Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஷ்ராவண மாதத்தில் வரும் வெள்ளிக்கிழையில் இதை செய்யுங்கள்.. வீட்டில் செல்வம் பெருகும்..
இந்து மரபுகளின்படி, ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஆனால் ஷ்ரவணம் என்பது புராணங்களில் இருந்து வரும் ஒரு பாரம்பரிய முறையாகும்.. இந்த இந்த ஷ்ராவண மாதத்தில், சிவபெருமானுக்கும் லட்சுமி தேவிக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கும்..
அதில் குறிப்பாக ஷ்ராவண வெள்ளிக்கிழமையில், பெண்கள் தங்களது கணவனுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்க லட்சுமி தேவியிடம் மிகுந்த பக்தியுடன் பிரார்த்தனை செய்கிறார்கள்.ஆனால் எப்படி பூஜை செய்வது என்பதில் அவர்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன. அதனால் வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

ஷ்ராவண வெள்ளிக்கிழமை பூஜை
ஷ்ரவண வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து வீடுகளை சுத்தம் செய்துவிட்டு குளித்து விட வேண்டும்.. பின்னர் வீட்டில் உள்ள சாமி படங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த புகைப்படங்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் பூச வேண்டும். பின்னர் மலர்களால் அலங்கரிக்கவும். வீட்டின் கதவை பச்சை மாவிலைகளால் அலங்கரிக்க வேண்டும். அதன் பிறகு வீட்டில் பூஜை மாலை நேரத்தில் செய்ய வேண்டும்.
அதில் குறிப்பாக பெண்கள் ஷ்ரவண மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமையை எதிர்பார்த்து இருப்பார்கள்.. அதாவது ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை.. காரணம் அன்றைய தினம் வரலக்ஷ்மி தேவியை வழிபட்டால் ஆரோக்கியமும், செல்வமும் உண்டாகும் என்பது நம்பிக்கை. அதனால்தான் அன்றைய தினம் வரலட்சுமி தேவிக்கு பெண்கள் சிறப்பு பூஜை செய்கின்றனர்.
வெள்ளிக்கிழமையில் பூஜை செய்து விட்டு, பஞ்சாம்ருதத்துடன் வீட்டிற்கு அருகில் உள்ள பெண்களையும், நெருங்கிய நண்பர்களையும் வீட்டிற்கு வரவழைத்து, சுமங்கலி பூஜை செய்ய வேண்டும். அதாவது மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்ய வேண்டும். மேலும், வரும் பெண்களை சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து வரவேற்க வேண்டும். இப்படி ஷ்ராவண மாத்த்தில் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமிக்கு சிறப்பு பூஜைகள் செய்வது அஷ்ட ஐஸ்வர்யத்தையும் ஆண்டு முழுவதும் நீண்ட ஆயுளையும் நமக்கும் நம் வீட்டில் உள்ள அனைவருக்கும் பெற்று தரும்.
அதனால் பெண்கள் ஷ்ரவண வெள்ளிக்கிழமையில் விரதம் இருக்க வேண்டும். லட்சுமி தேவி பூஜை முடியும் வரை பயபக்தியுடன் இருங்கள். அதன் பிறகு காலை உணவு மற்றும் பிரசாதம் சாப்பிடலாம். அன்று மாலை வரை லட்சுமி தேவியின் புத்தகங்கள் அல்லது கதைகளை கேட்பது மிகவும் நல்லது. மேலும் வெள்ளிகிழமைய அன்று முடிந்தால் கோவிலுக்கு சென்று சிவனையும் அம்மனையும் தரிசனம் செய்து வர நினைத்தது அனைத்தும் நடக்கும் என்பது நம்பிக்கை.. அதனால் வெள்ளிக்கிழமைகளை தவறவிடாமல் இந்த விரதங்களை கடைப்பிடிப்பது நல்லது..



Click it and Unblock the Notifications