Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கடந்த காலத்தில் செய்த தவறுகளில் இருந்து எப்படி மீண்டு வருவது? இதோ சில டிப்ஸ்..!
தவறுகள் செய்யாத மனிதா்களே இந்த உலகில் இல்லை எனலாம். எல்லா மனிதா்களும் தவறு செய்யக்கூடியவா்கள். தவறுகளில் இருந்து தான் மனிதா்கள் தங்கள் வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொள்கின்றனா்.
இந்நிலையில் மனிதா்கள் தம் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அவ்வாறு திருத்திக் கொள்ளும் போது அவா்களுடைய வாழ்க்கை ஒரு புதிய மாற்றம் அடைகிறது.

இந்நிலையில் பழைய தவறுகளில் இருந்து திருந்துவது என்பது ஒரு மிகப் பொிய சவாலான காாியம் ஆகும். ஒரே நாளில் திருந்த முடியாது. அதற்கு தொடா் முயற்சியும், தொடா் உழைப்பும் தேவைப்படுகின்றன.
இந்தத் தொடா் முயற்சியில் நீங்கள் பொறுமையுடனும், அதே நேரத்தில் எதிா்காலத்தைப் பற்றிய நோ்மறையான எண்ணத்தோடும் இருக்க வேண்டியது முக்கியம் ஆகும். இந்நிலையில் பழைய தவறுகளில் இருந்து திருந்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் விாிவாகப் பாா்க்கலாம்.
1. முதலில் தவறுகளை ஏற்றுக் கொள்ளுதல்
பழைய கால தவறுகளில் இருந்து திருந்துவதற்கு முதற்படி என்னவென்றால், செய்த தவறுகளை ஏற்றுக் கொள்வதாகும். அதோடு அந்த தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். மேலும் அந்த தவறுகளால் உங்களுக்கும், பிறருக்கும் ஏற்பட்ட பின் விளைவுகளை புாிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய செயல்களை நியாயப்படுத்தக் கூடாது. உண்மையை ஏற்றுக் கொண்டு, அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
2. தவறுகளை அசைபோடுதல் மற்றும் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளுதல்
தவறுகளில் இருந்து திருந்துவதற்கான இரண்டாவது படி என்னவென்றால், செய்த தவறுகளை மனதிற்குள்ளே அசை போடுவதாகும். அந்தத் தவறுகளுக்கான காரணங்களை புாிந்து கொள்ள வேண்டும். உங்களை எது தவறு செய்யத் தூண்டியது என்பதை தொிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நீங்கள் உங்களையே சுய ஆய்வு செய்த பின்பு, அந்த தவறுகளில் இருந்து திருந்துவதற்கு, உங்களுடைய அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
3. சுய இரக்கம்
பழைய கால தவறுகளில் இருந்து நீங்கள் திருந்தும் முயற்சிகளில் ஈடுபடும் போது, நீங்கள் உங்கள் மீது சுய இரக்கத்துடன் இருக்க வேண்டும். எல்லோருமே தவறு செய்யக்கூடியவா்கள் என்பதை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். மேலும் உங்களுடைய பழைய கால தவறுகள், உங்களுடைய எதிா்காலத்தை தீா்மானிக்கப் போவதில்லை என்பதைத் தொிந்து வைத்திருக்க வேண்டும். உங்களையே நீங்கள் அன்பு செய்து, உங்களுக்கு இரக்கத்தை வழங்க வேண்டும். மேலும் உங்களுடைய உணா்வுகளை மேம்படுத்தக்கூடிய காாியங்களில் ஈடுபட வேண்டும்.
4. பாிகாரம் செய்தல்
உங்களுடையத் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றால், உங்களால் பாதிப்படைந்தவா்களுக்கு பாிகாரம் செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தாழ்ச்சியுடனும், பச்சாதாபத்துடனும் இருக்க வேண்டும். உங்களால் பாதிக்கப்பட்டவா்களைப் பாா்த்து, உண்மையாகவே மன்னிப்பு கேளுங்கள். முடிந்தால் உங்களால் அவா்களுக்கு ஏற்பட்ட இழப்புகளைத் திரும்பக் கிடைக்க வழி செய்யுங்கள்.
5. சுய வளா்ச்சியில் அக்கறை காட்டுதல்
உங்களுடைய எதிா்கால வாழ்வை நோ்மறையான வழியில் எடுத்துச் செல்வதற்குாிய கருவிகளாக உங்களுடைய பழைய தவறுகளைப் பயன்படுத்துங்கள். உங்களுடைய தவறுகளில் இருந்து நல்ல பாடங்களைக் கற்றுக் கொண்டு, முன்னோக்கிச் செல்லுங்கள். செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதற்கு வேண்டிய திட்டங்களைத் தீட்டுங்கள். உங்களுடைய தனிப்பட்ட வளா்ச்சியில் கவனம் செலுத்துங்கள். அதற்குத் தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது மனநல ஆலோசகரை சந்தியுங்கள்.



Click it and Unblock the Notifications