உடல்நலம் சீராகும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்ககே, வியாபாரிள் இன்று பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம். இன்று நீங்கள் உங்கள் வியாபாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல சில திட்டங்களை செய்யலாம். அரசு ஊழியர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் கடன் சுமை அதிகரிக்கும் அளவிற்கு செலவு செய்யாதீர்கள். குடும்ப வாழ்வில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் மீது கோபமாக இருந்தால், அவர்களை சமாதானப்படுத்த இன்று சரியான நாள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:45 மணி முதல் காலை 10:25 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்ககே, நீங்கள் அலுவலக விதிகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சிறு கவனக்குறைவால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். வியாபாரிகள் சட்டத்திற்குப் புறம்பாக வேலை செய்வதைத் தவிர்க்கவும். அவசரப்பட்டு எந்தவொரு வேலையும் செய்யாதீர்கள். பிறரைக் கவர அதிகமாகச் செலவழிக்கும் தவறைச் செய்யாதீர்கள். இன்று நீங்கள் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். உங்கள் கோப குணம் உங்கள் வீட்டின் அமைதியைக் கெடுக்கும். கோபம் மற்றும் மன உளைச்சல் காரணமாக உடல்நிலை மோசமடையலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளின் திடீர் பயணத்தால் முன்னேற்றப் பாதை திறக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். தந்தையால் அனுகூலம் உண்டாகும். இன்று சில விருந்தினர்கள் வீட்டிற்கு வரலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், சிந்திக்காமல் மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:15 மணி முதல் இரவு 8:10 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். உங்களின் அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி முடிக்கப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மரியாதை கூடும். நீங்கள் உங்கள் வேலையை மாற்ற திட்டமிட்டால், அவசரப்பட வேண்டாம். வியாபாரிகள் இன்று லாபம் ஈட்ட கடுமையாக போராட வேண்டியிருக்கும். பொருளாதார நிலை மேம்படும். நிதி முடிவுகளை நன்கு சிந்திக்க எடுக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8:15 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று ஒரு பெரிய முதலீட்டை செய்யலாம். அலுவலகத்தில் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதைத் தவிர்க்கவும். வணிகர்கள் நீதிமன்றத்திற்கு அலைய வேண்டியிருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். நாளின் இரண்டாம் பகுதியில் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். உணவில் கவனம் செலுத்தாவிட்டால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 4 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, வேலையில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தால் சக ஊழியர்களின் உதவியைப் பெறலாம். உங்கள் வேலையை குறித்த நேரத்தில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். தொழிலதிபர்களின் பொருளாதார பிரச்சனைகள் தீரும். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகளில் சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான உணவை அதிகம் உண்ணவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் காலை 10:30 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, உங்களைப் பற்றிய ரகசியங்களை பிறருடன் அதிகம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். பண விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் வேலைகள் அனைத்தும் தடையின்றி முடிவடையும். வியாபாரிகள் அரசு விதிகளை மீறுவதைத் தவிர்க்கவும். உங்கள் சிறிய தவறு உங்களுக்கு பெரும் சிக்கலை உண்டு பண்ணும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை மிகவும் நல்ல மனநிலையில் இருப்பார். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதாரண நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 2:30 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று நீங்கள் சில முக்கியமான நிதி முடிவுகளை எடுக்கலாம். முன்னோர் சொத்து சம்பந்தமாக ஏதேனும் தகராறு இருந்தால், இன்று அது தீரும். அலுவலகத்தில் நேரத்தை முழுவதுமாக கவனிக்க வேண்டும். வியாபாரிகளுக்கு இன்று கலவையான லாபம் கிடைக்கும். நீங்கள் ஒரு புதிய திட்டத்திற்கான வேலையைத் தொடங்கவிருந்தால், ஒரு பெரிய தடை ஏற்படலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் புறக்கணிக்காதீர்கள். அவர்களின் மகிழ்ச்சிக்கும் நீங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ் நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, இன்று உங்கள் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி நீங்கள் மிகவும் கவலைப்படுவீர்கள். இன்று அலுவலகச் சூழல் நன்றாக இருக்காது. பணிச்சுமை அதிகரிக்கலாம். உயர் அதிகாரிகளின் நடத்தையும் உங்களைத் தொந்தரவு செய்யலாம். எனவே, நீங்கள் உங்கள் வேலையை கவனமாக செய்யுங்கள். வணிகர்கள் தங்கள் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியைச் சந்திக்க நேரிடும். இன்று நீங்கள் சில ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை



Click it and Unblock the Notifications











