Latest Updates
-
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்து கோவில்கள் அனைத்தும் ஏன் எப்போதும் 12 மணிக்கு மேல் மூடப்படுகிறது தெரியுமா?
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
Javvarisi Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் தோசை பிரியர்களா? இதனால் அடிக்கடி உங்கள் வீட்டில் தோசை தான் செய்வீர்களா? அப்படியானால் எப்போதும் ஒரே மாதிரி தோசை சுடாமல், அவ்வப்போது வித்தியாசமான தோசையையும் ட்ரை செய்யுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் தோசைக்கு மாவு இல்லையா? மாவு அரைக்க மறந்துவிட்டீர்களா?

உங்கள் வீட்டில் ஜவ்வரிசி இருந்தால், அதைக் கொண்டு பஞ்சு போன்று தோசை சுட்டு சாப்பிடுங்கள். இந்த தோசை வழக்கமான தோசையை விட அட்டகாசமான சுவையில் இருக்கும். சொல்லப்போனால் ஒருமுறை இந்த தோசையை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி இந்த தோசையை செய்து கொடுக்கச் சொல்லி கேட்பார்கள்.
உங்களுக்கு இந்த ஜவ்வரிசி தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* ஜவ்வரிசி - 1/2 கப்
* கெட்டித் தயிர் - 1 கப்
அரைப்பதற்கு...
* இஞ்சி - 1 துண்டு
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* ரவை - 1/4 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
பிற பொருட்கள்..
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் ஜவ்வரிசியை எடுத்துக் கொண்டு,
அதில் 1 கப் கெட்டித் தயிரை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 8
மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இரவு தூங்கும் முன்பு இப்படி ஊற வைத்துக்
கொண்டால், காலையில் தோசை சுட சரியாக இருக்கும்.
* பின்னர் மறுநாள் காலையில் மிக்சர் ஜாரில் இஞ்சி, பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் ரவை மற்றும் அரிசி மாவை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்ததை எடுத்துக் கொண்டு, அதில் ஊற
வைத்த ஜவ்வரிசியை சேர்த்து நன்கு கிளறி, 1 கப் நீரை ஊற்றி சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். முக்கியமாக இந்த
தோசைக்கு மாவு நீர் போன்று இருக்கக்கூடாது, சற்று கெட்டியாகவே இருக்க
வேண்டும்.
* இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி
தடவி, கலந்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டியை ஊற்றி தேய்த்து, மேலே
சிறிது எண்ணெய் ஊற்றி, மூடி வைத்து 1 நிமிடம் வேற வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, தோசையை திருப்பிப் போட்டு வேக வைத்து
எடுத்தால், பஞ்சு போன்ற ஜவ்வரிசி தோசை தயார்.



Click it and Unblock the Notifications
