Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
பரோட்டா நம்ம ஊருக்கு எப்படி வந்தது? பரோட்டாவுக்கும் உலகப்போருக்கும் உள்ள சம்பந்தம் என்ன தெரியுமா?
தென்னிந்திய உணவுகளில் எப்போதும் அசைக்க முடியாத இடம் பெற்றுள்ள உணவு என்றால் அது பரோட்டாதான். பரோட்டா வெறும் உணவு என்பதையும் தாண்டி அது நம் வாழ்வியலோடு கலந்த ஒரு உணவாக மாறிவிட்டது.
தமிழநாடு மற்றும் கேரளாவின் பிரதான உணவாக பரோட்டா உள்ளது. பரோட்டா இந்தியா முழுவதும் வீச்சு பரோட்டா, முட்டை பரோட்டா, கொத்து பரோட்டா, சிலோன் பரோட்டா மற்றும் மலபார் பரோட்டா என பல வடிவங்களில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பரோட்டாவிற்கு நம் தமிழ்நாடு மற்றும் கேரளா இரண்டு மாநிலங்களுமே உரிமை கோருகிறது. ஆனால் உண்மையில் பரோட்டா யாரால் கண்டறியப்பட்டது என்பது இன்னும் புதிராகவே உள்ளது. பரோட்டா பற்றி இதுவரை நீங்கள் அறியாத வரலாற்று உண்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
பரோட்டாவின் வரலாறு
நாம் சிறுவயது முதலே பரோட்டாவை இரசித்து உண்டு வருகிறோம். ஆனால் அதன் தோற்றம் மற்றும் வரலாறு பற்றி நாம் எப்போதும் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. உண்மையில் பரோட்டாவின் தாயகம் இலங்கை என்று பரவலாக கூறப்படுகிறது, ஆனால் வடஇந்தியாவின் பராத்தாவில் இருந்துதான் பரோட்டா உருவாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பரோட்டா பெயர் வர காரணம் என்ன?
இந்தியாவின் பஞ்சாப் பகுதியில்தான் பராத்தா முதலில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. சமஸ்கிருத வார்த்தையான "பரோதா", அதாவது "தட்டையான ரொட்டி" என்று சொல்லில் இருந்துதான் பராத்தா என்ற சொல் உருவானது. பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவில் இன்னும் விருப்பமான உணவாக இருக்கும் பரோட்டா, வரலாற்றுரீதியாக இறைச்சி அல்லது பருப்புகளுடன் உண்ணப்படுகிறது.
உலகப்போரும் பரோட்டாவும்
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை மைதா உணவுப்பொருளாக பயன்படுத்தப்படவில்லை. ஆரம்பக்காலங்களில் கோதுமையில்தான் பரோட்டா தயாரிக்கப்பட்டது, இதனுடன் நெய் சேர்க்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது கோதுமைக்கு கடுமையான தட்டுபாடு ஏற்பட்டதால் கோதுமைக்குப் பதிலாக மைதா பயன்படுத்தப்பட்டது, அதேபோல நெய்க்குப் பதிலாக எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. மைதா மிகவும் மெதுவாக ஜீரணிப்பதாலும், நீண்ட நேரம் முழுமையாக வைத்திருப்பதாலும் வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
மிருதுவான பரோட்டா செய்ய தேவையான பொருட்கள்
- 1 1/2 கப் மைதா மாவு
- 6 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் சர்க்கரை
- 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா
- தேவையான அளவு தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
பரோட்டாவை எப்படி செய்ய வேண்டும்?
- ஒரு அகலமான பாத்திரத்தில் பேக்கிங் சோடாவுடன் நன்கு சலித்த மைதா மாவை போடவும். மையத்தில் சிறிது இடைவெளி விட்டு சர்க்கரை, உப்பு மற்றும் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். சூடான தண்ணீரை மாவில் ஊற்றவும்.
- சூடான தண்ணீரைச் சேர்த்த பிறகு, ஒரு கரண்டியால் நன்கு கலக்கவும், பின்னர் தண்ணீரின் வெப்பநிலை குறைந்தவுடன், மென்மையாக மாவை பிசையவும். இப்போது பாத்திரத்தை ஈரமான துணியால் மூடி, மாவை ஒரு மணி நேரம் அப்படியே விடவும்.
- ஒரு மணி நேரம் கழித்து மாவை சின்ன சின்ன உருண்டைகளாகப் பிரித்து, அவற்றை உருட்டப் போகும் இடத்தில் கொஞ்சம் மாவை தூவவும். மாவு உருண்டைகளை முடிந்தவரை மெல்லியதாக தட்டவும், மீதமுள்ள எண்ணெயை அதன் மேற்பரப்பில் தேய்த்து, நன்கு அழுத்தி மெலிதாக்கவும்.
- மாவின் ஒரு முனையில் பிடித்துக் கொண்டு, நன்கு மெல்லியதாகும் வரை வீசவும். நீங்கள் மெலிதான வட்ட வடிவ மாவு உருண்டைகளைப் பெறுவீர்கள். அனைத்து மாவு உருண்டைகளையும் அதே வழியில் தயார் செய்யவும். இந்த மாவு உருண்டைகளை ஈரமான துணியால் மூடி 15 நிமிடங்கள் ஒதுக்கி வைக்கவும்.
- அதன் பின் மாவு உருண்டைகளை 6 அங்குல வட்டத்தில் உருட்டவும். தோசைக்கல்லை சூடாக்கி, இந்த பரோட்டாவை இருபுறமும் சிறிது எண்ணெயை தேய்த்து நன்றாக வேகவைக்கவும், அவை நன்றாக வேகவைக்கப்படுவதை உறுதிப்படுத்தவும். அவை நன்கு வெந்த பிறகு, உங்கள் கைகளால் நன்றாக பரோட்டாவை நொறுக்கவும். இப்போது பரோட்டாவில் லேயர் லேயராக உருவாகியிருப்பதை நீங்கள் காணலாம். இப்போது உங்கள் பரோட்டாக்கள் பரிமாற தயாராக உள்ளன.



Click it and Unblock the Notifications

