Latest Updates
-
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும்
500 ஆண்டுகளுக்கு பின் சூரியன், சுக்கிரன் உருவாக்கும் நீச்ச பங்க ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
Sun Venus Made Neech Bhang Rajyoga After 500 Years: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் யோகங்களானது கிரகங்களின் சேர்க்கையினால் மட்டுமின்றி, கிரகங்கள் இருக்கும் வீடுகளினாலும் உருவாகலாம். அந்த வகையில் கன்னி ராசியில் சுக்கிரனும், துலாம் ராசியில் சூரியனும் பலவீனமாக இருப்பார்கள். இதனால் இவ்விரு கிரகங்களின் நிலைகளால் நீச்சபங்க ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் சூரியன் மற்றும் சுக்கிரனின் அருளால் சிறப்பான பலனைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரனும், 10 ஆவது வீட்டில் சூரியனும் உள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவதோடு, அனைத்து காரியங்களிலும் வெற்றியைப் பெறுவார்கள். அதுவும் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தலாம். சிலர் நல்ல பண வரவைப் பெறக்கூடும். இன்னும் சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களைப் பெற வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் சுக்கிரனும், 12 ஆவது வீட்டில் சூரியனும் உள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை வழக்கத்தை விட அதிகரிக்கும். சிலருக்கு சூரியனின் அருளால் திடீர் பண வரவு கிடைக்கும்.
நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக நிறைவேறும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரிகளுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டில் சுக்கிரனும், 4 ஆவது வீட்டில் சூரியனும் உள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களைப் பெறலாம். சிலரது வசதிகள் அதிகரிக்கும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பல முக்கிய பொறுப்புக்கள் வழங்கி, பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications