Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
வியாழக்கிழமைகளில் இந்த காரியங்களை செஞ்சுடாதீங்க... இல்ல லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாவீங்க...
வாரத்தின் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கடவுளுடன் தொடர்புடையது. அந்த வகையில் வியாழக்கிழமை விஷ்ணு பகவானுக்கு உரிய தினமாகும். மேலும் இந்நாளில் குரு பகவானையும் மக்கள் வழிபடுவார்கள். விஷ்ணுவின் மற்றொரு வடிவம் தான் குரு பகவான் என்றும் கூறப்படுகிறது. விஷ்ணு பகவானின் மனைவி செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி என்பதால், வியாழக்கிழமைகளில் லட்சுமி தேவியையும் வழிபட வேண்டும்.
பெரும்பாலானோர் வியாழக்கிழமையில் பெருமாளை தரிசனம் செய்வதோடு, குரு பகவானுக்கு தீபமேற்றி வழிபடுவார்கள். ஆனால் ஜோதிடத்தின் படி, வியாழக்கிழமைகளில் ஒருசில விஷயங்களைச் செய்யக்கூடாது. அப்படி செய்தால், அது குரு பகவானின் கோபத்திற்கு ஆளாக்கி, கல்வி மற்றும் தொழிலில் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி, வியாழக்கிழமைகளில் செய்யும் சில விஷயங்கள் லட்சுமி தேவியின் கோபத்திற்கும் ஆளாக்குவதாக கூறுப்படுகிறது. இப்போது ஜோதிடத்தின் படி, எந்த விஷயங்களை வியாழக்கிழமைகளில் செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.
நகம் வெட்டுவது
வியாழக்கிழமைகளில் நகங்களை வெட்டக்கூடாது என்பது ஐதீகம். அதேப் போல் வியாழக்கிழமைகளில் ஷேவிங் செய்யக்கூடாது. இது தவிர தலைமுடியையும் வியாழக்கிழமைகளில் வெட்டக்கூடாது. இப்படி செய்தால், அது ஜாதகத்தில் உள்ள குருவின் நிலையை பலவினப்படுத்துவதோடு, ஒருவரது ஆயுள் குறைவதாகவும் கூறப்படுகிறது.
தலைக்கு குளிப்பது
வியாழக்கிழமைகளில் தலைக்கு குளிக்கக்கூடாது. ஒரு பெண் ஜாதகத்தில் குருவானது கணவனைக் குறிக்கிறது. எனவே திருமணமான ஒரு பெண் வியாழக்கிழமைகளில் குளித்தால், அது ஜாதகத்தில் உள்ள குருவின் நிலையை வலுவிழக்கச் செய்து, அவளுடைய கணவனை எதிர்மறையாக பாதிக்கும். எனவே தான் பெண்கள் வியாழக்கிழமைகளில் குளிக்கக்கூடாது என்று கூறுகிறார்கள்.
துணி துவைப்பது
வியாழக்கிழமைகளில் துணிகளை துவைப்பது நல்லதாக கருதப்படுவதில்லை. அதேப் போல் வியாழக்கிழமைகளில் வீட்டை துடைப்பதும் நல்லதல்ல. இவ்விரு செயல்களும் அந்த வீட்டில் உள்ள குழந்தைகளின் கல்வியை பாதிக்கும். இது தவிர வீட்டில் நிதி நிலை மற்றும் செழிப்பையும் இந்த செயல்களை பாதிப்பதாக கூறப்படுகிறது.
ஒட்டடை எடுப்பது
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். சுத்தமான வீட்டில் தான் லட்சுமி தேவி குடிபுகுவாள். வீடு அசுத்தமாக இருந்தால், அந்த வீட்டில் லட்சுமி தேவி தங்கமாட்டார். வீட்டின் மூலைப்பகுதிகளில் சிலந்திகளால் ஒட்டடை சேரும். அப்படி சேரும் ஒட்டடைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். ஆனால் இந்த ஒட்டடைகளை வியாழக்கிழமைகளில் நீக்குவது நல்லதல்ல. எனவே வீட்டில் உள்ள ஒட்டடைகளை நீக்க நினைத்தால், அதை முந்தைய நாளே நீக்கிவிடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

