Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
சனி பகவானின் அருளைப் பெற வேண்டுமா? அப்ப சனி ஜெயந்தி நாளில் உங்க ராசிப்படி இத மறக்காம செய்யுங்க...
Shani jayanti 2023: சூரிய பகவான் மற்றும் சாயாவிற்கு வைகாசி மாத அமாவாசை நாளில் மகனாகப் பிறந்தவர் தான் சனி பகவான். ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கும் சனி பகவானின் பிறந்த நாள் தான் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு சனி ஜெயந்தி நாளானது மே 19 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் கஜகேசரி யோகம், சச யோகம் மற்றும் சோபன் மகாயோகம் போன்றவை உருவாகியுள்ளன. இதனால் இந்நாளின் முக்கியத்தும் இன்னும் அதிகரித்துள்ளது.

சனி பகவானால் அதிகம் சிரமப்படுபவர்கள், சனி ஜெயந்தி நாளில் ஒருசில காரியங்களை செய்வதன் மூலம், அவரை மகிழ்வித்து, அவரின் ஆசியைப் பெற்று, அவரால் சந்திக்கும் பிரச்சனைகளை ஓரளவு குறைக்கலாம்.
சனி பகவானை மகிழ்ச்சி அடையச் செய்து அவரின் பரிபூர்ண அருளைப் பெற வேண்டுமானால், அவருக்கு பிடித்த பொருட்களை அவருக்கு படைப்பதோடு, ஒருசிலவற்றை தானமும் செய்யலாம். கீழே சனி பகவானின் அருளைப் பெற ஒவ்வொரு ராசிக்காரரும் என்ன செய்ய வேண்டும் என்பது கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் நல்லெண்ணெய் மற்றும் கருப்பு எள்ளு விதைகளை தானம் செய்வதன் மூலம் சனி பகவானின் ஆசியைப் பெறலாம். மேலும் இவர்கள் இந்நாளில் சுந்தரகாண்டம் மற்றும் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வதும் நல்லது. அதோடு ஏழை எளியோருக்கு உதவி செய்வது இன்னும் சிறப்பான பலனைத் தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளன்று சனி பகவானின் நாமத்தை சொல்வதோடு, சனி சாலிசாவை பாராயணம் செய்வது நல்லது. மேலும் இவர்கள் ஏழை மக்களுக்கு போர்வைகளை தானமாக வழங்கினால் சனி பகவானின் ஆசீர்வாதத்தைப் பெறலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் கருப்பு உளுத்தம் பருப்பை தானம் செய்வதோடு, கருப்பு நிற ஆடைகளை ஏழை மக்களுக்கு தானம் செய்வது மிகவும் நல்லது. அதோடு, இந்நாளில் யாரையும் அவமதித்து பேசுவதையோ, நடப்பதையோ தவிர்க்க வேண்டும். இதனால் சனியின் அருள் கிடைப்பதோடு, தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளன்று காலை, மால என இரண்டு வேளையும் தசரதன் எழுதிய சனி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். மேலும் கருப்பு உளுந்து, எள்ளு விதைகள், எண்ணெய் போன்றவற்றை ஏழை மக்களுக்கு தானம் செய்ய வேண்டும். இப்படி செய்வதனால் சனியின் தாக்கம் குறைவதோடு, சனியின் அருளால் உணவு மற்றும் பண பற்றாக்குறை ஏற்படாது இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் அனுமன் மற்றும் சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகளை செய்ய வேண்டும். அதோடு, நீலக்கல், இரும்பு, கருப்பு எள்ளு, நீர் நிரம்பிய பானை மற்றும் கருப்பு நிற குடையை தானமாக வழங்க வேண்டும். நீங்கள் ஏதேனும் புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், அனுமனை வணங்கியப் பின்னரே தொடங்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் விரதம் இருந்து சனி பகவான் கோவிலுக்கு காலை மற்றும் மாலை சென்று சனி மந்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும். மேலும் இவர்கள் ஏழை எளியோருக்கு காலணி, ஷூக்கள் போன்றவற்றை தானம் செய்ய வேண்டும். இதனால் சனி பகவான் அருளால் பிரச்சனைகள் அனைத்தும் குறையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளன்று எள்ளு மற்றும் எண்ணெயை சனி பகவானுக்கு படைக்க வேண்டும். அதோடு, கருப்பு நிற ஆடைகள் மற்றும் கருப்பு நிற எள்ளு விதைகளை தானம் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலும், தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளன்று சனி பகவான் மற்றும் அனுமனுக்கு சிறப்பு பூஜைகளை செய்து, அனுமன் சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும். அத்துடன் மாடுகள் மற்றும் நாய்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டும் மற்றும் ஏழை மக்களுக்கு இரும்பு பாத்திரங்களை தானம் செய்ய வேண்டும்.
தனுசு
சனி ஜெயந்தி நாளில் தனுசு ராசிக்காரர்கள் அரச மரத்தடியில் கடுகு எண்ணெய் விளக்கேற்றி,சனி பகவானை வழிபட வேண்டும். மேலும் மஞ்சள் நிற ஆடைகள் மற்றும் மஞ்சளை தானம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இதனால் மன அமைதி, செழிப்பு போன்றவற்றை அதிகரிப்பதோடு, பணப் பிரச்சனையில் இருந்து வடுவிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளன்று சனி பகவான் கோவிலுக்கு சென்று அவரை வழிபட வேண்டும். மேலும் எண்ணெயைப் படைத்து, சனி மந்திரம் மற்றும் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும். மாடுகளுக்கு தீவனம் கொடுப்பதன் மூலம் ஏழரை சனியின் தாக்கம் குறையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் அனுமன் மற்றும் சனி பகவானை வழிபட வேண்டும் மற்றும் பூந்தியை பிரசாதமாக வழங்க வேண்டும். எண்ணெய், இரும்பு பொருட்கள் மற்றும் தங்கத்தை தானமாக வழங்க வேண்டும். இதனால் ஏழரை சனியின் தாககத்தில் இருந்து விடுதலை கிடைககும்
மீனம்
மீன ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் சுந்தர காண்டம், பஜ்ரங் பான், சனி சாலிசா ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும். மேலும் மஞ்சள் நிற ஆடைகள் மற்றும் மஞ்சளை தானம் செய்ய வேண்டும். இப்படி செய்வதனால் நிலுவையில் உள்ள உங்களின் வேலைகள் அதிர்ஷ்டத்தின் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றி பெறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











