Latest Updates
-
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
30 ஆண்டுகளுக்கு பின் உருவான 3 ராஜயோகம்: 2024-ல் இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது...
Three Rajyoga Made After 30 Years: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் மற்றும் அதனால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சில யோகங்கள் பல ஆண்டுகளுக்கு பின் உருவாகும். அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் 3 ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.
இந்த 3 ராஜயோகங்களும் சனி, சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களால் உருவாகியுள்ளன. அதில் 30 ஆண்டுகளுக்கு பின் சனி பகவான் கும்ப ராசியில் நுழைந்து சச ராஜயோகத்தையும், செவ்வாய் ருச்சக ராஜயோகத்தையும், சுக்கிரன் மாளவ்ய ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார்கள். இந்த யோகங்கள் அனைத்தும் மங்களகரமானவை மற்றும் ஒருவரது நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை.

இந்த யோகங்களானது 2024 ஆம் ஆண்டிலும் நீடித்திருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சச, மாளவ்ய மற்றும் ருச்சக ராஜயோகங்களானது ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். சிலர் எதிர்பாராத பணத்தைப் பெறுவார்கள். நிலுவையில் உள்ள பணம் கைக்கு வந்து சேரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும்.
விருச்சிகம்
சச, மாளவ்ய மற்றும் ருச்சக ராஜயோகமானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2024-ல் நல்ல நிதி நன்மைகளை வழங்கப் போகிறது. வங்கி, ரியல் எஸ்டேட், ஹோட்டல், எண்ணெய், ரசாயனம் தொடர்பான வேலைகளை செய்பவர்கள் இந்த யோகங்களால் நல்ல லாபத்தைப் பெறவுள்ளார்கள். பணிபுரிபவர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படக்கூடும். ஆனால் கர்ப்பிணிகள் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சச, ருச்சக மற்றும் மாளவ்ய ராஜயோகங்களானது 2024-ல் சிறப்பான பலன்களை வழங்கப் போகிறது. முக்கியமாக தொழில் மற்றும் வணிகத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். செல்வமும், கௌரவமும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications