Latest Updates
-
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
சனி ஜெயந்தி அன்று மறந்தும் இந்த பொருட்களை வாங்கிடாதீங்க.. இல்ல துரதிர்ஷ்டம் உங்களை துரத்தும்..
Shani Jayanti 2023: சனி பகவான் நீதியின் கடவுளாகவும், ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருபவராகவும் கருதப்படுகிறார். சனி பகவானின் அருள் கிடைத்தால், ஆண்டியும் அரசனாவான். இந்த சனி பகவான் சூரிய பகவான் மற்றும் சாயாவிற்கு மகனாக வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் பிறந்தார்.
சனி பகவான் பிறந்தநாள் தான் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி மே மாதம் 19 ஆம் தேதி வருகிறது. அதுவும் வெள்ளிகிழமையில் வருகிறது. சனி பகவான் பிறந்த நாளில் இவரை வணங்கி, சிறப்பு பூஜைகளை செய்து வந்தால், சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

பொதுவாக சனி பகவானுக்கு உரிய நாளான சனிக்கிழமை மற்றும் சனி ஜெயந்தி நாளில் ஒருசில பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், சனியின் கோபத்திற்கு ஆளாகி, துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். இப்போது சனி ஜெயந்தி நாளில் எந்த பொருட்களை வாங்கக்கூடாது என்பதைக் காண்போம்.
இரும்பு பொருட்கள்
இரும்பு பொருட்கள் சனி தேவருடன் தொடர்புடையவை. எனவே இந்த இரும்புப் பொருட்களை சனி ஜெயந்தி நாளில் மட்டுமின்றி, சனிக்கிழமைகளிலும் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாகி, வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
உப்பு
என்ன தான் உப்பு மங்களகரமான பொருளாக கருதப்பட்டாலும், இந்த உப்பை சனிக்கிழமை மற்றும் சனி ஜெயந்தி நாளில் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை வாங்கினால், அது வீட்டில் கடனை அதிகரிப்பதோடு, நிதி நிலையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்.
கருப்பு காலணிகள்
சனி ஜெயந்தி நாளன்று கருப்பு நிற காலணிகளை ஒருபோதும் வாங்கக்கூடாது. ஒருவேளை வாங்கினால், அது அந்த வீட்டில் உள்ளோரின் பணியிடத்தில் பலவிதமானபிரச்சனைகளை சந்திக்க வைப்பதோடு, வேலையில் வெற்றி காண முடியாமல் தடுக்கும்.
கருப்பு நிற எள்ளு விதைகள்
சனி பகவானுக்கு எள்ளு விதைகளை படைப்பது நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் அந்த கருப்பு நிற எள்ளை சனி ஜெயந்தி நாளில் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொரு வேலையிலும் தடைகளையும், இடையூறுகளையும் சந்திக்க நேரிடும். எனவே எள்ளு விதைகளை வாங்குவதைத் தவிர்த்திடுங்கள்.
கடுகு எண்ணெய்
சனி பகவானுக்கு உரிய சனிக்கிழமை மற்றும் சனி ஜெயந்தி நாளில் கடுகு எண்ணெயை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை வாங்கினால், அது அந்த வீட்டில் பல பிரச்சனைகளை கொண்டு வரும் என்பது நம்பிக்கை. எனவே கடுகு எண்ணெயை மறந்தும் சனி ஜெயந்தி நாளில் வாங்கிவிடாதீர்கள்.



Click it and Unblock the Notifications