Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
சோபகிருது தமிழ் புத்தாண்டு இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகுது...
Sobakiruthu Tamil Puthandu 2023 Rasi Palan: தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 உள்ளன. அதில் 37 ஆவது ஆண்டான சோபகிருது ஆண்டு தான் இந்த வருடம் பிறக்கிறது. இதில் சோப என்றால் மங்களகரமானது, கிருது என்றால் செயல் என்று பொருள். தமிழ் புத்தாண்டானது ஒவ்வொரு ஆண்டும் சூரியன் மேஷ ராசிக்கு நுழையும் போது பிறக்கிறது.
இந்த ஆண்டு 2023 ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு செல்கிறார். இதனால் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறக்கிறது. 2023 சோபகிருது புத்தாண்டின் போது கிரகங்களின் நிலைகளால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளது. அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சில ராசிக்காரர்கள் கெடு பலனையும் பெறலாம். இப்போது 2023 சோபகிருது தமிழ் புத்தாண்டில் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சோபகிருது வருடமானது தொழிலில் நல்ல மாற்றத்தைத் தரக்கூடிய ஆண்டாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த ஆண்டில் பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு இந்த ஆண்டில் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சோபகிருது ஆண்டானது கலவையான பலன்களைத் தரும். ஆரோக்கிய பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்க நேரிடும். தாய் தந்தையின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு நன்றாக இருக்கும். கலைத் துறையில் இருப்பவர்களின் செல்வாக்கு இந்த ஆண்டு அதிகரிக்கும். முக்கியமாக நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சோபகிருது ஆண்டானது நல்ல ஏற்றத்தைத் தரும் ஆண்டாக இருக்கும். மாணவர்கள் இந்த ஆண்டில் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமான தம்பதிகளுக்கு இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதலிப்பவர்களின் காதல் பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்படலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சோபகிருது ஆண்டானது குருவின் அருளால் சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் மரியாதை அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது மற்றும் பதவி உயர்வுகளும் கிடைக்கலாம். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தாய்வழி உறவால் நல்ல நன்மைகள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சோபகிருது ஆண்டானது நல்ல சிறப்பான மற்றும் முன்னேற்றத்தைத் தரும் ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டில் நீங்கள் செய்யம் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த ஆண்டு நன்றாக இருக்கும். மனதில் இருந்த கஷ்டங்கள் குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இடமாற்றத்திற்கான வாய்ப்புள்ளது. ஆனால் இந்த ஆண்டில் கோபத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சோபகிருது ஆண்டானது தொழிலில் ஏற்றத்தைத் தரும் ஆண்டாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் குறையும். நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு இந்த ஆண்டில் குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து, திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சோபகிருது ஆண்டு ஒரு திருப்புமுனையாக இருக்கும். இந்த ஆண்டில் வாழ்க்கையை மாற்றக்கூடிய பல சுப காரியங்கள் நடக்கும். வீடு, வாகனம், ஆபரணங்கள் போன்றவை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகள் மீது சந்தேகப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகளுடனான உறவு பாதிக்கப்படும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே காதல் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சோபகிருது ஆண்டில் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசியலில் இருப்பவர்கள் இந்த ஆண்டில் ஒரு நல்ல பதவியைப் பெறலாம். உங்களின் புகழ் இந்த ஆண்டில் அதிகரிக்கும். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த ஆண்டில் சுப செலவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சோபகிருது ஆண்டில் அதிகமாக பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த ஆண்டில் பல சுப செய்திகளைப் பெறுவீர்கள். சுபசெலவுகளுக்கான வாய்ப்புகளும் உள்ளன. பணிபுரிபவர்களுக்கு அலவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றிகரமாக நடக்கும். பெற்றோர்களுடன் இருந்த பிரச்சனைகள் இந்த ஆண்டில் நீங்கி, அன்பு அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சோபகிருது ஆண்டில் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சோபகிருது ஆண்டில் தடைகளை உடைத்தெறிவார்கள். இதுவரை சுபகாரியங்களில் சந்தித்த தடைகள் நீங்கும். கணவன மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி, பிணைப்புகள் அதிகரிக்கும். மேலும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல ஏற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் நல்ல பாராட்டைப் பெற வைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் சோபகிருது ஆண்டில் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். தொழிலில் நல்ல ஏற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு இடமாற்றத்திற்கான வாய்ப்புள்ளது. வேலை மாற்றத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அரசு வேலைக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











