Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
1 வருடத்திற்கு பின் மேஷத்தில் நிகழும் சூரிய பெயர்ச்சி: ஏப்ரல் 13 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Sun Transit In Aries On 13 April 2024: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் தற்போது குரு பகவானின் ராசியான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். அந்த வகையில் ஏப்ரல் 13 ஆம் தேதி சூரியன் செவ்வாயின் ராசியான மேஷ ராசிக்கு செல்லவுள்ளார். இந்த ராசிக்கு ஒரு வருடத்திற்கு பின் சூரியன் செல்லவுள்ளார்.
இதனால் இந்த சூரியன் பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தையும், சில ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளையும் சந்திக்கலாம். இப்போது ஏப்ரல் மாதத்தில் நிகழும் சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஏப்ரல் 13 முதல் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற விவாதங்களால் சிரமப்படுவீர்கள். யாரிடமும் தேவையில்லாமல் பிரச்சனையில் ஈடுபடாதீர்கள். இல்லாவிட்டால், அது உங்களுக்கு தான் பெரிய தீங்கை ஏற்படுத்தும். பணிபுரிபவர்கள், வியாபாரிகள் தங்கள் வேலையில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நடத்தையில் பெரிய மாற்றம் ஏற்படும். பேச்சால் பல பிரச்சனைகளை சந்திக்கலாம். கோபத்தால் உறவுகளில் விரிசல் ஏற்படலாம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உடன் வேலை செய்வோரால் சில விஷயங்களால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். தேவையற்ற விமர்சனங்களில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் ஆரோக்கிய பிரச்சனைகளால் அதிகம் அவதிப்படுவீர்கள். நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சனைகளை தீவிரமாக எடுத்து சிகிச்சை பெறாமல் இருந்தால், அதுவே பெரிய நோய்க்கு வழிவகுக்கும். எதிரிகளால் உங்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கலாம். எனவே அவர்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
