Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... அதிரடியாக அறிவித்த தேவஸ்தானம்!
கலியுகத்தின் வாழும் கடவுளான ஏழுமலையான் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் இடம் திவ்ய ஸ்தலம் என்றழைக்கப்படும் திருமலை திருப்பதியாகும்... இந்த தலத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக தினமும் வந்து செல்கின்றனர். ஏழுமலையானின் திவ்யமங்கல வடிவத்தைக் கண்டு பரவசமடைகின்றனர்..
மேலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்வது பிறவியின் புண்ணிய பலனாக கருததுகின்றனர்.. தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள்... திருப்பதியில் இருந்து திருமலைக்கு சாலை மற்றும் நடைபாதை வழியாக செல்கின்றனர்.. பக்தர்கள் தங்கள் சொந்த வாகனங்களுடன் ஆர்டிசி பஸ்களில் பயணம் செய்கின்றனர் . ஆனால் இப்படி வாகனங்களில் செல்லுவோருக்கு திருப்பதி தேவஸ்தானம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.. வாங்க அது என்னென்ன கட்டுப்பாடுகள்? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

திருமலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் ஏழுமலைகளையும் தாண்டி அமைந்துள்ளது. மலை மீது உள்ள ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு செல்லும் பக்தர்களில் அதிகமானவர்கள் ரயில் மற்றும் பஸ்கள் மூலமே sஎல்லுகின்றனர்.. இதில் சிலர் தனியாக வேன், கார், இருச்சக்கர வாகனம் போன்றவற்றிலும் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்வதுண்டு.. திருப்பதிக்கு எப்படி வந்தாலும், கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வாகனங்களில் செல்பவர்கள் சாலை வழியாகவும், பாத யாத்திரையாக வருபவர்கள் அலிபெரி அல்லது ஸ்ரீவாரி மெட்டு வழியாக மட்டுமே நடந்து செல்ல முடியும்.
தேவஸ்தானத்தின் அறிவிப்பு என்ன?
இதில் திருப்பதிக்கு மிக அருகில் உள்ள ஆந்திராவின் பல பகுதிகளில் இருந்தும், தமிழகத்தில் ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள ஊர்களில் இருந்தும் , செல்லும் பக்தர்களில் சிலர் இரு சக்கர வாகனங்களில் திருப்பதி கோயிலுக்கு செல்வதுண்டு... இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.. அதில், திருமலைக்கு வரும் இரு சாலை வழி பாதைகளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இரு சக்கர வாகனங்களை இயக்க வேண்டும். இந்த உத்தரவு ஆகஸ்ட் 12ம் தேதி முதல் செப்ட்டம்பர் மாதம் கடைசி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கட்டுபாட்டிற்கு காரணம் என்ன தெரியுமா?
தற்போது விலங்குகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் காலம் என்பதால், இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் செல்வது ஆபத்தானது என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர். இதன் காரணமாக வரும் செப்டம்பர்30-ம் தேதி வரை திருமலை மலைப்பாதையில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இருச்சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை நேற்று முதல் ( ஆகஸ்ட் 12ஆம் தேதி) உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மோட்டார் சைக்கிள்களில் திருமலைக்கு வருவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்றும் தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.
திருப்பதியில் இந்த உற்சவம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சம்பங்கி மண்டபத்தில் வருடாந்திர பவித்ரோற்சவ விழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக வரும் 18-ம் தேதி காலை நடைபெற உள்ள திருக்கல்யாண உற்சவத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதனால் பக்தர்கள் அவர்களின் திருப்பதி வருகை குறித்து யோசித்து முடிவெடுத்து, அதற்கு ஏற்ப ஏழுமலையானனி தரிசிக்க வர வேண்டும்..



Click it and Unblock the Notifications
