Latest Updates
-
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும்
வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
வீடு என்றால் கண்டிப்பாக அதில் பல்லி இருக்கும். பல்லி இல்லாத வீடுகள் இல்லை என்று கூறலாம் ஆனால் அந்த பல்லி இருப்பது சிலருக்கு பிடிக்கவே செய்யாது. உடனே அதை துரத்தி அடித்து விடுவார்கள். பல்லி அதிகம் இருக்கும் இல்லங்களில் அதிர்ஷ்டமும் அதிகரிக்கும் என்று ஆன்மீகம் கூறுகிறது. வீட்டில் எந்த இடங்களில் எல்லாம் பல்லி இருக்கிறதோ அங்கு அதிர்ஷ்டத்தை தரும்? என்கிற ரகசியத்தைதான் ஆன்மீக கூறுகிறது.
ஆம் வீட்டில் பல்லி இருப்பது என்பதே அதிர்ஷ்டம்தான் என்கிறது சாஸ்திரங்கள்... பல்லி இல்லாத வீட்டில் நிம்மதியும் இருக்காது என்று கூறப்படுகிறது. பல்லி தெய்வீக அம்சமாக கருதப்படுவதால் அவற்றை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. இவ்வாறு செய்தால் பாவம் வந்து சேரும். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை துன்புறுத்தாமல் விரட்டி விடுங்கள். அதை விடுத்து பாவத்தை சேர்த்துக் கொள்ளாதீர்கள்.

ஜோதிடத்தில் பல்லி பற்றி என்ன சொல்லப்படுகிறது?
வீட்டில் கரப்பான் பூச்சி, வண்டு, தும்பி, பல்லி ஆகியவை இருப்பது மிகவும் இயல்பானதுதான். ஆனால், சிலருக்கு அவை இருப்பது பிடிக்காது. ஏனென்றால், கரப்பான் பூச்சிகள் பல விதமான நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும். இன்னும் சிலருக்கு வீட்டிற்குள் பல்லி இருப்பது பிடிக்காது. அதை அடித்து வெளியில் துரத்தாமல் நாம் வீட்டிற்குள் நுழைவது இல்லை. ஆனால், சிலர் பல்லி என்ன செய்யப்போகிறது வீட்டில் உள்ள பூச்சிகளை சாப்பிட்டு ஓரமாக இருக்கட்டும் என பரிதாபம் பார்த்தும் விடுவதுண்டு.
இவை பெரும்பாலும் ட்டின் சுவர்கள் மற்றும் மூலைகளில் காணப்படுகின்றன. யாரையும் தொந்தரவு செய்வதில்லை. ஜோதிடத்தில் பல்லி பற்றி நிறைய கூறப்பட்டுள்ளது. அந்தவகையில், பல்லியைப் பார்ப்பது சுபம் என்று சிலர் அசுபம் என்று கூறுகின்றனர். பல்லியை பார்ப்பது நல்லதா கெட்டதா என இந்த தொகுப்பில் காணலாம்..
பல்லிகளைக் கண்டாலே பெரும்பாலானோர் பயப்படுவார்கள். அவற்றை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிக்கின்றனர். ஆனால், ஜோதிட நம்பிகையின்படி, பல்லி பண விஷயங்களில் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதாவது, பல்லி லட்சுமி தேவியுடன் தொடர்புடையது.
வெள்ளி பல்லி சிலையின் பலன்கள்
சில மாநிலங்களில் புதிய வீட்டின் வாஸ்து பூஜையில் வெள்ளி பல்லி சிலைகளை பயன்படுத்தி பூஜை செய்வது உண்டு. ஏனென்றால், பல்லி வீட்டின் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இவ்வளவு ஏன், தமிழகத்தில் பல்லிக்கு என தனி கோயில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?.
வாஸ்து சொல்வது என்ன?
வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்கள் வீட்டு பூஜை அறை மற்றும் வரவேற்பு அறையில் பல்லிகள் தென்பட்டால் மிகவும் மங்களகரமானது. எதிர்க்காலத்தில் அதிக பணவரவை பெறப்போகிறீர்கள் என்பதை குறிக்கிறது. தீபாவளி அன்று வீட்டில் பல்லி இருந்தால், ஆண்டு முழுவதும் லட்சுமி தேவி அருள் உங்களுக்கு கிடைக்கும். அதுமட்டும் அல்ல, இதனால் மகத்தான மகிழ்ச்சியையும் செல்வத்தையும் பெறுவீர்கள்.
3 பல்லிகளை பார்ப்பது அதிர்ஷ்டமா?
அதிலும் வீட்டில் ஒரே இடத்தில் 3 பல்லிகளை பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டம். இதனால், உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். நீங்கள் ஒரு புதிய வீட்டிற்குள் நுழையும் அதே நேரத்தில் உங்கள் கண்ணுக்கு பல்லி தென்பட்டால், அது மிகவும் மங்களகரமானதாக நம்பப்படுகிறது.
வீட்டின் பூஜை அறையில் பல்லி
வீட்டின் பூஜை அறையில் பல்லி இருந்தால் மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும் ஒரு விஷயமாக கருதப்படுகிறது. செல்வ செழிப்பும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வீட்டில் பூஜை அறையில் பல்லி இருக்க வேண்டுமாம். சிலருடைய இல்லங்களில் எல்லாம் பார்த்தால் எந்நேரமும் பூஜை அறையில் பல்லிகள் நடமாட்டம் இருக்கும். இவ்வாறு இருக்கும் இல்லங்கள் அதிர்ஷ்டம் நிறைந்தவையாக கருதப்படுகிறது.
படுக்கை அறையில் பல்லி
படுக்கை அறையில் பல்லிகள் இருந்தால் ஒற்றையாக இருக்கக் கூடாது. ஜோடி ஜோடியாக பல்லி இருந்தால் நல்லது என்றும் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டைகள் சீக்கிரமாக சரியாகிவிடுமாம். அந்த அளவிற்கு நல்ல பலன்களை கொடுக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது எனவே இனியும் பல்லியை கண்டால் அருவருப்பாக நினைக்காமல் அவை தரும் அதிர்ஷ்டத்தையும் நினைக்கலாமே..
சமையல் அறையில் பல்லி
சமையல் அறையில் பல்லி இருப்பது நல்லதல்ல எனவே சமையலறையில் பல்லி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் பல்லி நம் மீது விழுந்தால் விழும் இடத்திற்கு ஒவ்வொரு பலன்கள் உண்டு என்பது அனைவரும் அறிவீர். இப்படி பல்லி விழும் பலன்களை பார்த்து பயப்படாமல் அன்றைய நாளில் நீங்கள் மகாவிஷ்ணுவை துளசி சாற்றி வழிபட்டால் போதும் பாவங்கள் நீங்கி, புண்ணியங்கள் சேருமாம்.
கோயிலில் பல்லியை பார்த்தால் தேவர்களை கண்டதற்கு சமம்
அதுமட்டும் அல்ல, பல்லியை பார்ப்பது முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு சமம் என்பது ஐதீகம். அதாவது, முன்னோர்களின் ஆசீர்வாதம் மற்றும் அருள் நமக்கு கிடைக்கும். அத்தத்துடன், அன்னை லட்சுமி தேவியும் உங்களை ஆசீர்வதிக்கப் போகிறார்.. சில கோயில்களில் மரத்தை சுற்றி பலர் நின்று கொண்டு எதையோ கைகாட்டி பார்ப்பதை பார்த்திருப்போம். அது வேறு எதுவும் அல்ல, கோயில்களில் உள்ள விருச்ச மரங்களில் பல்லியை பார்ப்பது தேவர்களை பார்ப்பதற்கு சமம்.



Click it and Unblock the Notifications











