Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பாருங்க இந்த டீச்சர் எப்படி மேக்அப் போட்டுகிட்டு ஸ்கூலுக்கு போறார்னு... இப்படியும் ஒரு டீச்சரா?
வித்தியாசமாகக் கிளம்பி ஸ்கூலுக்குப் போகும் தாய்லாந்து ஆசிரியரைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பது என்பது ஒரு வேடிக்கையான அனுபவமாகும், ஆனால் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை விரும்பாதபோது என்ன நடக்கும்? ஆசிரியர்கள் பெரும்பாலும் தங்கள் மாணவர்களை தங்கள் பாடங்களில் அதிக கவனம் செலுத்தும் வகையில் சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான வழிகளைக் கண்டுபிடிப்பார்கள்.

அசாதாரண வழியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தனது ஆங்கில வகுப்புகளை மிகவும் சுவாரஸ்யமாக்கிய தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியரின் சரியான எடுத்துக்காட்டு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது! வாருங்கள் அதன் தகவலை மேலும் அறிந்து கொள்வோம்.

ஆங்கில ஆசிரியர்
தீராபோங் மீசாட், தாய்லாந்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு ஆசிரியர். ஊடக அறிக்கையின்படி, 29 வயதான ஆசிரியர் தாய்லாந்தின் ராட்சாபுரி மாகாணத்தில் உள்ள ஒரு உள்ளூர் பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்கிறார்.
ஒவ்வொரு நாளும் விக் மற்றும் வித்தியாசமான அலங்காரம் அணிந்துகொண்டு தனது ஆங்கிலப் பாடங்களை இவர் நடத்தி வருகிறார். 'டீச்சர் பாலி' என்றும் அன்பாக அழைக்கப்படும் தீராபோங், தனது வகுப்பு மாணவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் விதமாக விளையாட்டு அலங்காரம் மற்றும் தனித்துவமான ஆடைகளை அணிந்து வந்து வகுப்பு எடுத்து வருகிறார்.

விசித்திரமானவர்
வகுப்புகளுக்கு மட்டுமில்லாமல், சாரணர் இயக்கத்திற்கும் ப்ளாக் பிங்க் குழுவை சேர்ந்த லிசா போல் உடையணிந்து வருவது தீராபோங்கின் வழக்கமாக இருந்து வந்தது. லிசா என்பவர் தாய் பாடகி ஆவார். தீராபோங்கின் இந்த விசித்திர செய்கை பற்றிய கதை சுவாரஸ்யமானது.
பொதுவாக, தீராபோங்கின் மாணவர்கள் ஆங்கில பாடத்தின் மீது அதிகம் ஆர்வம் இல்லாமல் இருந்தனர். பெரும்பாலும் குழந்தைகள் பாடத்தில் தவறு செய்து விடுவோம் என்ற பயத்தில் தான் இப்படி ஆர்வம் இல்லாமல் இருந்து வருகின்றனர் என்று தீராபோங் கூறுகிறார். ஆனால் இவர்களுக்கு வகுப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் இந்த அலங்கார முயற்சியை அவர் மேற்கொள்ளவில்லை.

சாரணர் இயக்கம்
தீராபோங் ஒரு நாள் சாரணர் இயக்க வகுப்பை முடித்துக் கொண்டு நேரமின்மை காரணமாக அந்த அலங்காரத்தை கலைக்காமல் அப்படியே ஆங்கில வகுப்பிற்கு வர வேண்டியிருந்தது. இந்த சாதாரண உடை மற்றும் அலங்காரத்தைப் பார்த்த மாணவர்கள் மிகவும் ஆச்சர்யப்பட்டனர். புதிய அவதாரத்தில் ஆசிரியரைக் கண்ட மாணவர்கள் மிகவும் நேர்மறையான ரீதியில் அன்று பாடங்களைக் கற்றுக் கொண்டனர். அன்றைய நாளில் வகுப்பின் ஒட்டுமொத்த மனநிலையில் ஒரு நல்ல முன்னேற்றம் இருப்பதையும் , மாணவர்கள் எந்த சலிப்பும் இல்லாமல் பாடங்களைக் கற்றுக் கொண்டதையும் அவரால் அன்று உணர முடிந்தது.

மேக்கப்பில் பள்ளிக்கு போகிறார்
அன்று முதல் தீராபோங் பல்வேறு விதமாக அலங்காரம் மற்றும் விக் அணிந்துக் கொண்டு வகுப்புக்கு செல்ல முடிவெடுத்தார். எனினும் சில குழந்தைகள் அவருடைய அலங்காரம் கண்டு பயந்தாலும், அன்றைய நாளில் என்ன வித்தியாசமாக நடக்கும் என்பதை அறிந்து கொள்ள மற்ற மாணவர்கள் மிகவும் முனைப்புடன் இருப்பதாக அவர் கூறுகிறார். இந்த தனித்தன்மையான மாற்றத்திற்கு பிறகு வகுப்பில் சலிப்புத்தன்மை குறைந்து ஆர்வம் அதிகரித்திருப்பதாக பல மாணவர்கள் கூறுகின்றனர்.
மாணவர்களை விழிப்புடன் வைத்துக் கொள்ள இது ஒரு நல்ல முயற்சி என்று கூறலாம். இதனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications