Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வியாழக்கிழமைகளில் இந்த காரியங்களை செய்யாதீங்க.. இல்ல குரு பகவானின் கோபத்திற்கு ஆளாகி வறுமையை சந்திப்பீங்க..
Thursday In Tamil: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்துடன் தொடர்புடையது. அந்த வகையில் வியாழக்கிழமை மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு பகவானுக்குரிய நாளாகும். குரு பகவான் விஷ்ணுவின் மற்றொரு வடிவமாக கூறப்படுகிறது.
இந்நாளில் விஷ்ணுவின் மனைவியும், செல்வத்தின் தெய்வமாக கருதப்படும் லட்சுமி தேவியையும் வழிபட வேண்டும். இப்படிப்பட்ட வியாழக்கிழமைகளில் ஒருசில விஷயங்களை செய்யக்கூடாது என்று ஜோதிடம் கூறுகிறது.

வியாழன் என்னும் கிரகமானது குரு பகவானுடன் இணைந்திருப்பதால், வியாழக்கிழமைகளில் செய்யும் ஒரு சில விஷயங்கள் குரு பகவானின் கோபத்திற்கு ஆளாக்கிவிடும். இதன் விளைவாக திருமணம், வேலை. கல்வி போன்றவற்றில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது வியாழக்கிழமைகளில் செய்யக்கூடாத விஷயங்கள் எவையென்பதைக் காண்போம்.
நகங்களை வெட்டுவது
வியாழக்கிழமைகளில் நகங்களை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் ஷேவிங் செய்வதையும் வியாழக்கிழமைகளில் செய்யக்கூடாது. இது தவிர, தலைமுடியையும் வியாழக்கிழமைகளில் வெட்டக்கூடாது. இப்படி செய்வதால், ஜாதகத்தில் குருவின் நிலை பலவீனமாவதோடு, குருவால் கிடைக்கவிருக்கும் நன்மைகளில் தடை ஏற்பட்டு, வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தலைக்கு குளிப்பது
நிறைய பேர் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். நீங்களும் அப்படி கொண்டிருந்தால், வியாழக்கிழமைகளில் தலைக்கு குளிக்காதீர்கள். முக்கியமாக பெண்கள் தலைக்கு குளிக்கக்கூடாது. ஏனெனில் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் குரு கணவனுடன் தொடர்புடையது. பெண்கள் வியாழக்கிழமைகளில் தலைக்கு குளித்தால், அது கணவனுக்கு வரவிருக்கும் நன்மைகளில் தடையை ஏற்படுத்தும். மேலும் வியாழக்கிழமைகளில் பெண்களும் தலைமுடியை வெட்டக்கூடாது.
துணிகளைத் துவைப்பது
வியாழக்கிழமைகளில் அழுக்குத் துணிகளை துவைக்காதீர்கள். அதேப் போல் வீட்டை வியாழக்கிழமைகளில் துடைக்காதீர்கள். இவை இரண்டையுமே வியாழக்கிழமைகளில் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால், அது வீட்டில் உள்ள குழந்தைகளின் படிப்பில் தடையை ஏற்படுத்தும். அதோடு வீட்டின் செல்வ நிலையிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது.
ஒட்டடை எடுப்பது
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது தான். சுத்தமான வீட்டில் தான் லட்சுமி தேவி குடிபுகுவாள். ஆனால் வீட்டின் மூலை முடுக்குகளில் உள்ள ஒட்டடையை வியாழக்கிழமைகளில் அப்புறப்படுத்தக்கூடாது. ஒருவேளை ஒட்டடை இருந்தால், அதை முந்தைய நாளே செய்துவிடுங்கள். வியாழக்கிழமைகளில் வீட்டில் ஒட்டடை எடுப்பது, வீட்டில் பிரச்சனைகளை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications