Latest Updates
-
18 ஆண்டுகளுக்கு பின் கடகம் செல்லும் கேது: இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிந்து அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
மணமணக்கும்.. தட்டப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை - மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா? - விளக்கும் மார்பகப் புற்றுநோய் நிபுணர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன? -
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க..
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்!
Fever Season Diet In Tamil: மழைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், காய்ச்சல் சீசனும் தொடங்கிவிட்டது. தற்போது எந்த மருத்துவமனைகளுக்கு சென்றாலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. முக்கியமாக சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் டெங்கு, இன்ப்ளூயன்ஸா காய்ச்சல் மட்டுமின்றி, டைபாய்டு காய்ச்சலாலும் நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி காய்ச்சல் வந்தாலே சரியாக சாப்பிட முடியாமல் பலரும் சிரமப்படுவார்கள்.

அதுமட்டுமின்றி, நிறைய பேருக்கு காய்ச்சல் நேரத்தில் கஞ்சியைத் தவிர, வேறு என்னவெல்லாம் சாப்பிடலாம் என்பது சரியாக தெரியாமல் உள்ளனர். மேலும் காய்ச்சலின் போது சத்தான ஒருசில உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது என்று தவறாக நினைத்து தவிர்த்தும் வருகின்றனர்.
இத்தகையவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் டாக்டர். பிரகாஷ்மூர்த்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம் மற்றும் எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது குறித்து பகிர்ந்துள்ளார். அந்த உணவுகள் எவையென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. அரிசி கஞ்சி
"காய்ச்சலின் போது மிகுந்த உடல் சோர்வுடன், எதையும் மென்று சாப்பிட முடியாத அளவு உடலில் தெம்பு இல்லாவிட்டால், அப்போது அரிசி கஞ்சியை சாப்பிடலாம். இது ஒரு சௌகரியமான உணவு மற்றும் எளிதில் செரிமானமாகக்கூடியது" என்று டாக்டர் கூறினார். எனவே உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்து, எதையும் சாப்பிடாமல் இருந்தால், அரிசி கஞ்சியை செய்து குடியுங்கள்.
2. இளநீர்
காய்ச்சலின் போது இளநீர் குடித்தால், ஜன்னி வந்துவிடும் என்று சிலர் சொல்லி குழப்புவார்கள். ஆனால் அது ஒரு வதந்தி. உண்மையில் இளநீரில் சோடியம், பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் இருப்பதால், காய்ச்சலின் போது குடிப்பது மிகவும் நல்லது. காய்ச்சலால், நீரிழப்பால் உடலில் எலக்ட்ரோலைட்டுகள் தான் அதிகம் குறையும். இந்நிலையில் இளநீர் குடித்தால், அருமையாக இருக்கும்.
3. சோடா பானங்கள் கூடாது
"காய்ச்சலின் போது பசி எடுக்கவில்லை என்று சிலர் கார்பனேட்டட் பானங்களை குடிக்கலாமா என்று கேட்பார்கள். நிச்சயம் இந்த பானத்தை குடிக்கக்கூடாது. ஒருவேளை குடித்தால், அது வயிற்றில் புண்களை தீவிரமாக்கி, அசிடிட்டியும், நீரிழப்பும் அதிகரித்துவிடும்" என்று டாக்டர் கூறினார்.
4. தயிர், மோர்
"காய்ச்சலின் போது தயிர், மோர் போன்றவற்றை சாப்பிடலாமா என்று கேட்டால், நிச்சயம் சாப்பிடலாம். தயிர், மோர் எல்லாம் அழற்சி உள்ளவர்கள் மட்டும் தான் தவிர்க்க வேண்டும். மற்றபடி, தயிரில் புரோபயோடிக்குகள் என்னும் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் உள்ளன. தற்போது டைபாய்டு காய்ச்சல் பலருக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த டைபாய்டு கிருமிகள் வயிற்றில் தான் குடிகொண்டிருக்கும். இந்நிலையில் தயிர், மோர் போன்றவற்றை எடுக்கும் போது, அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து, வயிற்றில் ஒரு சமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்பதால், காய்ச்சல் நேரத்தில் சாப்பிடலாம்" என்று டாக்டர் கூறினார்.
5. மிளகு, மஞ்சள் சேர்த்த சூப்
"நம் நாட்டில் உள்ள மசாலா பொருட்கள் ஒவ்வொன்றும் ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளன. அதுவும் மஞ்சள், மிளகு போன்றவற்றில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், இவற்றைக் கொண்டு வெஜிடேபிள் சூப், மட்டன், சூப், சிக்கன் சூப், காளான் சூப், நண்டு சூப் போன்றவற்றைக் குடிக்கலாம். ஏனெனில் இவற்றில் கொலாஜன் அதிகம் இருப்பதால், இவற்றை குடிக்கும் போது உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இது இன்ப்ளூயன்ஸா காய்ச்சல், தொண்டை கரகரப்பு போன்றவற்றில் இருந்து நல்ல நிவாரணத்தை அளிக்கும்" என்று டாக்டர் கூறினார்.
6. பப்பாளி இலைச்சாறு மற்றும் கிவி
"தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறையக்கூடும். இப்படி பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறையும் நபர்களுக்கு பப்பாளி இலைச்சாற்றினை குடிக்க கொடுக்கலாம் மற்றும் கிவி பழத்தை சாப்பிட கொடுக்கலாம். ஏனெனில் இவ்விரண்டுமே பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன" என்று டாக்டர் கூறினார்.
செய்யக்கூடாதவை
"சளி பிடித்திருக்கும் போது தேங்காய் எண்ணெயில் கற்பூரம்/சூடத்தை கலந்து சூடேற்றி குழந்தைகளின் மூக்கில் வைக்கலாமா என்றால், நிச்சயம் கூடாது. அப்படி செய்த பல குழந்தைகளுக்கு வலிப்பு வந்துள்ளது மற்றும் இது மிகப்பெரிய ஆபத்தான செயல். எனவே இதை அறவே தவிர்க்க வேண்டும்" என்று டாக்டர் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
