Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
திருப்பதிக்கு டிக்கெட் இல்லாமல் செல்ல வழி இருக்கு... எப்படி தெரியுமா?
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வது அவ்வளவு எளிதல்ல. குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து தயாராக இருக்க வேண்டும். திருப்பதி கோயில் காலண்டர் படி, 300 ரூபாய்க்கு சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இவை ஒவ்வொரு மாதமும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். அதனை பார்த்து முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
அப்படி 300 ரூபாய் டிக்கெட் இல்லை என்றால்.. சுப்ரபாதம், சஹஸ்ரதிபாலங்கரணம், அங்கபிரதக்ஷிணை போன்ற சிறப்பு டிக்கெட்டுகள் எடுக்க வேண்டும். ஆனால் இவற்றை எடுத்துக்கொள்வது அவ்வளவு சுலபமில்லை. டிக்கெட் முன்பதிவு செய்யாவிட்டாலும் திருமலையில் நேர தரிசனத்தின்படி தினமும் டிக்கெட் வழங்கப்படுகிறது.

அது கிடைக்காவிட்டால் நேரடியாக இலவச தரிசனத்திற்கு செல்லலாம். ஆனால் இலவச தரிசனத்திற்கு செல்பவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கும். டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு 6-8 மணிநேரமும், டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்திற்குச் செல்பவர்களுக்கு சுமார் 12-14 மணிநேரமும் ஆகும். ஆனால் திருமலையில் சிலர் டிக்கெட் இல்லாமல் நேரடியாக செல்லலாம்.
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு இந்த வசதி உள்ளது. வீட்டில் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தால்.. இந்த தரிசன வசதியைப் பெற்று டிக்கெட் இல்லாமலேயே ஏழுமலையானை டஹ்ரிசித்து வரலாம். ஆனால் இதற்கு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவமனை டிஸ்சார்ஜ் சம்மரி தேவை. அத்துடன் பெற்றோர் அடையாள அட்டையையும் காட்ட வேண்டும். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் தேவை. மேலும், குழந்தையின் பெற்றோர், குழந்தையின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால் அவர்களுடன் உறவினர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பெற்றோர் மற்றும் குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படி குழந்தையுடன் வரும் பெற்றோர்களும் குழந்தைகளும் மாதம் ஒருமுறை மட்டுமே திருப்பதிக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் . ஒரு மாதத்தில் இரண்டாவது வருகை அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பக்தர்கள் குழந்தைகளுடன் சுபதம் நுழைவாயிலில் இருந்து பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். இதன் நுழைவு மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு தரிசன டிக்கெட் தேவையில்லை. இப்படி செல்பவர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் முடித்து விடுவார்கள். விசேஷ நாட்கள் மற்றும் திருவிழாக்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் அவர்கள் ஏழுமலையானை தரிசிக்கலாம்.
ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தையுடன் வரும் பெற்றோர்கள் அவர்களுடன் குழந்தையின் உடன்பிறந்த சகோதர, சகோதரியை அழைத்து வரலாம். அந்த குழந்தைகள் 12 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒரிஜினல் ஆவணங்களை தரிசனத்திற்கு வரும் நேரத்தின் போது மட்டும் கொண்டு வந்து காட்டினால் போதுமானதாகும். முக்கிய விழா நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களும் இந்த தரிசன முறை உண்டு.



Click it and Unblock the Notifications