Latest Updates
-
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
30 ஆண்டுகளுக்கு பின் சனி, சுக்கிரனால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணம் அதிகம் சேரும்..
Saturn Venus Made Kendra Trikona Rajyoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இயக்கங்களின் போது சில சமயங்களில் கிரக சேர்க்கைகள் உருவாவதுண்டு. அப்படி நிகழும் கிரக சேர்க்கைகளால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். இந்த யோகங்களின் தாக்கமானது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் ஆடம்பரத்திற்கும், செல்வத்திற்கும் காரணியாக கருதப்படும் சுக்கிரன் அக்டோபர் 02 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்தார். சுக்கிரன் சிம்ம ராசிக்குள் நுழைந்ததாலும், சனி பகவான் கும்ப ராசியில் இருப்பதாலும், 30 ஆண்டுகளுக்கு பின் சமசப்தம மற்றும் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகமானது ஒரு சுப யோகம். இந்த யோகத்தால் ஒருவரது நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் திடீரென்று நிதி நிலையில் உயர்வைக் காண்பதோடு, வாழ்வில் முன்னேற்றத்தையும், நல்ல புகழையும் காண்பார்கள். இப்போது கேந்திர திரிகோண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த கேந்திர திரிகோண ராஜயோகத்தால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கி வராமல் இருந்த பணம், இந்த யோக காலத்தில் கைக்கு வரும். வணிகர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகத்தால் இதுவரை தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். பண பரிவர்த்தனைகளால் நல்ல ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் வேலை மற்றும் தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது எதிர்பாராத பல நல்ல பலன்களைத் தரும். புத்திசாலித்தனத்தால் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். உங்களின் நீண்ட நாள் கடின உழைப்பிற்கான பலன் இந்த காலகட்டத்தில் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணத்தைப் பெறக்கூடும். தொழில் ரீதியாக, இந்த யோகமானது நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் தரும். உங்களின் ஆசைகள் இந்த யோக காலத்தில் நிறைவேறக்கூடும். முக்கியமாக சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications