Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
30 ஆண்டுகளுக்கு பின் ஒரே வேளையில் உருவாகியுள்ள சச-மாளவ்ய ராஜயோகம்: பண மழையில் நனையும் ராசிகள்!
Shasha-Malavya Rajyoga To Form After 30 Years: வேத ஜோதிடத்தில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். சில சமயங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசியில் பயணிக்கும் போது, அது சுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில், சச மற்றும் மாளவ்ய ஆகிய இரண்டு விதமான மங்களகரமான ராஜயோகங்கள் சனி மற்றும் சுக்கிரனால் தற்போது உருவாகியுள்ளன. அதுவும் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் இவ்விரு ராஜயோகங்களும் ஒரே வேளையில் உருவாகியுள்ளன.

இந்த இரண்டு ராஜயோகங்களின் தாக்கமானது 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகங்கள் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
சச மற்றும் மாளவ்ய ராஜயோகங்களானது மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை வழங்கும். முக்கியமாக இக்காலத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலைப் பொறுத்தவரை, நல்ல முன்னேற்றத்தைக் காண்பதோடு, இலக்குகளை எளிதில் அடைவீர்கள். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும் மற்றும் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனால் ஈர்ப்படுவார்கள். சிலருக்கு இக்காலத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இவ்விரு யோகங்களால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சிலருக்கு சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சச மற்றும் மாளவ்ய ராஜயோகங்களானது சிறப்பான நற்பலன்களை வழங்கும். பணியிடத்தில் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறலாம். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணப் பிரச்சனை என்பதே இருக்து. பல வருமான ஆதாரங்களில் இருந்து பணம் சம்பாதிப்பீர்கள். இது உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும். வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவு வலுவாகவும் சிறப்பாகவும் இருக்கும். தொழிலதிபர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சச மற்றும் மாளவ்ய ராஜயோகம் மிகவும் அட்டகாசமான பலன்களை வழங்கும். அதுவும் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தால், அது இந்த யோக காலத்தில் நிறைவேறும். வியாபாரிகள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பல்வேறு வருமான ஆதாரங்களில் இருந்து பணம் சம்பாதிப்பீர்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து எதிர்பாராத நல்ல வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். திருமணமானவர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சளி, இருமல் பிரச்சனைகளால் அவதிப்படலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சச மற்றும் மாளவ்ய ராஜயோகங்களானது அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் மற்றும் புதிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். அதில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, உயர்அதிகாரிகளை ஈர்ப்பீர்கள். நிதி நிலை வலுவடையும். நிலம் அல்லது சொத்தில் முதலீடு செய்வீர்கள். மீடியா, ஃபேஷன் டிசைன் போன்ற துறையில் இருப்பவர்கள் நல்ல சம்பளத்துடனான வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு பிரச்சனைகள் அவ்வப்போது தொந்தரவு செய்யலாம். இருப்பினும், அதற்காக அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சச மற்றும் மாளவ்ய ராஜயோகங்கள் நற்பலனை வாரி வழங்கும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெற்றிகள் குவியும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்காக காத்திருந்தால், இக்காலத்தில் அவை கிடைக்க வாய்ப்புள்ளன. கிரகங்களின் நிலைகளால் வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். மேலும சிலர் முன்னேற்றத்திற்கான இன்னும் நல்ல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக, நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications