Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
சனி ஜெயந்தி 2023: மே 19 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கப் போகுது...
Shani Jayanti 2023: இந்து பஞ்சாங்கத்தின் படி, சனி பகவான் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் பிறந்தார். சனி பகவான் பிறந்த நாள் தான் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சனி ஜெயந்தி மே 19 ஆம் தேதி வருகிறது.
சனி ஜெயந்தி நாளில் ஒருவர் சனி பகவானை வழிபட்டு, அவருக்கு பிடித்த பொருட்களைப் படைத்து வணங்கினால், சனியின் அருளால் நற்பலன்கள் கிடைக்கும். ஜோதிடத்தின் படி, சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருபவர்.

எனவே ஒருவர் மற்றவருக்கு தீங்கிழைத்தால், அதன் பலனை நிச்சயம் சனி பகவான் வழங்குவார். இந்த சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி மாற்றும் போது அதன் சுப அல்லது அசுப தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது சனி பகவான் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். 2023 ஆம் ஆண்டின் சனி ஜெயந்தி நாளில் கும்ப ராசியில் இருக்கும் சனிபகவானால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தி நாளானது சிறப்பான பலன்களைத் தரவுள்ளது. சனியின் அருளால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல மாற்றம் ஏற்படப் போகிறது. முக்கியமாக இதுவரை கிடைக்காத பெற்றோரின் ஆதரவு இனி கிடைக்கப் போகிறது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தியானது நற்பலனை வாரி வழங்கவுள்ளது. இதுவரை சந்தித்து வந்த கஷ்டங்கள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். ஆக்கப்பூர்வமான வேலைகளில் இருப்பவர்கள் சனியின் அருளால் மகத்தான வெற்றியைக் காணப் போகிறார்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செல்வ செழிப்போடும் இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தியானது சாதகமான பலன்களைத் தரவுள்ளது. எந்த துறையில் பணிபுரிந்தாலும், அதில் மகத்தான வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் விரும்பிய இடத்தில் உயர் கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். தந்தையின் முழு ஆதரவு இனி கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்தாலம், சனி ஜெயந்தியால் நற்பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் நடத்தைகள் பணியிடத்தில் நல்ல பாராட்டைப் பெறும். நீங்கள் சனியின் அருளால் பலவிஷயங்களில் வெற்றி காண்பீர்கள். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தியானது நல்ல நிதி நன்மைகளை வாரி வழங்கப் போகிறது. என்ன தான் ஏழரை சனி நடந்தாலும், சனியின் அருளால் வாழ்வில் நிம்மதி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை நீங்கள் கடினமாக உழைத்து வந்தால், சனி ஜெயந்திக்கு பின் அதற்கான பலனும் மரியாதையும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

