Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
இந்த அறிகுறிலாம் தெரியுதா? அப்ப உங்களுக்கு கெட்ட காலம் தொடங்கப் போகுதுன்னு அர்த்தம்... உஷார்...
வாழ்க்கை என்றால் நல்லது, கெட்டது நிறைந்திருக்கும். நாம் ஒவ்வொருவருமே தங்களின் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக, சந்தோஷம் நிறைந்து இருக்க வேண்டுமென்று விரும்புவோம். நாம் விரும்புவதைப் போன்று வாழ்க்கை அமையாவிட்டாலும், அமைந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம்.
இப்படியிருக்க ஒருவரது வாழ்க்கையில் நல்லது, கெட்டது நடக்கவிருப்பதைக் குறிக்கும் வகையில் ஒருசில விஷயங்கள் அவ்வப்போது நடக்கும். உதாரணமாக, கையில் இருந்து குங்குமம் தவறி விழுந்தால், அதை அபசகுணம் என்பார்கள்.

சகுண சாஸ்திரத்தில், ஒருவருக்கு நடக்கவுள்ள நல்லது கெட்டதைக் குறிக்கும் சில அறிகுறிகள் குறித்து கூறப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகளை வைத்து நமக்கான தற்போதைய நேரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அதுவும் ஒருவருக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டதை உணர்த்தும் அறிகுறிகளை தெரிந்து கொள்வதை விட, கெட்ட காலம் தொடங்கப் போகிறது என்பதை குறிக்கும் அறிகுறிகளை தெரிந்து கொண்டால், சற்று எச்சரிக்கையாக இருக்கலாம் அல்லவா? எனவே இப்போது ஒருவருக்கு கெட்ட காலம் தொடங்கப் போகிறது என்பதைக் குறிக்கும் சில அறிகுறிகளைக் காண்போம்.
* உங்கள் வீட்டில் எப்போதும் குப்பை, தூசி போன்றவை அதிகம் சேர்கிறதா? அப்படியானால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பணப் பற்றாக்குறையால் அவதிப்படப் போகிறீர்கள் என்பதை இது குறிக்கிறது. இந்நிலையில் உங்கள் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும்.
* நீங்கள் வீட்டில் ஆசையாக வளர்த்து வரும் செடிகள் திடீரென்று காய்ந்து போகத் தொடங்குகிறதா? அப்படியானால் உங்கள் வீட்டில் நிறைய பிரச்சனைகள் வரப்போகிறது என்று அர்த்தம்.
* உங்கள் வீட்டில் உள்ள கடிகாரம் அல்லது ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து கொண்டிருக்கிறதா? அப்படியானால் உங்கள் வீட்டில் ஒரு பெரிய பிரச்சனை தலைத்தூக்கப் போகிறது என்று அர்த்தம். இந்நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
* வீட்டில் பால் காய்ச்சும் போது, அந்த பால் அடிக்கடி பொங்கி வழிந்தால் , அந்த வீட்டில் உள்ள ஆண்களுக்கு ஏதோ ஒரு பெரிய பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம். எனவே பாலை அடுப்பில் வைத்தால், சற்று கவனமாக இருங்கள்.
* வீட்டிற்குள் எறும்புகள் உப்பு பொருட்களில் அதிகம் மொய்த்துக் கொண்டிருந்தால், உங்கள் வீட்டில் உள்ளவர்களிடையே சண்டை வரப்போகிறது என்று அர்த்தம். ஆகவே சற்று கவனமாக இருங்கள்.
* வீட்டில் இருக்கும் ஒருவரின் நடத்தை எரிச்சலூட்டும் வகையில் இருந்தாலோ, பேசும் போது கத்தி கத்தி பேசினாலோ, உங்கள் வீட்டில் ஒரு பெரிய நிதி நெருக்கடி வரப்போகிறது என்று அர்த்தம்.
* வீட்டின் சுவற்றில் விரிசலைக் கண்டால், அதை உடனே சரிசெய்யுங்கள். இல்லாவிட்டால், அது வீட்டில் பிரச்சனையை அதிகரித்துக் கொண்டே போகும். பின் அப்பிரச்சனையால் வீட்டில் பிரிவினை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
* சகுண சாஸ்திரத்தின் படி, வீட்டிற்குள் பூனை வருவது துரதிர்ஷ்டமானதாக கூறப்படுகிறது.
* பழங்கால நம்பிக்கைகளின் படி, வீட்டில் உள்ள பெண்களின் மாங்கல்யம் திடீரென்று அறுந்தால், அது அப்பெண்ணின் கணவருக்கு ஒரு பெரிய ஆபத்து வரப்போகிறது என்று அர்த்தம். இந்நிலையில் மனைவிமார்கள் துளசியை வழிபட்டால், பாதுகாப்புடன், கணவனின் வாழ்நாளும் நீட்டிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications