Latest Updates
-
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
புரட்டாசி பௌர்ணமியான இன்று இரவு இந்த பரிகாரத்தை செய்யுங்க.. பண கஷ்டம் தீர்ந்து, வீட்டில் செல்வம் பெருகும்...
Sharad Purnima 2025: ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வரும். அப்படி ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியும் ஒவ்வொரு சிறப்புக்களைக் கொண்டிருக்கும். அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமியானது இறை வழிபாட்டிற்கு உரியது. மேலும் இந்த மாதத்தில் சந்திரனின் கதிர்கள் மிகவும் பிரகாசமாக இருப்பதோடு, சக்தி நிறைந்தும் இருக்கும்.
இந்த பௌர்ணமி நாளில் குலதெய்வத்தை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. இது தவிர சிவன், பார்வதி, விஷ்ணு, மகாலட்சுமி தேவி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு செய்வதன் மூலம், அவர்களின் ஆசியைப் பெறலாம் என்பது நம்பிக்கை.

அந்த வகையில் இந்த ஆண்டின் புரட்டாசி மாத பௌர்ணமியானது அக்டோபர் 06 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் சந்திரன் முழுமையாக இருப்பதோடு, சக்தி வாய்ந்த கதிர்களை வெளியிடும். எனவே இந்நாளின் இரவு நேரத்தில் ஒருசில பரிகாரங்களை செய்வதன் மூலம் லட்சுமி தேவியின் ஆசி கிடைத்து, வாழ்க்கையில் உள்ள பண பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், ஆரோக்கிய பிரச்சனைகள் போன்றவை தீர்ந்து, தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசித்து வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
பரிகாரம் #1
பௌர்ணமி நாளின் இரவில் பூஜையின் போது 2 வெற்றிலை மற்றும் 1 பாக்கை எடுத்து, ஒரு சிவப்பு நூல் கொண்டு கட்டி, லட்சுமி தேவியின் பாதத்தில் வைக்க வேண்டும். பின் லட்சுமி தேவிக்கு பூ, குங்குமம் மற்றும் முழு தானிய அரிசியை காணிக்கையாக செலுத்த வேண்டும். மறுநாள் காலையில் எழுந்ததும் குளித்து முடித்துவிட்டு, லட்சுமி தேவியின் பாதத்தில் வைத்துள்ள வெற்றிலை பாக்கை பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், வீட்டில் பணம் பெருகும் என்று நம்பப்படுகிறது.
பரிகாரம் #2
பௌர்ணமி நாளின் இரவில் பசும்பால் மற்றும் அரிசி கொண்டு பாயாசத்தை செய்து, அதை இரவு முழுவதும் சந்திரனின் கதிர்கள் படும் இடத்தில் திறந்து வைக்க வேண்டும். இப்படி வைக்கும் போது சந்திரனின் கதிர்கள் அதில் படும். மறுநாள் காலையில் இந்த பாயாசத்தை வீட்டில் உள்ளோருடன் பகிர்ந்து சாப்பிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம், நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
பரிகாரம் #3
நீங்கள் கடன் தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் செல்வம் பெருக வேண்டுமா? அப்படியானால் புரட்டாசி மாத பௌர்ணமி இரவில் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யுங்கள்.
பரிகாரம் #4
பௌர்ணமி இரவு பூஜையின் போது லட்சுமி தேவிக்கு 5 சோளிகளை காணிக்கையாக செலுத்த வேண்டும். பூஜை செய்த பின், அந்த சோளிகளை ஒரு சிவப்பு துணியில் கட்டி, பணம் வைக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் பணம் பெருகும் என்பது நம்பிக்கை.
பரிகாரம் #5
பௌர்ணமி இரவு நேரத்தில் துளசி செடியின் முன் ஒரு நெய் தீபம் ஏற்றி துளசி செடியை 3 முறை வலம் வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் லட்சுமி தேவி சந்தோஷமடைந்து, முழு ஆசியை வழங்குவார். இதன் மூலம் வெற்றியும், செல்வமும் பெருகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
