Latest Updates
-
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா?
குழந்தைகள் முதலைகளுடன் விளையாடும் விசித்திர கிராமம்.. இங்கே முதலைகள் தான் குழந்தைகளின் பெட்டே...
தலைநகர் Ouagadougou இலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் பசோல் என்ற கிராமம் உள்ளது. இங்கே 100 க்கும் மேற்பட்ட முதலைகள் வாழ்ந்து வருகின்றன. இங்கே இருக்கும் மக்களின் மிகப்பெரிய செல்லப்பிராணி என்றால் அது முதலைகள் தான். அதிலும் கோரப் பற்களை உடைய இந்த முதலைகள் தான் அவர்களின் நண்பர்கள்.
நாமெல்லாம் முதலைகளைக் கண்டால் ஓட்டம் தான் பிடிப்போம், ஆனால் இங்கு முதலைகளின் மேல் சவாரி செய்து கொண்டு வலம் வருகின்றனர். இந்த பசோல் கிராமத்தில் குழந்தைகளின் செல்லப் பிராணியே முதலைகள் தான். இவர்கள் தங்கள் சிறு வயது முதலே முதலைகளுடன் ஓடி விளையாடி பழக்கப்பட்டு வருகிறார்கள். சரி வாங்க இந்த விசித்திர விநோத பழக்கம் எப்படி வந்தது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

முதலை சவாரி செய்யும் மக்கள்
இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதலைகள் மீது தான் சவாரி செய்கிறார்கள். பயம் என்பது இங்குள்ள மக்களுக்கு துளி கூட கிடையாது. உங்களுக்கு பயம் இல்லையென்றால் அந்த முதலைகள் மீது நீங்கள் படுத்துக் கொள்ளலாம். அந்த முதலைகள் இவர்கள் யாரையும் எதுவும் செய்வதில்லை. இவர்கள் புராணத்தின் படி, இந்த முதலைகள் மற்றும் மனிதர்கள் இடையேயான உறவு என்பது 15 ஆம் நூற்றாண்டிற்கு முந்தையது.
இங்குள்ள மக்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்படும் போது இங்கு தண்ணீர் இல்லை. மக்கள் தங்கள் தாகத்தை தணிக்க போராடிய போது இந்த முதலை குளத்தை கண்டுள்ளனர். தங்களின் தாகத்தை தீர்க்க கிடைத்த குளத்தை அவர்கள் ஒரு வரப்பிரசாதமாக கருதினர். அதை கொண்டாடும் வகையில் அவர்கள் ஒரு விருந்தை ஏற்பாடு செய்தனர்.
கூம் லக்ரே திருவிழா
தங்களின் தாகத்தை தீர்க்க கிடைத்த குளத்தை கொண்டாடும் வகையிலும், அங்குள்ள முதலைகளை கொண்டாடும் வகையிலும் கூம் லக்ரே என்ற திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூம் லக்ரே திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது. இந்த விழாவை வெகு விமர்சையாக நடத்தி முதலைகளை வழிபடுகின்றனர். தங்களுக்கு ஆரோக்கியம், செழிப்பு மற்றும் நல்ல அறுவடை வழங்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். அந்த கிராம வாசிகளுக்கும் முதலைகளுக்கும் இடையே ஒரு மாயத் தொடர்பு இருப்பதாக அவர்கள் நினைக்கின்றனர்.
இங்கு முதலைகள் தான் முன்னோர்களின் ஆன்மாக்கள்
இங்குள்ள மக்கள் முதலைகள் தான் அவர்களின் முன்னோர்களின் ஆன்மாக்களாக நினைக்கின்றனர். முதலைகள் எதாவது இறந்தால் கூட அதை அப்படியே அவர்கள் விடுவதில்லை. முதலைகளில் ஒன்று இருந்தால் கூட அவை புதைக்கப்பட்டு, மனிதர்களைப் போல அவைகளுக்கு இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது. கிராமத்தில் எதாவது துரதிர்ஷ்டம் ஏற்பட்டால் அவர்கள் அழுகிறார்கள். அந்த துரதிர்ஷ்டத்தை தடுக்க சடங்குகள் செய்யப்படுகிறது.
சுற்றுலா ஈர்ப்பு
இங்கே மக்களும் முதலைகளும் ஒரு நண்பர்களைப் போல வாழ்வதைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கே குவிகின்றன. முதலைகள் மீது சவாரி செய்வது முதலைகளுடன் நெருக்கமாக பழகுவது மற்ற சுற்றுலா பயணிகளுக்கு விசித்திரமாக உள்ளது.
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதத்தில் இங்கு பல வேடிக்கைகளும் செய்யப்படுகிறது. இங்குள்ள மக்கள் ஒரு குச்சியில் கோழியை தொங்க விட்டு குளத்தில் இருந்து முதலைகளை கவர்ந்து இழுக்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் முதலைகளுடன் நின்று புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாம். எனவே இந்த கிராமத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
பிரெஞ்சு இளைஞர் ஒருவர் தனது தாத்தா பாட்டியை பார்க்க இந்த கிராமத்திற்கு வந்துள்ளார். இதுவரை முதலையை நான் தூரத்தில் இருந்து தான் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று இந்த கிராமத்தில் அதன் மேல் மக்கள் அமர்ந்து பார்க்கிறேன். இது கொஞ்சம் விநோதமாக உள்ளது. இதைக் காணவே இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றன. இதனால் இது ஒரு மிகப்பெரிய சுற்றுலா கிராமமாக மாறியுள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் நிறைய வருமானத்தை ஈட்டி வருகின்றன.
தலைநகரான Ouagadougou மூன்று முறை தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. மிக சமீபத்தில் மார்ச் மாதம், ஜிஹாதிகள் இராணுவ தலைமையகம் மற்றும் பிரெஞ்சு தூதரகத்தை தாக்கினர். இதில் இந்த பசோல் கிராமமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதலுக்கு முன்னாடி ஆண்டு வரை நாங்கள் 10 000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கொண்டு இருந்தோம். ஆனால் தற்போது 4000 அல்லது 5000 க்கு மேல் பார்வையாளர்கள் வருவதில்லை என்று அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் பூமி வெப்பமயமாதல் காரணமாக இந்த குளத்தின் அளவும் சுருங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழை அளவும் சுருங்கி வருகிறது. இதனால் இங்குள்ள முதலைகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது. மீண்டும் இங்குள்ள முதலைகள் இவர்களுக்கு புதிய குளத்தை கண்டுபிடிக்க உதவுமா? என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது.



Click it and Unblock the Notifications