Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள சடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காரங்க மே வரை கவனமா இருக்கணும்..
Shadastak Yog In Aries After 18 Years: நவகிரகங்களில் நிழல் கிரகமான கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். அதேப் போல் மீண்டும் அதே ராசிக்கு வர சுமார் 18 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோர் 30 ஆம் தேதி கேது துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைந்தார். இந்த ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை இருப்பார்.
அதே வேளையில் தேவர்களின் குருவான குரு பகவான மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் குரு கேதுவில் இருந்து 8 ஆவது வீட்டிலும், கேது, குருவிடமிருந்து 6 ஆவது வீட்டிலும் உள்ளார். இதனால் சடாஷ்டக யோகம் என்ற அசுப யோகம் உருவாகியுள்ளது. இந்த அசுப யோகம் மே 01 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

ஏனெனில் இந்நாளில் குரு ரிஷப ராசிக்கு செல்லவுள்ளார். மேஷ ராசியில் உருவாகியுள்ள இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருந்தாலும், சிலர் கவனமாக இருக்க வேண்டும். இப்போது சடாஷ்டக யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
சடாஷ்டக யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் மே வரை கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் பல சவால்கள் சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளால் அதிகம் சிரமப்படுவீர்கள். கடன் இக்காலத்தில் அதிகமாகக்கூடும். மேலும் அடிக்கடி நீதிமன்ற வழக்குகளில் சிக்குவீர்கள். குடும்பத்தில் பிரச்சனைகள் மற்றும் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சடாஷ்டக யோகத்தால் மே மாதம் வரை சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் 10 ஆவது வீட்டில் இந்த யோகம் உருவாகியிருப்பதால், கேதுவால் நற்பலனைத் தர முடியாது. இக்காலத்தில் உடன் பிறந்தவர்களுடனான உறவு மோசமடையும். மனம் விட்டு வெளிப்படையாக பேசாமல் இருப்பதால், உங்கள் உறவுகள் மோசமடையக்கூடும். குடும்பத்தாருடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவீர்கள். பணிபுரிபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேலையை இழக்க நேரிடும். முக்கியமாக எதிரிகளிடம் மே மாதம் வரை சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சடாஷ்டக யோகமானது பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் தடைகளையும், சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். இந்த யோக காலத்தில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காண முடியாது. அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், அதில் தடைகளை சந்திக்கக்கூடும். வியாபாரிகள் எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பும் நன்கு யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications