Latest Updates
-
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும்
சனி வக்ர நிவர்த்தி.. இந்த 4 ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Shani Margi 2023: ஜோதிடத்தில் ஒருவரது நல்ல மற்றும் கெட்ட செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கக்கூடியவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் கும்பம் மற்றும் மகரம் ஆகிய இரண்டு ராசிகளின் அதிபதியாவார். ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ராசியை மாற்ற இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதனால் சனியின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் சற்று ஆழமாக இருக்கும்.
ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் அனைத்துவிதமான சுகபோகங்களையும், ஆடம்பரங்களையும் பெறுவார். அதுவே மோசமான நிலையில் இருந்தால், வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிய வைப்பார்.

இப்படிப்பட்ட சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் ஜனவரி மாதத்தில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் கும்ப ராசியில் வக்ரமானார். இந்நிலையில் நவம்பர் மாதத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர் பாதையில் பயணிக்கவுள்ளார்.
இதனால் இதுவரை சனி பகவானால் மிகுந்த சிரமத்தை சந்தித்தவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெற்று, வாழ்க்கையே பிரகாசிக்கப் போகிறது. இப்போது சனி வக்ர நிவர்த்தி அடைவதால் நவம்பர் முதல் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதையும் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இதுவரை வேலையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த இந்த ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை பிரகாசிக்கப் போகிறது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது.
இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் தங்களின் புத்திசாலித்தனமான யோசனையால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் நவம்பர் முதல் இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். அதாவது சனி பகவானின் பரிபூர்ண அருள் கிடைக்கும். இதனால் வழக்கத்தை விட தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடனான புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு பதவி உயர்வுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நவம்பர் முதல் தொழிலில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் தொழிலில் பல பிரச்சனைகளை சந்தித்த துலாம் ராசிக்காரர்கள், நவம்பர் முதல் தொழிலில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கள் வேலையை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, நவம்பர் முதல் அருமையாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலை முன்பை விட மிகவும் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நவம்பர் முதல் அதிர்ஷ்டமானதாக இருக்கும். அனைத்து காரியங்களிலும் நல்ல வெற்றி கிடைக்கும். ஆனால் சிறிது கடினமாக உழைத்தால் மட்டுமே அந்த வெற்றியும் கிடைக்கும்.
நல்ல நிதி ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கும் நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும். அதுவும் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications