Latest Updates
-
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
வக்ர சனி வலிமையாவதால் இன்று முதல் இந்த 4 ராசிகளுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்க போகுது..
Shani Vakri 2023: வேத ஜோதிடத்தின் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிமானாக கருதப்படுகிறார். கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் மற்றும் ஒருவரது வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்.
சனி ஒருமுறை ராசியை மாற்ற 2 1/2 ஆண்டுகள் ஆகும். 30 ஆண்டுகளுக்கு பின் தற்போது சனி பகவான் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் பலவீனமாக இருந்தார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வக்ர நிலையில் இருக்கும் சனி பகவான் வலிமையடைகிறார். இதனால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
குறிப்பாக 4 ராசிக்காரர்கள் வலிமையடையும் சனி பகவானால் அனைத்து காரியங்களிலும் வெற்றி காண்பார்கள் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காண்பார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிலையில் உள்ளார். இந்த வீட்டில் சனி பகவான் வலிமையடைவதால், இந்த ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கும் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி காண்பார்கள். மேலும் நாள்பட்ட நோயிலிருந்தும் விடுபடுவார்கள். குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவார்கள். எதிர்பாராத பணத்தைப் பெற வாய்ப்புள்ளது. மொத்தத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெற்றிருப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிலையில் உள்ளார். இந்த வீட்டில் சனி பகவான் வலிமையடைவதால், இனிமேல் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். இக்காலத்தில் மேற்கொள்ளும் அனைத்து காரியங்களிலும் நல்ல வெற்றியைக் காணக்கூடும். பண வரவு அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். முக்கியமாக நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும்.
மகரம்
மகர ராசியில் அதிபதி சனி பகவான். இந்த சனி பகவான் மகர ராசியின் 2 ஆவது வீட்டில் வக்ர நிலையில் உள்ளார். இந்த வீட்டில் தற்போது சனி வலிமையடைவதால், பல சாதகமான பலன்கள் கிடைக்கும். சனி பகவானின் முழு ஆசீர்வாதம் கிடைக்கும். இதனால் நிறைய பணம் கையில் சேரும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். எதிர்பாராத பண வரவைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிலையில் உள்ளார். இந்த வீட்டில் சனி பகவான் வலிமையடைவதால், இந்த ராசிக்காரர்களுக்கு இனிமேல் அதிர்ஷ்ட காலம் தான். தந்தையுடனான உறவு மேம்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியமாக அக்டோபருக்கு பிறகு இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பல வெற்றிகளைப் பெறுவார்கள். எதை தொட்டாலும் அதில் வெற்றி கிடைக்கும். விருப்பங்கள் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications