Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
அதிகாலை 4 மணிக்கு இந்த கனவு வந்தா.. உங்களை தேடி பணம் வரப்போகுது-ன்னு அர்த்தமாம்..
Swapna Shastra: இந்து மதத்தில் பிரம்ம முகூர்த்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரம்ம முகூர்த்த நேரங்களில் எந்த சுப காரியங்களை செய்வதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலான காலமாகும். இந்த நேரத்தில் எந்த வேலையை செய்யவும் நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
இப்படிப்பட்ட பிரம்மமுகூர்த்த நேரத்தில் ஒரு காணும் கனவுகள் மிகவும் நல்லவையாக கூறப்படுகிறது. அதுவும் இந்த நேரத்தில் காணும் கனவுகள் நிச்சயம் நடப்பதாகவும் நம்பப்படுகிறது. குறிப்பாக ஒருசில விஷயங்களை இந்த நேரத்தில் கனவுகளில் கண்டால், நல்ல நடக்கும் என்று கூறப்படுகிறது.

அதுவும் பணம் தேடி வரலாம், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். மொத்தத்தில் எதிர்பார்த்த விஷயங்கள் வெற்றிகரமாக நடக்கலாம். இப்போது எந்த கனவுகளை அதிகாலையில் கண்டால் பணம் தேடி வரும் என்பதைக் காண்போம்.
தண்ணீர் குடம்
ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஒருவரது கனவில் நீர் நிரம்பிய குடம் அல்லது கலசத்தை காண்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இப்படியான கனவு பண வரவைக் குறிக்கிறது. இந்த வகையான கனவை ஒருவர் கண்டால் அந்நபர் பல வழிகளில் இருந்து பணத்தைப் பெற்று, நிதி நிலையில் நல்ல உணர்வைக் காண்பார். மேலும் முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் மற்றும் பல நல்ல செய்திகளைப் பெறக்கூடும்ம்.
ஆற்றில் குளிப்பது
பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஒருவர் ஆற்றல் நீராடுவதைக் காண்பது மிகவும் நல்லதாக ஸ்வப்ன சாஸ்திரம் கூறுகிறது. இந்த மாதிரி கனவு வரவுள்ள பெரிய அளவிலான நிதி ஆதாயத்தைக் குறிக்கிறது. உங்களுக்கு இப்படி ஒரு கனவு அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வந்தால், உங்களின் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் மற்றும் நீங்கள் தொழிலில் சில நல்ல செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது.
தானிய குவியல்
ஒருவர் தனது கனவில் தானியங்கள் குவிந்திருப்பதைக் கண்டால், அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்படியான கனவு வரவுள்ள பண வரவைத் தான் குறிக்கிறது. சொல்லப்போனால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இப்படி தானியங்கள் குவிந்திருக்கும் கனவைக் கண்டால், நீங்கள் விரைவில் பணக்காரர் ஆகும் வாய்ப்புள்ளது. மேலும் முதலீடுகளில் இருந்து எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது.
இன்டர்வியூவில் இருப்பது
ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, ஒருவர் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வேலைக்கான இன்டர்வியூவில் இருப்பது போன்று கனவு கான்பது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. இந்த மாதிரியான கனவு நல்ல நிதி நன்மைகளைப் குறிக்கிறது. பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். வேலைக்காக காத்திருந்தால், நல்ல வேலை கிடைக்கலாம். ஏற்கனவே இன்டர்வியூ சென்று பதிலுக்கு காத்திருந்தால், அதில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications