Latest Updates
-
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
சித்திரை கனி காணுதல் என்றால் என்ன? அதில் என்னென்ன பழங்களை வைக்க வேண்டும்?
Tamil New Year 2023: தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் சூரியனின் ராசி மாற்றத்தின் போது பிறக்கின்றன. அதில் சூரியன் மேஷ ராசிக்கு வரும் போது தான் 12 தமிழ் மாதங்களின் முதலாவது மாதமான சித்திரை மாதம் பிறக்கிறது. இந்த சித்திரை மாதம் பிறக்கும் போது தான் தமிழ் புத்தாண்டு பிறக்கின்றன. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் 14 ஆம் தேதி சோபகிருது வருடம் பிறக்கிறது. இந்த புதிய ஆண்டின் முதல் நாளில் கனி காணுதல் என்னும் வழக்கம் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கனி காணுதல் என்றால் என்ன? இந்த கனி காணுதல் எதனால் மேற்கொள்ளப்படுகிறது, கனி காணுதலில் என்னென்ன வைக்க வேண்டும் என்பன பற்றி பலருக்கும் சரியாக தெரியாமல் இருக்கலாம். குறிப்பாக இன்றைய தலைமுறையினருக்கு எதனால் கனி காணுதல் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. எனவே இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.

தமிழ் புத்தாண்டின் முதல் நாளில் கடைபிடிக்கப்படும் கனி காணுதல் நிகழ்வை சித்திரை கனி என்றும் அழைப்பார்கள். இது புத்தாண்டின் அதிகாலையில் எழுந்ததும் கனிகள், பணம், நகைகள் போன்றவற்றை கண்ணாடியில் பார்க்கும் ஒரு சாஸ்திரம் ஆகும். இப்படி புத்தாண்டு அன்று எழுந்ததும் முதன்முதலாக இவற்றை காணும் போது, அந்த புத்தாண்டு மிகவும் இனிமையாகவும், செழிப்பான ஆண்டாகவும் இருக்கும் என்பது நம்பிக்கை.
கனி காணுதல் தட்டில் என்னென்ன வைக்க வேண்டும்?
புத்தாண்டின் முதல் நாள் பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையில் உள்ள கடவுள்களின் போட்டோக்களை துடைத்துவிட்டு, மஞ்சள் குங்குமம் இட வேண்டும். பின்பு இரவு தூங்குவதற்கு முன் ஒரு கண்ணாடியை எடுத்து, அதை துடைத்துவிட்டு, அதன் ஓரங்களில் மஞ்சள், குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பெரிய தாம்பூலத் தட்டை எடுத்து, அதில் மா, பலா, வாழை, ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை என ஒற்றை படை எண்ணில் பழங்களை அடுக்கி வைக்க வேண்டும். பின்பு சிறு சிறு கிண்ணங்களை எடுத்து, ஒவ்வொன்றிலும் அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, கல் உப்பு ஆகியவற்றை தலைதட்டாமல் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வெற்றிலை பாக்கு, மஞ்சள் கிழங்கு, வளையல் ஆகியவற்றையும் தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் சிறு கிண்ணத்தில் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வைத்தக் கொள்ளுங்கள். வீட்டில் அன்னப்பூரணி சிலை இருந்தால், அரிசியின் மேல் அந்த சிலையை வையுங்கள். மேலும் வீட்டில் உள்ள நகைகளையும் தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு ஒரு சிறிய பித்தளை அல்லது செம்பு சொம்பை எடுத்து, அதில் நீரை நிரப்பி, அதில் சிறிது பூக்களைத் தூவி, பச்சை கற்பூரத்தை சிறிது தூவி, மேலே மாவிலை மற்றும் தேங்காயை வைத்து கலசத்தை தயாரித்து, அவற்றையும் தட்டிற்கு அருகே வைக்க வேண்டும். பின் இந்த பொருட்கள் அனைத்தும் கண்ணாடியில் தெரியும்படி கண்ணாடியை எதிரே வைக்க வேண்டும். இவை அனைத்தையும் புத்தாண்டிற்கு முதல் நாள் இரவு தூங்குவதற்கு முன்னரே தயார் செய்து விட்டு தூங்க செல்ல வேண்டும்.
புத்தாண்டு அன்று வீட்டின் மூத்த பெண் அதிகாலையில் எழுந்ததும், முதலில் அந்த கண்ணாடியை வழியே இவை அனைத்தையும் பார்க்க வேண்டும். பின் குளித்துவிட்டு வந்து, வீட்டில் உள்ளோர் ஒவ்வொருவரையும் அழைத்து வந்து, இவற்றை காண்பிக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் இதை பார்த்த பின், ஒரு பிரசாதத்தை செய்து, கடவுளுக்கு படைத்து, ஆரத்தி காண்பித்து பூஜையை முடிக்க வேண்டும். இந்த பிரசாதத்தை வீட்டில் உள்ள அனைவரும் உட்கொள்ள வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ளவாறு வருகிற சோபகிருது புத்தாண்டின் முதல் நாளில் செய்து, தமிழ் புத்தாண்டை சிறப்பாக தொடங்குங்கள்.



Click it and Unblock the Notifications