Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
திருப்பதியில் பக்தர்கள் இனி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை.. ஏன் தெரியுமா?
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். அப்படி வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய மிக நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்கின்றனர்..
திருமலைக்கு வரும் பக்தர்களில் 5 முதல் 10% மட்டுமே சிபாரிசு கடிதத்தில் சாமியை தரிசனம் செய்கின்றனர்.. மற்றவர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்துதான் ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர்..

நீண்ட வரிசையில் ஏன் காத்திருக்கின்றனர்..
திருப்பதி தேவஸ்தானம் விஐபி தரிசனத்திற்காக சாதாரண பக்தர்களுக்கு நேர ஸ்லாட் டோக்கன்களை வழங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டைம் ஸ்லாட் டிக்கெட் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தின்படி வரிசையில் வந்தால் 3 மணி நேரத்திற்குள் ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்யும். இருப்பினும்,பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தை விட முன்னதாகவே வரிசையில் நுழைந்து வருகின்றனர். இதனால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது..
திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்படுகிறது. ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் திருப்பதி ரயில் நிலையம், பேருந்து நிலையம், சீனிவாசம், விஷ்ணு நிவாசம், அலிபிரி பூதேவி வளாகம் ஆகிய இடங்களிலும் பக்தர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அறிவிப்புகள் தொடங்கப்படும் மக்களுக்கு சொல்லப்பட்டு வருகிறது என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனால் முன்கூட்டியே வந்த பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல், திருப்பதியில் உள்ள மற்ற கோயில்களுக்குச் செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.. அதுமட்டுமல்லாமல் கடந்த சில நாட்களாக நேரம் குறிப்பிடப்பட்டுள்ளபடி மட்டுமே பக்தர்கள் தரிசன வரிசையில் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க தேவஸ்தானம் வேண்டுகோள்
கடந்த சில நாட்களாக, டோக்கன்கள் அல்லது டிக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே தரிசன வரிசையில் நுழைய தேவஸ்தானம் அனுமதித்து வருகிறது. ஆனால், இன்னும் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வெகு சீக்கிரம் வந்து, வெளியில் காத்திருந்து சிரமப்படுகின்றனர். எனவே, டயல் யுவர் இஓ திட்டத்தின் மூலம், பக்தர்கள் நேரத்தை தெரிந்துக் கொண்டு, நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது..
அதனால் இனிமேல் திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக தங்களுக்கான நேரத்தை தெரிந்துக் கொண்டு அதை அப்படியே கடைபிடித்தால் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க முடியும் என செயல் அதிகாரி ஷியாமளா ராவ் வேண்டுகோள் விடுத்தார்.



Click it and Unblock the Notifications