Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
சனி அமாவாசையான இன்னிக்கு மறக்காம இத செய்யுங்க.. சனி பகவானின் அருளும் கிடைக்கும்.. வாழ்க்கையும் செழிக்கும்...
Shani Amavasya 2025: இந்து மதத்தில் சனி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்நாளில் மேற்கொள்ளும் வழிபாடுகளும், தானங்களும் சனி பகவானின் ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தருவதாக நம்பப்படுகிறது. சனிக்கிழமைகளில் அமாவாசை வருவதால், அது சனி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.
பஞ்சாங்கத்தின் படி, இந்த ஆண்டின் பங்குனி மாதத்தில் வரும் அமாவாசை மார்ச் 28 ஆம் தேதி இரவு தொடங்கு மார்ச் 29 ஆம் தேதி மாலை வரை நீடித்திருக்கும். அதுவும் இந்த அமாவாசை சனிக்கிழமையில் வருவதால், இந்த சனி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்த சனி அமாவாசை நாளில் ஒருசில விஷயங்களை செய்வதன் மூலம், சனி தோஷம் குறைவதோடு, வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இன்று சனி அமாவாசை என்பதால், எந்த மாதிரியான விஷயங்களை ஒருவர் மேற்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம். அதைப் பின்பற்றி நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
சனி பகவானை வணங்கவும்
சனி அமாவாசை நாளானது சனி பகவானை வணங்க ஏற்ற நாளாகும். இந்நாளில் சனி பகவானுக்கு கடுகு எண்ணெயை வழங்கி வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. மேலும் இந்நாளில் கருப்பு எள்ளு, கருப்பு உளுத்தம் பருப்பு, இரும்பு பொருட்கள் போன்றவற்றை தானம் செய்வதன் மூலம், சனி பகவானின் மகிழ்ச்சி அடையச் செய்யலாம். முக்கியமாக இந்த நாளில் சனி பகவானுக்கு விளக்கேற்றி வழிபடும் போது, 'ஓம் சனாய்ச்சராய நமஹ' என்னும் மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
அரச மரத்தை வணங்கவும்
சனிக்கிழமைகளில் அரச மரத்தை வழிபடுவதன் மூலம் சனி பகவானின் ஆசியை எளிதில் பெறலாம். அதுவும் இந்நாளில் அரச மரத்திற்கு நீரை ஊற்றி, அதன் முன் ஒரு கடுகு எண்ணெய் விளக்கு ஏற்றி, அந்த மரத்தை 7 முறை சுற்றி வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக நம்பப்படுகிறது.
அனுமனை வழிபடவும்
சனி பகவானின் ஆசியை பெற விரும்பினால் அனுமனை வழிபடுங்கள். ஏனெனில் அனுமன் சனி பகவானின் நண்பர் மற்றும் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர். எனவே சனி அமாவாசை நாளில் அனுமனை வணங்கி அனுமன் சாலிசாவை பாராயணம் செய்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். அதோடு அனுமனுக்கு வெல்லம், பருப்புக்களை படைத்து வழிபட்டு, ஏழைகளுக்கு பிரசாதமாக கொடுங்கள். மேலும் அனுமன் கோவிலுக்கு சென்று தவறாமல் வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.
சனி மந்திரத்தை சொல்லவும்
ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என சனியில் பிடியில் சிக்கி வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள், சனி அமாவாசை நாளில் சனி யந்திரத்தை நிறுவி, வழிபாடு செய்யுங்கள். அதுவும் 'ஓம் பிராம் ப்ரீம் ப்ரோம் சஹ் ஷனைச்சராய நமஹ' என்ற மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். இப்படி இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம் சனியின் தீய பார்வையின் தாக்கம் குறைந்து, நல்ல பலன்களைப் பெறத் தொடங்குவீர்கள்.
இல்லாதவர்களுக்கு உதவவும்
சனி அமாவாசை நாளன்று ஏழை எளியோருக்கும், இல்லாதவர்களுக்கும் உதவுவது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. அதுவும் உணவு தானம் செய்வது, தானியங்களை தானம் செய்வது, பசுக்களுக்கு தீவனம் அல்லது பழங்களைக் கொடுப்பது போன்ற செயல்கள் மிகவும் புனிதமானதாகும். இப்படி செய்வதன் மூலம் ஒரு புண்ணியம் அதிகரிக்கும். அதோடு சனி பகவானின் அருளையும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications